ஒன்றாயிருத்தல் Jeffersonville, Indiana, USA 62-0211 1நன்றி, சகோ. ஆர்மன், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம் நண்பர்களே. மறுபடியுமாக இன்று காலை இங்கு கூடாரத்தில் வந்துள்ளது நல்லது. நான் உள்ளே நுழைந்தபோது, அந்நிய பாஷை பேசுதல், அதற்கு அர்த்தம் உரைத்தல் என்பவைகளின் வாயிலாக தீர்க்கதரிசனம் சென்று கொண்டிருப்பதை பின்னால் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த அறை நிறைந்திருந்தது. நான் ஜனங்களிடம், “இந்த மனிதன் யாரென்று தெரியவில்லையே, இவரிடம் நான் ஒன்றும் கூறவில்லையே” என்றேன். அது சகோ. ஹிக்கின்பாத்தம், நான் அவரை சரியாக அடையாளம் கண்டு கொண்டால். அவருடன் கைகுலுக்கி நீண்ட நாட்களாகிவிட்டது. இன்று காலை அவர் எதை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தாரோ, அதன் பேரில் தான் நான் பேசப்போகிறேன். அது அவருக்குத் தெரியாது. நான் எதைக் குறித்து பேசப் போகின்றேன் என்று சிறிது நேரம் முன்பு வரைக்கும் நானும் கூட அறிந்திருக்கவில்லை. அவர் என்ன அப்பொழுது கூறினாரோ அதேதான். எனவே நாம் கர்த்தருடைய நாமத்தில், அவருடைய பாதுகாக்கும் செட்டையின் கீழ் கூடியுள்ளோம் என்பதை அறிந்திருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம். 2அநேகர் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். இடம் ஜனங்களால் நிறைந்து நெருக்கமாயுள்ளது. இவ்வாறு காண்பது நமக்குப் பிரியமல்ல. எங்களால் முடிந்தவரை, வேகமாக இதை விரிவிபடுத்தி, பெரிய கூடாரமாகச் செய்யப் போகின்றோம். இப்பொழுது வேகமாக, பீனிக்ஸிலிருந்து இந்த அறிக்கையை வெளியிட விரும்புகிறேன். சென்ற ஞாயிறு இரவு இங்கு நான் வந்திருந்த போது, இராப்போஜனம் (Communion) என்னும் பொருளின் பேரில் பேசினேன். இராப்போஜன ஆராதனைக்கு முன்பு, இராப்போஜனம் என்பது அப்பம் உட்கொள்ளுதல் அல்ல. “Commune” என்னும் ஆங்கிலச் சொல், “சம்பாஷித்தல், பதிலுரைத்தல், ஒருவருடன் சம்பாஷித்தல்” என்று பொருள்படும். இன்று காலை, என் பிரசங்கம் நீண்டு போனால், உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் இருக்கைகளைத் தருவீர்களானால், அது மெச்சத் தக்க செயலாயிருக்கும். அவர்களும் சிறிது உட்கார்ந்து கொள்ளட்டும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தைக் குறித்து எனக்குக் கவலையாயுள்ளது. நான், மிக, மிகக் கவலை கொண்டிருக்கிறேன். நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை நான் காணும்போது, எனக்குள் ஏதோ ஒன்று கலக்கமடைகிறது. நான் போதிய நேரம் எடுத்துக் கொண்டு முயற்சி செய்து... 3இன்று காலை செய்தியாக, நான் “ஒன்றாயிருத்தல்” என்னும் பொருளின் பேரில் பேசப் போகின்றேன். நான் போதிய நேரம் எடுத்துக் கொண்டு... எனக்குத் தெரிந்த வரைக்கும், அதை பரிபூரணமாக உங்கள் முன்னிலையில் விளக்க முயற்சி செய்யப் போகின்றேன். அதற்கென கூடியுள்ள உங்கள் ஜெபங்களை ஆசிக்கிறேன். இப்பொழுது, நீங்கள் வேதாகமம் வைத்திருந்து, என்னுடன் கூட படிக்க விரும்பினால், எபிரேயர் முதலாம் அதிகாரத்துக்கு வேதாகமத்தை திருப்புங்கள். நான் எபிரேயர் முதலாம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களைப் படித்த பிறகு; ஆதியாகமம் 1:26, 27-ம் வசனங்களைப் படித்து இவ்விரண்டு பாகங்களையும் இணைக்க விரும்புகிறேன். தேவன் ஒரு மனிதனுக்கு உதவி செய்யாமல், எந்த மனிதனும் சொல்லத் தகுந்த எதையும் சொல்ல முடியாது. இன்று காலை நான் அளிக்கவிருக்கும் ஜனங்களும் தேவனும் ஒன்றாயிருத்தல் என்னும் பொருளுக்கும் அது பொருந்தும். இப்பொழுது நாம் எபிரேயர் முதலாம் அதிகாரத்திலுள்ள இதைப் படிப்போம். பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். எபி. 1:1-3 இப்பொழுது ஆதியாகமம் முதலாம் அதிகாரம், 27-ம் வசனம், 26-ம், 27-ம் வசனங்களைப் படிக்கிறேன். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் ஆதி. 1: 26-27 4இப்பொழுது நாம் ஜெபிக்கும்போது சிறிது நேரம் தலை வணங்குவோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் அநேக விண்ணப்பங்கள் இருக்கும் என்பது உறுதி. எனவே நம்மில் விண்ணப்பம் உள்ளவர்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி; ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கு ஏதோ ஒன்றுண்டு என்பதை தெரியப்படுத்துவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவன் அருளுவாராக... கர்த்தாவே, இந்த கூடாரத்தின் கூரையின் கீழ் நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். எங்கள் மேல் கூரை உள்ளதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒன்று கூடியுள்ளது இதைக் காட்டிலும் மேலான நோக்கத்திற்காகவே. தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி, நாங்கள் சர்வவல்லவரின் செட்டைகளின் கீழ் ஒன்று கூடியுள்ளோம் என்று உணருகிறோம். அவர், கோழி தன் குஞ்சுகளை மறைத்துக் கொள்ளும் வண்ணமாக, நாங்கள் எவைகளினின்று அவர் எங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ, அவை அனைத்தினின்றும் எங்களைப் பாதுகாத்து, அவர் எங்கள் மேல் பறந்து, எங்களைப் போஷித்து. சரீரப் பிரகாரமாகவும் ஆத்துமப் பிரகாரமாகவும் அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்குத் தந்து, இவ்வுலகில் நடப்பதற்கு அவசியமான பெலனையும், பசியுற்றோருக்கு தேவனுடைய வார்த்தையை கொண்டு செல்வதற்கு அவசியமான பரிசுத்த ஆவியின் வல்லமையையும் அருளிச் செய்து, தேவனுடைய வார்த்தையை எங்கள் உதடுகளிலும் எங்கள் இருதயங்களிலும் பெற்றவர்களாய், புதிதான அபிஷேகத் தைலத்துடன் இவ்விடம் விட்டுச் சென்று, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாளைக் குறித்தும், இக்காலத்தின் நிலையைக் குறித்தும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அருள் புரிவாராக. தேவனே, நாங்கள் உம்மை முழுவதுமாக நம்பியிருக்கிறோம். போவதற்கு வேறெந்த இடமும் எவருக்கும் இல்லை. அன்றொரு நாள் இயேசு, “நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களோ? என்று கேட்டபோது, பேதுருவுக்கு எழுந்த உணர்ச்சி போன்ற உணர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம். அவன், “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் மாத்திரமே உண்டு” என்று விடையளித்தான். ஆகையால் தான் இன்று காலையில் உம்முடைய நாமத்தில் நாங்கள் கூடி வந்திருக்கிறோம், ஏனெனில் உம்மிடத்தில் மாத்திரம் தான் நித்திய ஜீவ வசனங்கள் உள்ளன. இதை எங்கள் ஒவ்வொருவருக்கும் இன்று தத்ரூபமாக்கித் தந்து எங்கள் இருதயங்கள் எங்களுக்குள்ளே கொழுந்து விட்டு எரியும்படி செய்வீராக. எங்கள் ஆத்துமாக்கள் பெலனடைந்து, எங்கள் சரீரங்கள் சுகம் பெற்று, எங்கள் ஆவிகள் சுகம் பெற்று, எங்கள் ஆத்துமாக்கள் புத்துணர்ச்சி பெற்று, தேவன் விரும்பும் ரூபத்தில் அவை சிருஷ்டிக்கப்படுவதாக. 5பிதாவே, அறைகளிலும், சுவர்களைச் சுற்றிலும், தாழ்வாரங்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருப்பவர்களுக்கு நீர் பெலனை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இந்த ஒலிநாடா வெவ்வேறு நாடுகளுக்கும் பூமியில் வாழும் வெவ்வேறு ஜாதிகளுக்கும் செல்லவிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தேவனே, நாங்கள் உம்மையே முழுவதுமாய் நம்பியிருக்கிறோம். எங்களுக்கு பெலனையும், வார்த்தையையும், அபிஷேகத்தையும், அருளிச் செய்து இந்த மணி நேரத்துக்கு அது எவ்விதமாய் இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அதே விதமாக இதை அமையச் செய்வீராக. இப்பொழுது எங்களையும், எங்கள் செவிகளையும், எங்கள் குரலையும், எங்கள் கவனத்தையும், எங்களுக்குள்ள எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். நீரே எங்களுக்குள் அசைவாடி, எங்கள் மூலம் கிரியை செய்து, உமது மகத்தான பிரசன்னத்தை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவீராக. இதை உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 6“ஒன்றாயிருத்தல்”, என்னும் சொல் “ஒருவருடன் ஒன்றாக இருப்பது” என்று பொருள்படும். ஒன்றாயிருத்தல், “ஒன்று சேர்தல்”, இது மிகவும் முக்கியமான பொருள். என்னால் இதற்கு தரக் கூடிய கவனத்தைக் காட்டிலும் இது அதிக கவனம் பெறத் தகுதி வாய்ந்தது - பூமியிலுள்ள எவருமே இதற்கு தரக் கூடிய கவனத்தைக் காட்டிலும், இதைக் குறித்த என் அபிப்பிராயத்தையும், தேவன் நமக்குக் கொடுக்க சித்தம் கொண்டிருப்பதையும் நான் எடுத்துரைக்க விரும்புகிறேன். இது போதிக்கும் உபதேசம். இந்த ஒலிநாடாவைக் கேட்கும் சகோதரர்களுக்கு இது மனதுக்கு வேதனையுண்டாக்கும் ஒன்றாக அமைந்திராமல், இது அவர்களை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் ஒன்றாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இதை ஜெப சிந்தையுடனும் கவனமாகவும் ஆராய்ந்து, தேவனுடைய வார்த்தை என்னும் தராசில் இதை நிறுத்துப் பார்த்து. இது தேவனுடையதா இல்லையாவென்று அறிந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். நாம் அவ்விதமாகவே காரியங்களை எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையுடன் நிறுத்துப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று நம்புகிறேன். ஏனெனில் வார்த்தை ஒன்று மாத்திரமே நிலைநிற்கக் கூடியது. “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை”, என்றார் இயேசு. ஆகையால் தான் அதை நான் விசுவாசிக்கிறேன், அது தேவனுடைய திட்டமென்று நான் விசுவாசிக்கிறேன். அது வார்த்தையாக எழுதப்பட்டுள்ள தேவனுடைய முடிவு பெற்ற கிரியை என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே அந்த வார்த்தைக்கு முரணாயுள்ள எதுவுமே தேவனாக, தேவனுடைய திட்டமாக இருக்க முடியாது. அது தேவனுடைய திட்டமாயுள்ளதென்று நான் விசுவாசிக்கிறேன். வார்த்தையிலுள்ள தேவனுடைய ஆவி, வார்த்தையை ஜீவிக்கச் செய்து, அது செயல்படும்படி செய்கிறது. அந்த வார்த்தை உயிர்பெறச் செய்கிறது. ஒரு விதையைப் போல். 7இப்பொழுது, ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதி மனிதனும், ஆதி ஸ்திரீயும் தேவனுடன் பரிபூரணமாக இசைவு கொண்டிருந்தனர். எனவே தேவன், தாம் விரும்பின எந்த நேரத்திலும் இறங்கி வந்து ஆதாம் ஏவாள் செவி கேட்க பேச முடிந்தது. அது பரிபூரணமான ஒன்றாயிருத்தல்; தேவனும் அவருடைய சிருஷ்டியும், தேவன் ஆதாமுடனும் ஏவாளுடனும், செவி கேட்க உதடுகளால் பேசுதல், அவர்கள் தேவனுடன் பரிபூரணமாக இசைவு கொண்டிருந்ததன் விளைவாக தேவனுடன் ஒன்றாக இணைந்திருந்தனர். தேவனும் அவருடைய குடும்பமும் ஒன்றாயிருந்தது. எந்த மனிதனும் அவனுடைய குடும்பமும் சரியான, நல்ல, கண்ணியமான, கீழ்படிந்த குடும்பம்; ஒருவடொருவர் ஒன்றாயுள்ளனர். குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும் ஏதாகிலும் இருக்குமானால், அது சரியல்ல. அப்பொழுது குடும்பம் எங்காவது உடைந்து போகும். அவர்கள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டும். தகப்பன் தாயுடனும், தாய் தகப்பனுடனும், பிள்ளைகள் பெற்றோருடனும், பெற்றோர் பிள்ளைகளுடனும் இசைவு கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் காணும்போது, அது ஒரு அழகிய காட்சியை உங்களுக்கு அளிக்கிறது. 8அது தேவனுடைய நோக்கமாயுள்ளது. பிதா, உன்னதர் என்னும் முறையில், தமது குடும்பத்துடன், பூமியிலிருந்த தமது குடும்பமாகிய ஆதாம் ஏவாளுடன் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது. அவர்கள் தேவனுடன் ஒன்றாயிருக்கக் கூடிய ஒரே வழி, தேவனுடைய சுபாவம் அவர்களுக்குள் இருந்த காரணத்தினாலேயே. எனவே அந்த தேவனுடைய சுபாவம் அவர்கள் இருவரையும் இணைத்து, இவர்களை தேவனுடன் இணைத்தது. அவர்கள் எல்லோரும் ஒன்றாயினர். அது ஒரு அழகிய காட்சியல்லவா, தேவனும் அவருடைய குடும்பமும், தேவன் எல்லோருக்கும் மேலாக உன்னதராயுள்ளது! மரணம், துயரம், மன வேதனை எதுவுமே இருக்கவில்லை; சொல்லி முடியாத சந்தோஷம், வியரதிப்பட முடியாது. மனவேதனைப்பட முடியாது, தேவனுடன் ஒன்றாயிருத்தல்! என்னே ஒரு காட்சி! இணைந்திருக்கிறீர்கள். ஓ, சற்று கழிந்து நான் மறுபடியும் அதற்கு வர விரும்புகிறேன். நித்தியமான தேவனுடன் நித்திய காலமாக, பரிபூரணமாக, அவருடன் இசைவாய் இணைந்து, பரிபூரணமாக ஒன்றாய் இணைந்து, தேவனும் அவருடைய சபையும், இருவருமே ஒன்றாய் இணைந்திருத்தல். ஏனெனில் தேவனின் அதே சுபாவம் இந்த ஜனங்களுக்குள்ளும் இருந்தது. எனவே அவர்கள் செய்தவை யாவும், தேவனுடைய வரிசையில் அமைந்திருந்தது, தேவன் அவர்களுடன் இணைந்திருந்து ஒன்றாயிருந்தார். 9இயேசு, யோவான்: 17-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் இவ்வாறு ஜெபம் செய்தார், ஞாயிறு பள்ளி வேத வசனங்களைக் குறித்துக் கொள்பவர்களாகிய உங்களுக்கு. இன்று காலை என்னிடம் அநேக வேத வசனங்கள் உள்ளன. யோவான்: 17:11. அவரும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல், சபையும் அவரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று இயேசு ஜெபம் செய்தார். அவரும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல் சபையும், கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர் என்னும் முறையில் ஒன்றாக, ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்று அவர் ஜெபித்தார். அவர் பிதாவிலும்... பிதா அவரிலும், அவர் நம்மிலும், நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறதை அந்நாளிலே நாம் அறிந்து கொள்வோம். தேவன் தமது சபையில் இருந்து, ஒவ்வொரு அங்கத்தினரும் ஒருவரோடொருவர் இசைவாக இணைக்கப்பட்டு தேவனுடன் இணைந்திருப்பதைக் காண்பது எத்தகைய இணைப்பாய், ஒன்றாயிருத்தலாக இருக்கும்! அந்த சபைக்காகத் தான் இயேசு வருகிறார். அவருடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப்படும்போது, நாம் ஒன்றாயிருப்போம். 10தேவன் தமது ஜனங்களில் ஒன்றாயிருப்பது தான், தேவன், தமக்கென்றும் தமது சபைக்கென்றும் நியமித்துள்ள ஐக்கியத்தின் அடிப்படையாகும். அது ஒன்று மாத்திரமே ஐக்கியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை நீங்கள் பெறக் கூடிய ஒரே வழி; அவருடன் சதாகாலங்களிலும் ஒன்றாக இணைந்திருப்பதன் மூலமே. நீங்கள் உங்கள் கணவருடன் இணையும் போது, அது மரணம் வரைக்கும். நீங்கள் அளிக்கும் உறுதிமொழியாகும். அப்படியிருக்க நீங்கள் தேவனுடன் இணையும் போது, அது தான் சபை கிறிஸ்துவுடன் இணைவது. அது மரணம் நம்மை பிரிக்குமளவும் என்பதாக உள்ளது. நீங்கள் பாவம் செய்யாதவர்களாய், தவறு எதுவும் செய்யாதிருக்கும் பட்சத்தில், நீங்கள் நித்திய காலமாக தேவனுடன் இணைந்திருப்பீர்கள். மரணம் மாத்திரமே உங்களை தேவனிடமிருந்து பிரிக்க முடியும், சரீரப் பிரகாரமான மரணம் அல்ல, பாவமாகிய மரணம். பாவம் என்பது மரணம், அது உங்களை தேவனிடமிருந்து பிரிக்கிறது. எனவே அவருடைய ஆவியின் வல்லமையில் அவருடன் இணைந்திருப்பதென்பது நித்திய ஜீவனாகும். நீங்கள் நித்திய காலமாய் தேவனுடன், ஓ, சிறிது நேரம் கழித்து மறுபடியுமாய் அதனூடாக செல்ல விரும்புகிறேன். நித்தியமான தேவனோடு நித்தியமாய் ஐக்கியமாகுதல், கச்சிதமாய் அவரோடு இசைந்திருத்தல் அவரோடு சரியாய் ஒன்றினைந்து, அதுவே சபை, தேவனும் அவருடைய சபையும் ஒன்றுதான், ஒன்றினைந்தது. 11ஏவாள் ஆதாமுடன் இணைந்திருந்தபோது, அவள் அவனுடைய பாகமானாள் என்பதை நீங்கள் காணலாம். நீங்கள் ஆதியாகமம்: 1: 27-ல் கவனித்தீர்களா? அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். மனிதன்... பெண்ணின் ஆவியையும் ஆணின் ஆவியையும் ஒருங்கே பெற்றவனாய் ஆணும் பெண்ணுமாக இருந்தான். பிறகு தேவன் அவனுடைய விலாவிலிருந்து ஒரு விலாவெலும்பை எடுத்தார். பெண்ணின் சரீர பாகம் ஒரு உபபொருள் என்றும், ஆவி அப்படியல்ல என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? பெண்ணின் சரீர பாகம் ஒரு உபபொருள். சிருஷ்டிப்பு முடிவடைந்த பின்பு, தேவன் ஆதாமின் விலாவிலிருந்து ஒரு விலாவெலும்பை எடுத்து ஸ்திரீயை உண்டாக்கினார். ஆனால் ஆவியை அல்ல. ஆவி ஆதாமின் ஒரு பாகமாக இருந்தது. ஏனெனில் ஆவியின் பிரகாரம் பார்க்கப் போனால், அவன் ஆணும் பெண்ணுமாக இருந்தான். 12அந்த மகத்தான சித்திரத்தை உங்களால் காண முடிகிறதல்லவா? நாம் மாம்சத்தில் வித்தியாசமுள்ளவர்களாயிருக்கிறோம். சிருஷ்டிக்கப்பட்டவர்களாகிய நாம் உபபொருளைப் போன்று இருக்கிறோம், ஆனால் பரிசுத்த விவாகத்தினால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளோம். ஆவியில் நாம் குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். வேறு ஆவியல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவி. நாம் அவருடைய சாயலாக, அவருடன் ஒன்றுபட்டு, ஜீவனுள்ள தேவனுடைய பரிபூரண ரூபமாக இருக்கிறோம். ஏனெனில் நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் ஆகியிருக்கிறோம். நாம் பிரிக்கப்படாமல், அதே ஆவி, அதே தேவன். அதே நபர், நித்தியமாய் பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார். நாம் வித்தியாசமானவர்களாய் இராமல், அவராக இருக்க வேண்டுமென்று தேவன் எவ்விதம் திட்டமிட்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள்! வேறு ஏதோ ஒருவராக, வேறொரு ஜாதியைச் சேர்ந்தவராயிராமல் ஒரு உண்மையான இணைப்பு, பரிசுத்த இணைப்பின் மூலம் சர்வ வல்லவரின் பிள்ளைகள். சரீரமானது தாய் தகப்பனிமிருந்து வருகிறது. ஆனால் ஆவி தேவனிடத்திலிருந்து வருகிறது. ஆதாம் பிரிக்கப்பட்டது போல், தேவன் தம்மைப் பிரித்துக் கொள்கிறார். 13பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர், அக்கினி ஸ்தம்பம், தம்மை பிரித்துக் கொண்டு சபையின் ஒவ்வொரு அங்கத்தினரின் மேலும் அமர்ந்தார். தேவன் தம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளுதல்! அந்த கூட்டத்திலிருந்த ஜனங்கள் ஒன்று சேரும்போது, அது என்ன செய்கிறது? அது ஒன்றாக இணைக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தை மீண்டும் கொண்டு வருகிறது. ஒன்று சேருதல்! இன்று ஸ்தாபன வேறுபாடுகளின் காரணமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், என்ன ஒரு பரிதாபம், என்ன ஒரு அவமானம்! 14நித்திய தேவனுடன் பரலோக விவாகத்தின் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருத்தல்... அவருடைய பாகம், தேவனுடைய பாகத்துடன். என் தகப்பனார் பிரான்ஹாமின் காரணமாக நான் மாம்சத்தில் பிரான்ஹாமாக இருக்கிறேன். நீங்களும் உங்கள் தகப்பன் தாயாரின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். ஆனால் ஆவியில் நாம் தேவனுடன் இணைக்கப்பட்டு, தேவனுடைய பாகமாக இருக்கிறோம். ஆகையால் தான் ஆவி மரிக்க முடியாது. “என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. இங்கு பூமியில் அவன் இருக்கும் ரூபத்தில், அவனுடைய சாயலில், கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்”. ஆவியின் ரூபத்தில் அல்ல, தேவனுடைய மகிமையின் சரீரத்துக்கு, கர்த்தராகிய இயேசுவின் மகிமையின் சரீரத்துக்கு ஒத்த ஒரு சரீரத்தை நாம் பெறுவோம். அந்த சாயலில் எழுப்பப்படுவோம். 15இயேசு லாசருவின் கல்லறைக்குச் சென்று “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் (He that believeth in me) மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் (liveth and believeth in me) என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார் (யோவான்: 11: 25-26). “என்னில் விசுவாசிக்கிறவன் (Believeth in me)”, “என் மேல் விசுவாசமாயிருக்கிறவன் (Believeth on me)”, அல்ல, ஆனால் “என்னில் விசுவாசிக்கிறவன்”, அவரில் இருந்து கொண்டு விசுவாசித்தல். “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் (யோவான்: 15:7). அவரில் நிலைத்திருந்து விசுவாசித்தல்! ஓ, என்னே! பரிசுத்த ஆவியானவர் அதை உங்களில் ஆழமாகப் பதியச் செய்வாரென்று நம்புகிறேன். நீங்கள் அந்த சிறு மந்தை. எனவே தான் நான் வாரம் முழுவதும் ஜெபம் செய்து தேவனிடத்தில் கேட்டு, நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்குக் காண்பிக்க இந்த பொருளைத் தெரிந்து கொண்டேன். அவரில் விசுவாசமாயிருத்தல். நீங்கள் அவருக்குள் வராமல், அல்லது அவர் உங்களுக்குள் வராமல், நீங்கள் அவரில் விசுவாசிக்க முடியாது. அப்பொழுது மாத்திரமே நீங்கள் அவரில் விசுவாசிக்க முடியும். அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெறும் வரைக்கும் அவர் மேல் விசுவாசமாயிருக்கிறீர்கள். நித்திய ஜீவன் என்பது உங்களுக்குள் வாசம் செய்யும் தேவனுடைய ஜீவன். அப்பொழுது நீங்கள் அவரில் விசுவாசிக்கிறீர்கள். “நீங்கள் என்னிலும், நான் உங்களிலும். பிதாவே, நீரும் நானும் ஒன்றாயிருப்பதுபோல. அவர்கள் ஒன்றாயிருக்கும் படிக்கும். கிறிஸ்துவுக்குள் தேவன், சபைக்குள் கிறிஸ்து. பாருங்கள்? ”நாம் ஒன்றாயிருப்பது போல, அவர்களும் ஒன்றாயிருக்கும் படிக்கு“, நீங்கள் எப்படி ஒன்றாயிருக்க முடியும்? ”நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்“, பாருங்கள், தங்கியிருத்தல் (abide)! ”என் வார்த்தைகள் உங்களில் தங்கியிருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ“, இனி அது ஒருபோதும் நீங்கள் அல்ல. அது உங்களுக்குள் தங்கியிருக்கும் வார்த்தை. வார்த்தையே தேவன். 16தேவனுடைய வார்த்தை ஒரு பட்டயம். எபிரேயர்: 4-ம் அதிகாரம் அவ்வாறு உரைக்கிறது. எபிரேயர்: 4:12. அது ஒரு பட்டயம். பட்டயம் ஒரு கையினால் அல்லது ஒரு வல்லமையினால் உபயோகிக்கப்படாமல் இருந்தால், அது செயலற்று இருக்கும். அது... பட்டயத்தைப் பிடிக்க ஒரு கரம் அவசியம். இந்த தேவ வசனமாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் அவசியம்... இந்த விசுவாசம் என்னும் கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதைப் பொறுத்தது. இருளில் ஒரு சிறு துளையை வெட்டும் அளவுக்கு அது வலிமை பெற்று “விசுவாசத்தினால் நான் இரட்சிக்கப்பட்டேன்”, என்று கூற முடியும். அது ஒரு பெரிய வெட்டு தான். ஆனால் அவ்வளவு வலிமையுடன் மாத்திரமே அந்த கரம் அந்த பட்டயத்தை உபேயாகிக்குமானால், அவ்வளவுதான் அது வெட்ட முடியும். ஆனால் அது மிகவும் வலிமை வாய்ந்த கரமாயிருக்குமானால், பிசாசு அங்கு போடுகிற எல்லாவற்றையும் அது வெட்டி, தேவனுடைய வாக்குத்தத்தம் ஒவ்வொன்றையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் பிரகாசிக்கும்படி செய்யும். அது வலிமையுள்ள விசுவாசக் கரமாயிருக்குமானால், “அற்புதங்களின் நாட்கள்! இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று உரைத்து அதன் வழியாக ஊடுருவிச் செல்லும். பட்டயத்தை ஏந்தும் கரத்தின் வல்லமையை அது பொறுத்தது. 17அந்த பட்டயம் மிகவும் கருக்கானது. “அது இரு புறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், உள்ளே செல்லும் போதும் வெளியே வரும்போதும் அது வெட்டி எலும்பு கணுக்கள் வரைக்கும் ஊடுருவிச் சென்று, இருதயத்தின் யோசனைகளையும் வகையறுக்கிறதாயிருக்கிறது” என்று எபிரேயர்: 4-ம் அதிகாரம் உரைக்கிறது. அது மாம்சத்தையும் தாண்டிச் சென்று ஆவிக்குரிய ஆதிக்கத்தில் ஊடுருவிப் பாய்ந்து இருதயத்தின் சிந்தனைகளை அறிந்து கொண்டு அவைகளை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய ஆவி, தேவனுடைய வார்த்தை. வார்த்தையாகிய பட்டயத்தை ஏந்தும் கரத்துக்கு போதிய வலிமை இருக்குமானால், அது அதை ஊடுருவும்படி செய்து, அதன் இடத்தை அது அடைந்து, ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அது வெட்டியெடுத்து அதை உங்களுக்கு அளிக்கும், அதை ஏந்தும் கரம் போதிய வலிமை பெற்றிருந்தால். அந்த பட்டயத்தை கரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். விசுவாசம் என்னும் கரத்தில்! அதை இறுகப் பிடித்துக் கொண்டு சத்துருவை நோக்கி நடந்து செல்லுங்கள். விருத்தசேதனமில்லாத அந்த சத்துரு நித்திய தேவனின் சமுகத்துக்கு முன்னால் எப்படி நிற்க முடியும்? எனவே நீங்கள் வார்த்தையாகிய பட்டயத்தை கையில் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதாகிவிடும். விசுவாசம் என்னும் பலத்த கரத்தினால் அதை எடுத்துக் கொண்டு, முன் நடந்து செல்லுங்கள். உங்களுக்கு சுகம் தேவைப்பட்டால், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்” என்னும் வார்த்தையினால் வியாதியை வெட்டித் தள்ளுங்கள். உங்களுக்கு இரட்சிப்பு தேவைப்பட்டால், வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதே. அது வேதத்தில் உள்ளது, சாத்தான் அதை மறைக்கப் பார்க்கிறான். நீங்கள் பட்டயத்தை எடுத்துக் கொண்டு, தேவனுடைய வெளிச்சம் உங்கள் ஆத்துமாவில் பிரகாசித்து நீங்கள் வாக்குத்தத்தத்தைப் பெறும் வரைக்கும், அந்தகாரத்தின் வழியாக அது ஊடுருவும்படி செய்யுங்கள். அவர் அந்த வாக்குத்தத்தத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். 18ஆதாம் ஒரு பாகமாக, இல்லை, ஏவாள் ஆதாமின் ஒரு பாகமாக இருந்தாள். அவள் அவன் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருந்தாள். அது தான் சரியான இணைப்பு. சபையும் அவருடைய ஆவியில் ஆவியும் அவருடைய வார்த்தையில் வார்த்தையுமாய் இருப்பது தான் சரியான இணைப்பு. உண்மையான விசுவாசி எவனும் வார்த்தையை விட்டு அகலாமல், வார்த்தைக்கு முரணானவைகளுடன் ஒப்புரவாக மாட்டான். ஞாபகம் கொள்ளுங்கள், ஏவாள் ஒரே ஒரு வார்த்தையின் பேரில் ஒப்புரவானாள். ஆனால் உண்மையான விசுவாசியோ எந்த வார்த்தையின் பேரிலும் ஒப்புரவாக மாட்டான். அவன் விசுவாசம் என்னும் பட்டயத்தை... அதாவது வார்த்தையாகிய பட்டயத்தை விசுவாசத்தில் ஏந்தி, தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் உரிமை கோருவான். அது தான். 19நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் தேவன் நமக்கு அளித்த திருஷ்டாந்தங்களாக விளங்குகின்றனர். அவர்கள் எப்பொழுதும் பிரசன்னராய் ஒருபோதும் தவறாதவர்கள். அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்ட போது, தேவன் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார். அவர் அனுதினமும் அவர்கள் மேல் கண்ணோக்கமாய் இருந்தார். இரவில் அவர்கள் உறங்கினபோது, அவர் அவர்களுக்குப் பாதுகாவலராக இருந்தார். பகலில் அவர் அவர்களை வழிநடத்தி, போஷித்து, அவர்களை நேசித்து, அவர்களுடன் எல்லா நேரத்திலும் உரையாடினார். அவர்கள் தேவனுடைய ரூபத்தில் இருந்தனர். தேவன் அவர்களுக்குள் வாசம் செய்தார். அது தான் ஐக்கியத்தை உண்டாக்குகிறது. தேவன் தமது சபையில் இருப்பது தான் இணைப்பை உண்டாக்குகிறது. அது தான் இணைப்பு. இதைக் குறித்து இன்னும் அநேக காரியங்களைக் கூறலாம். அவருடன் இணைந்திருப்பதே நித்திய ஜீவன். அவருடன் நாம் இணையக் கூடிய ஒரேவழி, அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் வருவதன் மூலமாகவே. அது உண்மை. ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் எடுத்துக் கொண்டு அதை விசுவாசியுங்கள். 20ஏவாள் ஒரு வார்த்தையை மீறும் வரைக்கும், அல்லது ஒரு வார்த்தையை சந்தேகிக்கும் வரைக்கும் இணைக்கப்பட்டிருந்தாள். அது அவளைப் பிரித்தது. ஒவ்வொரு வார்த்தையும், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும்”, எனவே நாம் தேவனில் இருந்து கொண்டு அவருடன் இணைக்கப்பட முடியும். ஏனெனில் ஆதாமும் ஏவாளும், வார்த்தையை அவிசுவாசித்ததனால் அவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முன்பிருந்த நிலையில், நாம் அவருக்குள் என்னவாயிருக்க முடியுமென்பதற்கு திருஷ்டாந்தமாய் உள்ளனர். அவருடன் இணைந்திருப்பது ஜீவன்; அவரிடமிருந்து பிரிவது மரணம். அவருடைய கட்டளைகளை நாம் பின்பற்றுவோமானால்... 21நாம் தவறு செய்பவர் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் அதை பார்க்கக் கூடாது. அது உங்கள் தவறுகள் அல்ல, ஏனெனில் நீங்கள் எப்பொழுதுமே அதை செய்பவர்களாயிருப்பீர்கள். ஆனால் பாருங்கள், அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் செய்யச் சொன்னதை செய்வதே முக்கியம் வாய்ந்தது. இடறி விழுதலுக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஒரு உண்மையான ஊழியக்காரன் இடறி விழ நேர்ந்தாலும் மறுபடியும் எழுந்திருப்பான். அவன் தடுமாறினால், அவன் தன் கடமையின் பாதையில் உள்ள வரைக்கும், தேவன் அவனை இழுத்து மறுபடியும் பாதையில் நிறுத்துகிறார். அவன் கடமையின் பாதையை விட்டு விலகிச் சென்றால், தேவன் அவனுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர் அல்ல. ஆனால் அவன் கடமையின் பாதையில் உள்ள வரைக்கும், அவன் நீதிமான் என்பதை அறிந்தவராய், தேவன் அவனுக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறார். அவர்கள் கடமையின் பாதையில் உள்ள வரைக்கும், தேவன் அந்த நபருக்கு கடமைப்பட்டிருக்கிறார். 22சபையானது இப்பொழுது விவாகத்திற்கென்று கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது (engaged). விவாகம் இன்னும் நடக்கவில்லை, அது ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தின் போது நடக்கும். ஒரு மனிதன் தன் மனைவிக்கு நியமிக்கப்படுவது போல, சபையானது இப்பொழுது நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள போது அவர் என்ன செய்கிறார்? அவர் எல்லா விதமான பொருட்களையும் அளித்து, அவளுக்கு வெகுமதிகளை அளித்து, அவளை மகிழ்விக்கிறார். நல்லது. அதை தான் கிறிஸ்து தமது சபைக்குச் செய்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு ஆவியின் வரங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்த வரங்கள் உள்ளன என்பதை நீங்கள் மறுதலிப்பீர்களானால், நீங்கள் எப்படி அவருக்கு நியமிக்கப்பட்டிருக்க முடியும்? அவை அன்பின் அடையாளங்களாக அமைந்துள்ளன. அது தேவன் சபைக்கு அளித்துள்ள அடையாளம். இயேசு அவ்வாறு கூறினார்; “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்”, என்று. 23இந்த காரியங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சபையானது ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசித்து. அதை தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும், நான் விவாகமாகாதவனாய், ஒரு பெண்ணுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவளுக்கு நான் எதாவதொன்றை, நிச்சயதார்த்த மோதிரத்தை அனுப்பி, அவள் அதை விரலில் அணிந்து கொள்ள மறுத்தால், அவளுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்பதை அது காண்பிக்கிறது. அவளுக்கு மணப்பெண்ணாவதற்கு விருப்பமில்லை. அவ்வாறே கிறிஸ்து, அவர் வாக்களித்த வரங்களை தமது சபைக்கு அனுப்பி, அவர்கள் “அவை அப்படியல்ல”, என்று சொல்லி அதை ஏற்க மறுத்தால், அவர்களுக்கு கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க பிரியமில்லை. அவர்கள் வேறொரு காதலனுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர், மணவாளனாகிய கிறிஸ்துவுக்கு அல்ல. எனவே உண்மையான சபை வாக்குத்தத்தத்தைக் கைக்கொண்டு, எல்லாவற்றையும் கைக்கொண்டு தேவன் அவர்களுக்கு அனுப்பும் வரங்களை ஏற்றுக் கொள்ளும். அது சரி. 24இப்பொழுது, முதலாம் மானிடர்கள் தேவனை விசுவாசிக்காமல், அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், பிசாசின் பொய்க்கு செவி கொடுத்து தேவனிடம் கொண்டிருந்த ஐக்கியத்திலிருந்து பிரிந்து போனார்கள். இந்த அருமையான இணைப்பின் ஐக்கியத்திலிருந்து பிரித்த முதலாம் காரியம் அதுவே. இப்பொழுது பாருங்கள், ஆதாமும் ஏவாளும் மரிக்காத ஒரு நிலையை, வயோதிபமாகாத ஒரு நிலையை, வியாதிப்படாத ஒரு நிலையை, கவலையே இல்லாத ஒரு நிலையைப் பெற்றிருந்தனர். “அவ்வாறு இருக்க எனக்கு மிகவும் பிரியம்” என்று நீங்கள் கூறலாம். இதைக் கூற விரும்புகிறேன்... உங்களுக்கு அளிக்க என்னிடம் ஒரு செய்தி உண்டு. நீங்கள் அதே நிலையில் தான் இருக்கிறீர்கள். தேவன் பூமியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியையும் அதே நிலையில் வைத்துள்ளார். 25ஆனால் நிபந்தனை என்ன? “நீ என் வார்த்தைகளைக் கைக் கொண்டால்! என் வார்த்தையைக் கைக் கொண்டு, அதை விசுவாசித்து, அதன்படி நடந்தால்!”, ஆனால் முதன் முறையாக ஏவாள் அவிசுவாசித்து, தேவன் கூறினதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டபோது, அது அந்த மகத்தான இணைப்பிலிருந்த ஐக்கியத்தை முறித்துப் போட்டது. அவ்வாறே சபையும் தேவனுடைய வேதாகமத்தில் காணப்படும் ஏதாவது ஒரு வார்த்தையை அவிசுவாசித்து அதை வேறெங்காவது பொருத்தினால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட அருமையான ஐக்கியத்தை அவர்கள் முறித்துப் போட்டு பிரிந்துவிடுகின்றனர். ஏவாள் அவ்வாறு செய்தவுடன் அவளுடைய சரீரத்தை மரணம் ஆட்கொண்டது. அவளுடைய சரீரம் மாத்திரமல்ல, அவளுடைய ஆவியும். அவள் அவிசுவாசித்த அந்த நிமிடமே அவள் தேவனுடன் கொண்டிருந்த உறவை முறித்துப் போட்டாள். எந்த மனிதனுமே... இதோ அது! எந்த மனிதனும் அல்லது எந்த ஸ்திரீயும், தேவனுடைய சத்தியத்தை முதலில் அவிசுவாசிக்காமல், சாத்தானின் பொய்யை விசுவாசிக்க முடியாது. எனவே பாருங்கள், ஏவாள் ஆதாம், அது நம்மை இன்று காலை எந்த நிலையில் வைத்துள்ளதென்று! 26இதை நாம் ஆழ்ந்து சிந்திப்போம், ஏனெனில் இந்த மானிட வாழ்வு முடிவு பெற்ற பின்பு, இதைக் குறித்து நாம் ஒருபோதும் சிந்திக்க முடியாது. நீங்கள் இப்பொழுதே சிந்திக்க வேண்டும். இதற்கு பிறகு நீங்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாது. இப்பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நாள், நீங்கள் எதை தெரிந்து கொள்வீர்கள் என்று தீர்மானிக்க வேண்டும். அவள் ஒரு வார்த்தையை... பத்து கட்டளைகளை அல்ல... ஒரே ஒரு வார்த்தையை சந்தேகித்தாள். அவள் தேவனை சந்தேகித்தாள். ஏனெனில் வார்த்தையை சந்தேகிக்கலாம் என்னும் வகையில் அவளுக்குக் கூறப்பட்டது. தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கக் கூடாது. அவர் என்ன கூறியுள்ளாரோ அதுவே அதன் அர்த்தம். “ஓ, தேவன் நிச்சயமாக அந்த அர்த்தத்தில் கூறவில்லை” என்று அவளுக்குக் கூறப்பட்டபடியால் அவள் அதை சந்தேகிக்கலானாள். தேவன் நிச்சயமாக அந்த அர்த்தத்தில் தான் கூறினார்! தேவன் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தம் அதுவே. அதற்கு தனிப்பட்ட வியாக்கியானம் தேவையில்லை. அவர் சொன்ன விதமாகவே அது உள்ளது. நீங்கள், “எனக்கு வேதத்தைக் குறித்து தெரியும்”, எனலாம். என் தேவன் இந்த வேதாகமத்தை எழுத வழிநடத்தி, அவருடைய வார்த்தையைப் பாதுகாத்து வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களில் நாத்தீகர்கள் எழும்புவார்களென்று அவருக்குத் தெரியும். எனவே அவர் அதைப் பாதுகாத்து வந்திருக்கிறார். அவர் என்ன கூறினாரோ, அதன் அர்த்தம் அதுவே. அப்படித்தான் அது நமக்கு இப்பொழுது உள்ளது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதில் ஒரு வார்த்தையிலிருந்தும் நாம் விலகினால், நமது ஐக்கியத்தை நாம் இழந்து, மரணத்துக்குள் பிரவேசித்து. ஆதாமும் ஏவாளும் போல, தேவனிடமிருந்து நித்தியமாக பிரிக்கப்படுவோம். நாம் தேவனுடைய சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். 27அதை நான் மறுபடியும் கூறட்டும். தேவனுடைய வேதாகமத்திலுள்ள எந்த ஒரு வார்த்தையையும் அவிசுவாசிக்காதீர்கள். “ஆம், நான் விசுவாசிக்கிறேன். ஆனால்!” என்று கூறாதீர்கள். அதனால் ஒரு உபயோகமுமில்லை. நீங்கள் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை நீங்கள் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, “நல்லது, என் சபை அவ்விதம் விசுவாசிப்பதில்லை” என்பீர்களானால், அது தேவனுடைய வார்த்தை என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை. ஏவாள் நடந்து சென்ற அதே ஆக்கினைக்குள் நீங்கள் நடந்து செல்வீர்கள். அவருடன் இணைந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருந்தபோது, நீங்கள் நித்தியமானவரிடமிருந்து உங்களைப் பிரித்துக் கொண்டீர்கள். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். அதை சந்தேகிக்கலாகாது. ஏனெனில் அது ஒரே வார்த்தை, தேவனுடைய வார்த்தை... 28இப்பொழுது, ஜனங்கள் கீழ்படிவதற்கென தேவன் சில வார்த்தைகளை அளித்து, அந்த சில வார்த்தைகளில் ஒரு வார்த்தை தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதன் விளைவாக மரணம் உண்டானால், இன்று தவறாக அர்த்தம் கொள்ளப்பட்ட எத்தனை வார்த்தைகளை நாம் பெற்றுள்ளோம் என்பதைக் கவனியுங்கள்! பாருங்கள்? நாம் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக் கொண்டு, அதில் நிலைத்திருந்து, அவை தேவனிடமிருந்து வந்த வாக்குத்தத்தங்களாக கருதி, அவைகளில் பிரவேசிக்க வேண்டும். தேவனுடைய உண்மையான மனைவி. தேவனுக்கு உண்மையாக நியமிக்கப்பட்டவள், அவ்வாறு செய்வாள். இந்த சிறு காரியங்கள் உங்களில் ஆழமாக பதிந்து, நீங்கள் அவைகளை கிரகித்துக் கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். 29தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்க ஏவாளுக்கு நேர்ந்த முதலாம் காரியம் என்ன? சாத்தான் அவளுக்கு அதிகமான ஞானத்தை வாக்களித்து, “நீ அறிவாளியாவாய்” என்றான் இப்பொழுது, பாருங்கள், மனித குலம் ஏதாவதொன்றை தேடி அதன் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. ஏவாள் அதிக அறிவைத் தேடி அதன் பின்னால் சென்றாள். இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வோம். இன்றைய உலகின் நிலையும் அதுவல்லவா? அவர்கள் அதிக அறிவை, உயர் கல்வியை, மேலான வகுப்பினராயுள்ளதை விரும்புகின்றனர். அவர்கள் வித்தியாசமானவர்களாக இருக்க விரும்பி, அதிக அறிவை நாடுகின்றனர். அதை தான் ஏவாள் விரும்பினாள். ஆனால் நான் இதை கூற விரும்புகிறேன். எந்த ஒரு ஞானமும் தேவனுடைய ஞானத்தை மிஞ்ச முடியாது. ஆனால் அது மிகவும் எளிமையாக உள்ளதால், ஜனங்கள் அதைக் காணத் தவறுகின்றனர். நான் அநேக முறை கூறினது போல, சாத்தான் பளபளக்கிறான் (shines), ஆனால் சுவிசேஷமோ ஜொலிக்கிறது (glows). பளபளத்தலுக்கும், ஜொலித்தலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஹாலிவுட் பளபளக்கிறது. ஆனால் சபையோ தேவனுடைய வல்லமையினாலும் அன்பினாலும் ஜொலிக்கிறது. ஹாலிவுட் பளபளக்கிறது. ஜொலித்தலுக்கும் பளபளத்தலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நமக்கு பளபளக்க விருப்பமில்லை, நாம் ஜொலிக்கவே விரும்புகிறோம். 30இன்று இதைக் குறித்து கூறுவது நல்லதல்ல, ஆனால் சபைகள் ஏவாள் செய்தது போல் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளன. ஏவாளுக்கு அது கூறப்பட்ட போது, அது உண்மையைப் போல் தோன்றினது. ஓ, இதை புரிந்துக் கொள்ளத் தவறாதீர்கள். அது மிகவும் உண்மையாக, தேவன் கூறினதுடன் கூட்டத் தகுந்ததாக அமைந்திருந்தது. அவள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமென்று தேவன் கூறாத ஒன்றை அவள் பெற்றுக் கொண்டதாக எண்ணினாள். தேவன் சமுத்திரத்துக்கு எல்லையை நியமித்தது போல. அவளுக்கு எல்லைக் கோட்டை நியமிக்கவில்லை. சமுத்திரம் அதன் எல்லையைக் கடக்க முடியாது, ஏனெனில் சந்திரன் அதைக் காவல் காக்கிறது. அவன் நினைத்தான்... சாத்தான் ஏதோ ஒன்றை வைத்துள்ளான் என்றும், அவள் அதைப் பெற்றுக் கொண்டு அதிக அறிவாளியாகி, அதிக கல்வி பயின்று, அதே சமயத்தில் தேவனுடன் இணைந்திருக்கலாம் என்றும் அவள் எண்ணினாள். ஆனால் தேவன் அவளுக்கு என்ன தேவையோ அதை மாத்திரம் அளித்திருந்தார். அவர் சபைக்கும் அதையே அளித்துள்ளார். அது வேதாகமக் கல்லூரியிலிருந்து வெளி வந்த ஒரு புரட்டு அல்ல. அது எழுதப்பட்ட விதமாகவே, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதாய் அமைந்துள்ளது. அதை மாற்ற முடியாது! ஆனால் சபைகளோ தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளன. அது அவர்களுக்கு பொருத்தமானது என்று அவர்கள் ஒருக்கால் எண்ணக் கூடும்; ஆனால் அது வஞ்சிக்கும் ஒன்று. 31இங்கு நான் ஒரு நிமிடம் நிறுத்தப் போகிறேன். முழு உலகமே அதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரம் முழுவதுமே தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனக்கு நேர்ந்த ஒரு சிறு ஹாஸ்யத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன், அது ஹாஸ்யம் அல்ல. நாம் அனைவரும் நமது மனைவிகளை நேசிக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும், நாம் அவர்களை நேசிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு, நான் மேற்கில் சென்றிருந்த போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேரிட்டது. அது நீண்ட காலம் முன்பு, ஏறக்குறைய மூன்று ஆண்டுகட்கு முன்பு. ஒரு நாள் நான் படுக்கையை விட்டு எழுந்த போது, என் அறையில் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருப்பதைக் கண்டேன். “வான் நிலை மோசமாயுள்ளது”, என்று நான் எண்ணினேன். “எட்டு மணிக்கு தொலைக்காட்சி செய்தி இருக்குமே”, என்று எண்ணி, தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலை நோக்கின போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதில் இருந்தது. நான் தொலைக்காட்சியைப் போட்டு செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்தியின் நடுவில் ஒரு பொருள் விளம்பரம் செய்யப்பட்டது. அது ஏதோ ஒரு 'டிடர்ஜெண்ட்', அந்த விளம்பரம், “பெண்ணே, இனிமேல் உன் தட்டுகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, இந்த டிடர்ஜெண்ட் கலந்த தண்ணீரில் இவைகளை மூழ்க்கி, சில நிமிடங்கள் அதில் ஊற வைத்து, அவைகளை வெளியே எடுத்து தண்ணீர் வடியும் பலகையின் மேல் வைத்துவிட்டால், அது முடிந்துவிட்டது”, என்றது. “நான் வீடு திரும்பும் போது, ஒரு 'ஹீரோ'வாக இருப்பேன். என்று எண்ணிக் கொண்டு, இந்த பொருளின் பெயரைக் குறித்துக் கொண்டேன். ”என் மனைவியிடம், 'என்னால் என்ன செய்ய முடியும் பார்' என்று கூறுவேன்“ என்று எண்ணினேன்... எனவே நான் கடைக்குச் சென்று இந்த டிடர்ஜெண்ட் ஒரு குப்பி வாங்கிக் கொண்டு அதை தண்ணீரில் கலந்தேன். என் மனைவியிடம் வீட்டைப் பெருக்கக் கூறி, தட்டுகளை அவளுக்காக நான் கழுவுவேன் என்று கூறினேன். எனவே நான் பிள்ளைகளின் தட்டுகளை எடுத்து, அவைகளிலிருந்த ரொட்டித் துண்டுகளை வெளியே எறிந்தேன். அவைகளில் முட்டை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை டிடர்ஜெண்ட் கலந்த தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்தேன். நான் போடும்போது எவ்வளவு முட்டை ஒட்டியிருந்ததோ, அவ்வளவு முட்டை நான் வெளியே எடுக்கும்போது இருந்தது. பாருங்கள், நான் இழந்துவிட்டிருப்பேன். அந்த நேரத்துக்குள் என் மனைவி என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்திருப்பாள். 32பாருங்கள், ஏன் இந்த நாடு, ஏன் இந்த... ஏன் இந்த நாடு ஜனங்களை ஏமாற்ற அனுமதிக்கிறது? அவ்வாறு விளம்பரத்தில் கூற அது அனுமதிக்கக் கூடாது. அது சட்ட விரோதமானது. நவீன சிகரெட்டு விளம்பரம், என்ன ஒரு அவமானம்! “கார் நிறைய சிகரெட்டுகள் புகைத்தாலும் இரும்பல் சிறிதும் வராது” இப்படி பலவகையான விளம்பரங்கள். இதை அனுமதிக்கக் கூடாது. அது என்ன செய்கிறது? அது ஏமாற்றுகிறது. அவை ஒவ்வொன்றிலும் மரணம் உள்ளது. குப்பியிலுள்ள விஸ்கியைக் குடிப்பதில் மரணம் உண்டாகின்றது (கற்பழிப்பு, கொலை, பைத்தியம் பிடித்தல்). இருப்பினும் நமது நிகழ்ச்சிகளில் இந்த விளம்பரங்களைச் செய்ய நாம் அனுமதித்து, “பாட்டனார் குடித்தது போன்ற மது, வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி” என்று மது வகைகள் விளம்பரம் செய்யப்படுகின்றன. அது என்ன? அது ஏமாற்றுதல். பொது ஜனங்கள் தங்களையே கொல்வதற்கென ஏதோ ஒன்று அவர்களுக்கு முன்னால் வைக்கப்படுகிறது. அதை நாம் செய்ய அனுமதிக்கப்படுகிறோம். 33இதை நான் இப்பொழுது வேறோரிடத்துக்கு திருப்ப விரும்புகிறேன். சபைகள் மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகளின் மூலம் ஜனங்களுக்கு ஒரு பெரிய முன்னணியை அளித்து, அவர்களும் அதனால் கவரப்படுகின்றனர். அது மரணம். எந்த சபையும் உங்கள் ஆத்துமாவை சுத்திகரிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்று மாத்திரமே உங்கள் ஆத்துமாவை சுத்திகரிக்க முடியும். அதுவே தேவன் அளித்துள்ள பரிகாரம், அவர் அதை ஆதரிக்கிறார். எனவே சபைகள் அளிப்பது பொய். ஆனால் ஜனங்களோ அறிவாளிகளின் புத்தியின் மேல் சாய்ந்து அதன் விளைவாக மரிக்கின்றனர். ஜனங்கள் இன்று ஸ்தாபனங்களின் புத்தியின் மேலும் கோட்பாடுகளின் மேலும் சாய்ந்து, கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பன்றிகளைப் போல் பாதாளத்துக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அது என்ன ஒரு அவமானம்! நாம் சுயபுத்தியின் மேல் சாயக் கூடாதென்று தடை செய்யப்படுகிறோம். நாம் முயற்சி செய்யக் கூடாது. 34நீங்கள், “ஒரு மனிதனைக் காட்டிலும் மனிதர் கொண்ட ஒரு சங்கம் சிறப்பாக கூறுமல்லவா?” எனலாம். அந்த ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை உரைப்பானானால், அப்படியிருக்காது. ஒரு சமயம் இரண்டு ராஜாக்களுக்கு முன்பு நானூறு தீர்க்கதரிசிகள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தனர். ஆனால் மிகாயா என்னும் ஒருவன் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்தான். அவன் உரைத்தது சரியென்று நிரூபிக்கப்பட்டது. அது தேவனுடைய வார்த்தையா என்பதை அது பொறுத்தது. வார்த்தைக்கு முரணான எதுவுமே தவறு, அது மரணத்தை உள்ளே நுழையச் செய்கிறது. எந்த ஞானமும் தேவனுடைய ஞானத்தை மிஞ்ச முடியாது. அவர் எல்லா ஞானிகளுக்கும் மேலான ஞானி. அவரே ஊற்று. அவரே ஞானத்தின் உற்பத்தி ஸ்தானம். தேவனுடைய வார்த்தையேயன்றி எந்த ஒரு மனிதனின் வார்த்தையும் மூடத்தனமும் பொய்யுமாயுள்ளது - அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், ஒரு நபர் தேவனுடைய வார்த்தையை உரைப்பாரானால், அது ஒரு போதும் மனிதனின் வார்த்தை அல்ல, தேவனுடைய வார்த்தை. பாருங்கள், அது மனிதனின் புத்தியல்ல. 35சாத்தான் எல்லா விதமான வாக்குத்தத்தங்களையும் உங்களுக்கு அளிப்பான். ஆனால் உங்களுக்குக் கொடுக்க அவனிடம் ஒன்றுமில்லை. அவனிடம் ஒன்றுமேயில்லை. கொடுப்பதற்கு அவனிடம் இரட்சிப்பு இல்லை. சாத்தான் என்பது என்ன? தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதுவுமே. அவனிடம் இரட்சிப்பு இல்லை, அவனிடம் ஒளி இல்லை. அவனுடைய ராஜ்யம் அந்தகாரம், அதன் முடிவு மரணம். அந்தகாரமும் மரணமுமே சாத்தானின் ராஜ்யம். “சகோ. பிரான்ஹாமே, அதை திரும்பக் கூறுங்கள். எது சாத்தானின் ராஜ்யம்?”, தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதுவுமே. இப்பொழுது, அது வெட்டக் கூடும், ஆனால் வெட்டுவதற்கு நேரம் இதுவே. பாருங்கள்? மரம் கனி கொடுக்க வேண்டுமானால், அதன் கிளைகளை நறுக்கி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான நேரம் இதுவே. தேவனுடைய நியமங்களுக்கு, தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதுவும் தேவனல்ல, அது என்ன. பாவம் என்பது என்ன? நீதி தாறுமாறாக்கப்படுதல், சாத்தானின் ராஜ்யம் என்பது என்ன? தேவனுடைய வார்த்தையின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும் எதுவுமே, எந்த போதகமும், ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை. நீங்கள் வார்த்தையின் ஒவ்வொரு பாகத்தையும் விசுவாசிக்கக் கூடும். ஏவாளும் அந்த ஒரு வார்த்தையைத் தவிர, மற்ற எல்லா வார்த்தையையும் விசுவாசித்தாள். அவிசுவாசிக்க அவளுக்கு அந்த ஒரு வார்த்தை மாத்திரமே தேவையாயிருந்தது. நீங்களும் அவிசுவாசிக்க ஒரு வார்த்தை மாத்திரம் உங்களுக்குப் போதும். 36இப்பொழுது இதை நாம் பார்ப்போம். தேவனுடைய ஐக்கியத்தில் நிலைத்திருக்கக் கூடிய ஒரே வழி வார்த்தையைக் கைக் கொள்வதே. தேவன், “இதை செய்யக் கடவாய், இதை செய்யாதிருப்பாய், இதை செய்யக் கடவாய். இதை நீ செய்யலாம், இதை நீ செய்யலாம், ஆனால் இதை செய்யாதே”, என்று கட்டளையிட்டிருந்தார். அந்த கட்டளையின் ஒரு சிறு பாகத்துக்கு ஏவாள் கீழ்படியாமல் போனது எல்லாவற்றையும் துவக்கிவிட்டது. அவள் அதை செய்ததன் விளைவாய் இன்று உலகில் பசியுள்ள பிள்ளைகள், மரணத்தின் வேதனை, துயரம், மனவேதனை உண்டானது. அவள் அன்று அதை செய்தாள். தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிப்பதென்பது எவ்வளவு பயங்கரமான காரியம். அன்று அவள் செய்தது மரண வேதனையால் அலறும் ஒவ்வொரு மனிதனும், முன்பும் இனிமேலும், உண்டாகக் காரணமாயிருந்தது. விவாகமாகாமல் முறை தவறிப்பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்... அவள் அன்று செய்ததன் விளைவாகவே. அவள் வார்த்தை அனைத்தும் கைக்கொண்டு, ஒரே சிறு வார்த்தையைக் கைக்கொள்ளாமல் போனது ஒவ்வொரு பாவமும் செய்யப்படுவதற்கு காரணமாயிருந்தது. அவள் புத்தியினால் யோசித்தாள். அவள்... அவளுக்குத் தெரியாது... அவளுக்குத் தெரியும், ஆனால் அவள்... அவளுக்கு உயர் வகுப்பினர். அதிக ஞானம் போன்றவை வாக்களிக்கப்பட்டு, அதை செய்யும்படி தூண்டப்பட்டாள். “எங்கள் போதகர்கள் அதிகம் கல்வி பயின்றவர்கள். எங்களுக்கு உயர் வகுப்பினர் உள்ளனர்”. தேவனுடைய வார்த்தையைக் கைக் கொள்பவரைக் காட்டிலும் உயர் வகுப்பினர் இவ்வுலகில் இல்லை. அவர்களே மிகச் சிறந்தவர்கள். அந்த ஒரு வகுப்பினரை மாத்திரம் தேவன் கண்ணோக்குகிறார். இன்னும் சிறிது நேரத்தில் இதைக் குறித்து நாம் தியானிக்கும்படி தேவன் செய்வார். 37சாத்தானின் ராஜ்யம் மரணத்தை தவிர வேறொன்றையும் வாக்களிக்க முடியாது. அவனிடம் உள்ளது அவ்வளவுதான். அவனே மரணத்துக்கு மூல கர்த்தா. அவன் பொய்க்கு தகப்பன், எனவே அவனால் பொய்களை வாக்களிக்க முடியும். அவனால் உங்களுக்கு ஜீவனைக் கொடுக்க முடியாது. அவனால் உங்களுக்கு பரலோகத்தை அளிக்க முடியாது. ஏனெனில் உங்களுக்கு அளிக்க அவனிடம் பரலோகம் கிடையாது. இதை சிந்தித்துப் பாருங்கள்! ஒரே வார்த்தை. பிசாசு அல்லது அவனைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வாக்குத்தத்தத்தின் காரணமாக தேவனை அவிசுவாசித்தல், அந்த ஒரு வார்த்தை உங்களை வேதனைக்கு, நரகத்துக்கு அனுப்புகிறது. அப்படித்தான் அது தொடங்கினது, இரக்கமுள்ள தேவன், ஆதியில் கைக் கொள்ளாத ஒரு வார்த்தையின் நிமித்தம் நரக வேதனையை பூமியில் அனுப்பி, பசியுற்ற பிள்ளைகளும், எல்லா விதமான துன்பங்களும், பட்டினி கிடக்கும் ஜனங்களும் மரணமும் பூமியில் தோன்றச் செய்தாரே. அவர் அந்த பாவத்தை காணாதது போலிருந்து மக்கள் படும் வேதனையை தவிர்த்திருக்கக் கூடாதா? அன்று அவர் ஒரு வார்த்தையைக் கைக் கொள்ளாத பாவத்தை மன்னிக்க மறுத்து, இந்த விளைவுகளை பூமியில் தோன்றச் செய்திருக்க, எவ்வளவு அதிகமாக அவர் ஒரு வார்த்தையை மீறுவதனால் அவிசுவாசிக்கும் தனிப்பட்ட நபரை அங்கு நரகத்தில் தனியாக வேதனைப்படுத்துவார்? இதை யோசித்துப் பாருங்கள். இது பயங்கரமான காரியம். 38ஆதாமும் ஏவாளும் பிசாசின் பொய்க்குச் செவி கொடுத்த போது, தேவனுடைய பரிசுத்த ரூபம் அவர்களை விட்டுச் சென்று, அவர்கள் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியம் முறிக்கப்பட்டது. அவர்கள் தேவனுடன் ஒன்றாயிருந்த ஐக்கியம் முறிக்கப்பட்டது. அவர்கள் பிசாசுக்கு செவிகொடுத்த அந்த நிமிடமே அந்த ஐக்கியம் முறிவடைந்தது. நீங்களும் பிசாசுக்கு செவி கொடுக்கும் அந்த நிமிடமே, உங்கள் ஐக்கியம் முறிவடையும். தேவனுடைய வார்த்தையை அது கூறுவதன்படி ஏற்றுக் கொள்ளத் தவறும் நீங்களும், ஏவாளைப் போலவே, தேவனுடைய சமுகத்தை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 39இப்பொழுது கவனியுங்கள். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். தேவன் இருக்கிறார் என்று நாமனைவரும் அறிவோம். தேவன் தமது வார்த்தையை பிழையின்றி அளித்து, ஜனங்களை தமது வார்த்தையின்படி நியாயந்தீர்க்கப் போவதாக தீர்மானம் கொண்டிருப்பாரானால், இந்த வார்த்தையை அவர், ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கென, எங்காவது பாதுகாத்திருக்க வேண்டும். அது தான் இந்த வேதாகமம். அதை மறந்துவிடாதீர்கள். இந்த வேதாகமத்தைக் கொண்டு தான் தேவன் ஜனங்களை நியாயந்தீர்ப்பார். ஏனெனில், “இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அல்லது இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால்” என்று வெளிப்படுத்தல்: 22-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பாருங்கள், “நான் சபைக்கு செல்கிறேன். நான் தேவனை விசுவாசிக்கிறேன்”, என்று மாத்திரம் கூறாதேயுங்கள். ஏன், பாதாளத்திலுள்ள ஒவ்வொரு பிசாசும் அவரை விசுவாசிக்கின்றது. அவை ஒவ்வொன்றும் பக்தியுள்ளது. ஒவ்வொன்றும். 40ஆனால் ஐக்கியம் முறிவடைவதற்கு ஒரே ஒரு வார்த்தை போதுமானது. ஒரு சங்கிலி அதன் மிகவும் பலவீனமுள்ள இணைப்பைக் காட்டிலும் பலமுள்ளதல்ல. தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும் பலவீனம் உங்களுக்கு எங்கே அதிகமாயுள்ளதோ, அங்கு ஒரு பலமுள்ள இணைப்பை வைத்து, சங்கிலியின் மற்ற இணைப்புகளுடன் இதையும் பலமுள்ளதாக செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்து இரட்சிக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்தால், அவர் சுகமளிக்கிறார் என்னும் இணைப்பையும் நீங்கள் அங்கு வைக்க வேண்டும். அவர் இருந்தார் என்று நீங்கள் விசுவாசித்தால், அவர் இப்பொழுதும் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அல்லேலூயா! அவர் இருந்தார் என்று விசுவாசித்து அவர் இப்பொழுது இருக்கிறாரா என்று நீங்கள் சந்தேகித்தால், அந்த இணைப்பு முறிந்துவிடும், நீங்கள் இழக்கப்படுவீர்கள். நான் கூறுவது அர்த்தமாகிறதா? இது கடுமையானது, கடினமானது. ஆனால் இது உண்மை. நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும், அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும், எல்லாவற்றையும் 41நீங்கள், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, இந்த ஸ்தாபனங்களைக் குறித்தென்ன?” என்று கேட்கலாம். நல்லது, இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் வார்த்தையில் நின்றிருந்தால் சரி. ஆனால் அவர்கள் அந்த வார்த்தையை மறுதலித்தால், அது சரியல்ல, அது பிசாசு. பாருங்கள்? “இந்த குறிப்பிட்ட சபையைக் குறித்தென்ன?” அந்த சபையைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று இந்த வார்த்தையே. தொளாயிரம் சொச்சம் வெவ்வேறு ஸ்தாபனங்கள் இருந்து, ஒவ்வொன்றும் “எங்கள் ஸ்தாபனம் மாத்திரமே சத்தியத்தைப் பெற்றுள்ளது என்று கூறும்போது, நீங்கள் எவ்வாறு ஒரு ஸ்தாபனத்தை நம்ப முடியும்? அப்படியிருக்க, நீங்கள் எங்கு செல்வீர்கள்? உங்களுக்கு ஏதாவதொன்றில் விசுவாசம் இருக்க வேண்டும். நீங்கள், “நான் மெதோடிஸ்டு சபையில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். நான் பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தெகொஸ்தே அல்லது கத்தோலிக்க சபையில் விசுவாசம் கொண்டிருக்கிறேன்” எனலாம், அப்படி ஏதாவதொரு சபையில். உங்களுக்கு அந்த ஸ்தாபனத்தின் மேல் விசுவாசம் உள்ளது. ஆனால் அது வார்த்தைக்கு முரணாக அமைந்திருக்குமானால், ஏவாள் செய்ததையே நீங்களும் செய்கிறீர்கள். முற்றிலுமாக அவள் புரிந்த அதே செயலையே நீங்களும் செய்கிறீர்கள், அதாவது தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை... 42“நல்லது, உயர் வகுப்பினர் இந்த சபைக்குச் செல்கின்றனர். இந்த கட்டிடம் பெரியது. அங்குள்ள மனிதர் அறிவாளிகள். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சாத்தான் ஏவாளைக் காட்டிலும் அறிவு படைத்தவனாயிருந்தான். அவள்... அவள் காட்சியில் கூட இல்லை. அவள் அறிவாளியாக இருக்க வேண்டுமென்று கருதப்படவில்லை, அவள் கீழ்படிந்திருக்க வேண்டுமென்றே கருதப்பட்டாள். நாமும் கூட அறிவாளிகளாக இருக்க வேண்டுமென்று கருதப்படுவதில்லை. இவ்வுலகத்தின் புத்திரர், அதாவது இவ்வுலகத்தின் ராஜ்யம்; அந்தகாரத்தின் புத்திரரர் வெளிச்சத்தின் புத்திரரைக் காட்டிலும் அறிவுள்ளவர்கள் என்று இயேசு கூறினார். நாம் செம்மறியாடுகளுக்கு ஒப்பிடப்படுகிறோம். செம்மறியாடுகள் தங்களைத் தாங்களே வழிநடத்திக் கொள்ள முடியாது. அவைகளுக்கு ஒரு மேய்ப்பன் தேவை. நாம் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று விருப்பம் கொள்ளவில்லை. அவருடைய புத்தியின் மேல் நாம் சாய்ந்து, ஆமென், அவர் நடத்தும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். ஆமென். உங்களுக்கு இந்த காட்சி விளங்குகிறதா? உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதிருங்கள். நீதிமொழிகள்: 35. உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதிருங்கள், அவருடைய புத்தியின் மேல் சாய்ந்திருங்கள் - அது எவ்வளவு முரணாக தோன்றின போதிலும், அங்கு விளக்குகள் பிரகாசமாக இருந்தாலும், அங்கு கவனத்தை செலுத்தாதீர்கள். அவருடைய புத்தியின் மேல் மாத்திரம் சாய்ந்திருங்கள், அவர் உரைத்தது சத்தியம். 43ஏவாள் ஒரு சிறு பகுதியை, ஒரு சிறு தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்த அந்த நிமிடமே தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இருந்த அந்த ஒன்றான ஐக்கியம் முறிவடைந்தது. எல்லோருக்கும் அது விளங்குகிறதா? அப்படியானால் “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). வேதாகமம் முழுவதையும் அவள் அவிசுவாசிக்கவில்லை. நீங்கள், “நான் வேதாகமம் முழுவதையும் விசுவாசிப்பதில்லை, அதில் பாதி மாத்திரமே விசுவாசிக்கிறேன்” எனலாம். அவள் அதை முழுவதுமாக, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. அது மாத்திரமல்ல, கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த அந்த ஒன்றாயிருத்தல் முடிவடைந்தது. கணவனுக்கும், மனைவிக்கும், தேவனுக்குமிடையே அந்த இணைப்பு இல்லாமல் போனால் எந்த ஒரு மணவாழ்க்கையும் அது இருக்க வேண்டிய விதத்தில் இருக்க முடியாது என்பது என் கருத்து. அது உண்மை. அந்த இணைப்பு இல்லாமல் போனால் அவர்கள் உலகில் பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை முறை தவறினவர்களாக்கி, அவர்களுக்கு சிகரெட்டு, விஸ்கி, போன்றவைகளைக் கொடுத்து, அவர்களுக்கு முன்னால் சீட்டு விளையாடி மது அருந்துவார்கள். அவர்கள் தங்கள் விவாக பொருத்தனைக்கு எவ்வளவு உண்மையாயிருந்த போதிலும், அது உடலுறவு சம்பந்தமானது. அது மாம்சம். ஆனால் அங்கு ஒரு ஆவி உள்ளது, பாவியாகிய அப்பாவின், அம்மாவின் ஆவி, அவர்கள் எவ்வளவு தான் தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையாயிருந்த போதிலும், அந்த இணைப்பு தவறாகவே இருக்கும். 44நீங்கள், “தங்கள் பிள்ளைகளுக்கு அதை கற்றுக் கொடுக்காத மனிதரையும் ஸ்திரீகளையும் நான் அறிவேன், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல” எனலாம். அவர்கள் பிள்ளைகளை கிறிஸ்துவினிடம் நடத்தாததே அவர்கள் செய்யும் பெரியத் தவறு - கிறிஸ்துவினிடம் நடத்தாதது, பாருங்கள். அது இல்லாமல் உங்களால் சரியான இணைப்பை பெற முடியாது. ஐக்கியம் முறிந்துவிடுகிறது... ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்த ஐக்கியம் முறிந்தவுடனே... அவர்கள் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியம் முடிந்தவுடனே, அவர்கள் இருவருக்கும் இருந்த ஐக்கியம் முறிந்துவிட்டது. கவனியுங்கள்! எந்த ஒரு சபையும் தேவனிடம் கொண்டுள்ள தன் ஐக்கியத்தை முறித்துக் கொண்டு தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டால், விசுவாசிகளிடையே உள்ள ஐக்கியம் முறிவடைகிறது. நாம் ஒரே இருதயத்தோடும், ஒரே சிந்தையோடும், ஒருமனதோடும் விசுவாசிக்க வேண்டும். பெந்தெகொஸ்தே நாளன்று இணைப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்கள் அவ்விதம்தான் இருந்தார்கள்; ஒரே இருதயத்தோடும், ஒரே சிந்தையோடும், ஒருமனதோடும். நீங்கள் சபையை ஒரு ஸ்தாபனமாகச் செய்துவிட்டால், அதில் எல்லாவிதமான பாவனைகளும் உண்டாகும். ஏனெனில் அதிலுள்ள சில பிள்ளைகள் தேவனை விசுவாசித்து சரியானதை பற்றிக் கொண்டிருப்பார்கள், மற்றவர்களோ வேறு வழியில் செல்வார்கள். எனவே உங்களிடையே ஐக்கியம் இருக்காது. ஆம். 45என்ன? ஏவாளின் சிந்தனை மாறினது. ஓ, ஆம், அவளுடைய சிந்தனை மாறினது. அவள் கணவனிடம் கொண்டிருந்த ஐக்கியம் சரியாக இருக்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்தினர். பாருங்கள்? அவளுடைய சிந்தனை உண்மையில் மாறினது. ஏன்? அவளுக்குள் பிசாசின் ஜீவன் குடி கொண்டுவிட்டது. முற்றிலுமாக! அவள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்தவுடனே பிசாசின் ஜீவனை ஏற்றுக் கொண்டாள். ஏனெனில் அவள் அவனுடைய போதகத்தை ஏற்றுக் கொண்டாள். இதை நான் மிகவும் வெளிப்படையாக இங்கு கூற முடியும். ஆனால் இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. சபையே, உங்களுக்குப் புரிகிறது என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஏவாள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்து. அது அவளை தேவனிடமிருந்து பிரித்தது. ஏனெனில் அப்பொழுதே பிசாசின் ஜீவன் அவளுக்குள் குடி கொண்டுவிட்டது. அவள் அவன் கூறின பொய்யை விசுவாசித்தாள். “இந்த விருட்சம் நல்லது”, என்று அவன் கூறினான், அவள் அவனுடன் அதில் பங்கு கொண்டாள். அது உண்மை. 46இதை நான் மறைத்து வைக்கப் போகிறதில்லை, இதை எப்படியும் கூறிவிடப் போகிறேன். என்னால் முடியவில்லை. அன்றொரு நாள் கலிபோர்னியாவில், இல்லை அரிசோனாவில் உள்ள ஒரு சபையில் நான் போதித்துக் கொண்டிருந்தேன். தேவனுடைய ஆவியின் ஏவுதலால் நான் கூறின எதையும் வாபஸ் வாங்கிக் கொள்ளும் அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை. எத்தனையோ போதகர்கள் சாத்தானின் வித்து, அதாவது சர்ப்பத்தின் வித்து என்னும் விஷயத்தில் என்னை கேள்வி கேட்டிருக்கின்றனர். “அந்த ஸ்திரீ ஆப்பிள் பழத்தை தின்றாள்”, என்றனர். ஹ! காயினும் கூட அப்படித்தான் நினைத்து நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான். பாருங்கள், அது ஆப்பிள் பழம் அல்ல! அவள் நிர்வாணி என்று எப்படி அறிந்தாள்? அதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது உண்மையில் உடலுறவு விவகாரம். நிச்சயமாக அது அப்படித்தான். அவள் நிர்வாணி என்று அறிந்தாள். அவளுக்கு சர்ப்பத்தின் மூலம் ஒரு பிள்ளை உண்டானது. அப்பொழுது அது ஊரும் பிராணியாய் இருக்கவில்லை. அது எல்லா காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளதாய் இருந்தது. அது மனிதனுக்கு அடுத்தபடியாய் இருந்தது. மனிதன் குரங்குகளையும் மனிதக் குரங்குகளையும் ஆராய்ச்சிச் செய்யலாம், ஆனால் அவனால் மனிதனுக்கும் மிருகத்துக்குமிடையே இருந்த இணைப்பை கண்டுபிடிக்க முடியாது. அதோ அது, அது புரிந்த பொல்லாத செயலின் நிமித்தம் தேவன் அதை சபித்தார். அதனால் பழைய நிலைக்கு மீண்டும் வர முடியாது. அதன் வித்து மாத்திரமே மனித இரத்தத்துடன் கலக்கும். 47அன்றொரு நாள் நான் நின்று கொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் சில கத்தோலிக்கர்கள் இருந்தனர். அப்பொழுது நான், “கத்தோலிக்கரே, நீங்கள் இயேசுவை, அதாவது மரியாளை 'தேவனுடைய தாய்' என்று அழைக்கிறீர்களே. தேவன் நித்தியமானவராயிருக்க, அவருக்கு எப்படி ஒரு தாய் இருக்க முடியும்? அவருக்கு ஒரு தாய் இருக்க முடியாது. இயேசு மரியாளுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவர் ஒரு... அவள் அவரை பொரித்த பொரிக்கும் கருவி (incubator) மாத்திரமே” என்றேன். நல்லது, அவர்கள் எப்பொழுதும் கொண்டிருந்த கருத்து; நானும் கூட, தேவன் மரியாளை நிழலிட்டு ஒரு இரத்த அணுவை அவளுக்குள் வைத்தார், ஆனால் முட்டை அவளிடமிருந்து வந்தது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிக் கொண்டிருந்தேன். முட்டை ஸ்திரீயிடமிருந்து வர வேண்டுமானால், அந்த முட்டை குழாயின் வழியாக கர்ப்பப் பைக்கு வருவதற்கு ஒரு உடல் உணர்ச்சி உண்டாக வேண்டும். நீங்கள் தேவனை என்னவாக செய்துவிடுகிறீர்கள் என்பதைக் காண்கிறீர்களா? நீங்கள் அவரை உடலுறவு குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறீர்கள். இரத்த அணுவை சிருஷ்டித்த தேவன் முட்டையையும் சிருஷ்டித்தார். டாக்டர், ஆண் பெண், இருவரின் தாதுக்களும் இருக்க வேண்டும். அது உண்மை. 48நல்லது, மரியாள் முட்டையை உற்பத்தி செய்திருந்தால், தாவீது, “என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன், அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன்” என்று எப்படி கூறியிருக்க முடியும்? ஸ்திரீயின் முட்டை கிறிஸ்துவுக்குள் இருந்திருக்குமானால், உயிர்த்தெழுதலின் போது அந்த நபர் ஒரு பாகத்தை வகித்திருப்பார். ஆனால் அது முழுமையாக தேவனுடைய பாகமாயிருந்தது. தேவன் ஏன் உடலுறவினால் ஒரு நபருக்கு உண்டான பாகத்தை உயிரோடெழுப்பினார்? உயிர்த்தெழுதலின் போது அவருடைய சரீரம் அழிவைக் காண அவர் ஏன் விடவில்லை? ஏனெனில் அவர் பரிசுத்தராயிருந்தார். மரியாளிடமிருந்து முட்டை தோன்றி குழாயின் வழியாக கர்ப்பப் பையை அடைந்து மரியாள் கருத்தரித்தலில் சம்பந்தப்பட்டிருப்பாளானால், அவர் எப்படி பரிசுத்தராயிருக்க முடியும்? அந்த முட்டையை அங்கு கொண்டு வருவதற்கு ஒரு உணர்ச்சி உண்டாயிருக்க வேண்டும். அப்பொழுது அந்த ஸ்திரீ ஒரு பாகத்தை... நல்லது, நீங்கள், “ஒருக்கால் முட்டை ஏற்கனவே கர்ப்பப் பையில் இருந்திருக்க வகையுண்டு” எனலாம். அப்படியானால், இங்கு என்ன நடக்கிறதென்று பாருங்கள், அவர் முழுவதும் தேவன் அல்ல, அவர் மனித சம்பந்தம் கொண்டு பிறந்தவர். அப்படியானால் ஸ்திரீக்கு அதில் ஒரு பாகம் இருந்ததாக ஆகிவிடுகிறது. மரியாளிடமிருந்து தோன்றும் ஒரு முட்டை அவளுடைய தாய், அவளுக்கும் தாய், அவளுக்கும் தாய் ஆகியோரிடமிருந்து புறப்பட்டு வந்து, அதில் மானிடம் கலந்து, மானிட விருப்பம் கொண்டதாயிருக்கும். எனவே அது அவ்விதம் இருந்திருக்க முடியாது. இல்லை, ஐயா! நான், “அவர்... அவள் ஒரு பொரிக்கும் கருவி மாத்திரமே”, என்றேன். 49ஒரு கழுகு இடும் முட்டையை நீங்கள் கோழியின் கீழ் வைத்து அடைகாக்க வைப்பது போன்றது. கோழி அதை பொரிக்கச் செய்யும். அது ஒரு பொரிக்கும் கருவி மாத்திரமே. அந்த கழுகுக் குஞ்சுக்குள் கோழியின் ஒரு அணுவும் கூட கிடையாது. இல்லை, ஐயா. கோழி ஒரு... ஒரு பறவையின் முட்டையின் மேல் ஒரு நாய் குட்டியைக் கட்டி உட்கார வைத்தால், அது ஒரு பறவையை பொரிக்கும் - நாய்குட்டி அப்படி செய்யும். அதன் சரீரத்திலுள்ள வெப்பம் முட்டையைப் பொரிக்கச் செய்கிறது. இயேசுவின் விஷயத்திலும் அவ்விதமே. மரியாள் பொரிக்கும் கருவி மாத்திரமே. தேவன் மற்ற ஸ்திரீகளைப் போல இவளையும் உபயோகித்தார். அவள் ஒரு கன்னிகை. இதற்கு முன்பு அவளுக்கு பிள்ளைகள் உண்டாயிருக்கவில்லை. அவர் ஒரு கன்னிகையின் கர்ப்பத்துக்குள் புகுந்தார். ஆனால் சிருஷ்டி கர்த்தராகிய தேவன் முட்டை கிருமி இவ்விரண்டையும் சிருஷ்டித்தார். எனவே அது பரிசுத்தமான கர்ப்பந்தரித்தல் (immaculate conception). 50நான் வெளியே வந்தேபாது, அந்த சகோதரர் எனக்காக காத்திருந்தனர். அவர்கள், “சகோ. பிரான்ஹாமே, உம்மை ஒன்று கேட்க விரும்புகிறோம். நீர் பிடிபட்டுவிட்டீர்” என்றனர். நான், “சரி, நான் பிடிபடவே விரும்புகிறேன்” என்றேன். அவர்கள், “நீர் சர்ப்பத்தின் வித்தைக் குறித்து பிரசங்கம் செய்த போது, இந்த தவறைச் செய்தீர். அந்த முட்டை சொந்தமானது... தேவன் அந்த முட்டையை சிருஷ்டித்ததாக நீர் கூறினர். ஆனால் ஆதியாகமம்: 3-ம் அதிகாரத்தில் தேவன். சர்ப்பத்தின் வித்துக்கும் மரியாளின் வித்துக்கும் பகை உண்டாக்குவதாக கூறுவதைக் காண்கிறோமே” என்றனர். நான், “ஓ, என்னே!” என்று எண்ணினேன். நான் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பிரசங்கம் செய்த எதையுமே வாபஸ் வாங்கினதில்லை. ஏனெனில் என் சுயபுத்தியின் மேல் நான் சாய்ந்திருக்கவில்லை. என் புரிந்து கொள்ளுதல் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது தவறு. அது தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அதை விட்டுவிட வேண்டும், அது தவறு. செய்ய வேண்டியது அதை கிழித்து எறிந்துவிடுவதே. என் இருதயத்தில் நான், “பரலோகப் பிதாவே, எனக்குதவி செய்யும். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த மனிதன் மரியாளின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவதாக கூறப்பட்டுள்ள வேதவசனத்தை சுட்டிக் காட்டுகிறார்” என்று ஜெபித்தேன். 51இப்பொழுது, இதோ அது! பரிசுத்த ஆவி அசைவாடினார். மரியாளை நிழலிட்டு சிருஷ்டித்த அவர், வாயில் வார்த்தையையும் அருள் முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அனுதினமும் அவரைச் சார்ந்திருக்கிறேன். அது எப்பொழுதும் அவருடைய வார்த்தையே. அவர் தம்முடைய வார்த்தைக்கு முரணான எதையும் கூற முடியாது. நீங்கள் அபிஷேகம் பெற்றுள்ளதாக கூறிக் கொண்டு, தேவனுடைய சத்தியத்துக்கு விரோதமாக பிரசங்கித்தால், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அல்ல. ஏனெனில் பரிசுத்த ஆவி உங்களை நிழலிடும்போது, அவர் அதே காரியத்தை கொண்டு வருகிறார். ஏனெனில் அது வார்த்தை. 52கவனியுங்கள். என்ன நடந்தது? நான் அவர்களிடம், “சரி, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஸ்திரீக்கு வித்து இல்லை. அவர் 'முட்டை' என்று கூறவில்லை. அவர் 'உன் வித்து' என்று தான் கூறினார். அவளுக்கு வித்து கிடையாது” என்றேன். வித்து உண்டாவதற்கு ஒரு இணைப்பு ஏற்பட வேண்டும். டாக்டர், அது சரியா? அது ஏற்பட வேண்டியது அவசியம். இங்கு பழச்சதை மாத்திரம் உண்டாயிருந்து அதில் ஜீவன் இல்லாமல் போனால், நீங்கள் அதை நட்டால், அது வளராது. அது அங்கேயே கிடந்து அழுகிப் போகும். எனவே பாருங்கள், முழுவதுமே இணைப்பு தான். நான் இப்பொழுது கிறிஸ்துவையும் அவருடைய சபையையும் குறித்துக் கூற முயல்கிறேன். அது ஒரு இணைப்பு. பாருங்கள், ஸ்திரீ தன்னுடைய வித்தாயிருப்பாளானால் அவளுக்கு ஒரு ஆண் அவசியமில்லை. அவளுக்கு தானாகவே பிள்ளை உண்டாகும். ஆனால் அது அப்படியல்ல. அவள் ஆணுடன் உறவு கொள்ளும் வரைக்கும் பிள்ளை உண்டாக முடியாது. ஏனெனில் வித்து உண்டாக இருவர் அவசியம். அது சரியா? ஜீவன் இல்லாத ஒரு விதையை நட்டு என்ன நேரிடுகிறதென்று பாருங்கள். இந்த ஸ்திரீ நாய் குட்டிகளைப் பெற்றதாக இங்கு கூறிக் கொள்கிறார்களே. பாருங்கள், அது உயிரோடிருக்க முடியாது. அது முடியாது. ஏனெனில், (பாருங்கள்), அந்த தாது கலக்காது. 53இப்பொழுது, இதை இப்பொழுது கவனியுங்கள். ஸ்திரீ வித்தல்ல, அவர், “உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்”, என்றார். அவளிடம் அவர், அவரே அவளுக்கு ஒரு வித்தைத் தரப் போவதாகக் கூறினார், உடலுறவின் மூலம் அல்ல, அவர் அவளுக்குள் ஒரு வித்தை சிருஷ்டிக்கப் போவதாக. நீங்கள், “அது அவளுடைய வித்தாகுமா?” எனலாம். ஆம், அவர் அவளுக்கு அதை தந்த பிறகு அது அவளுக்குச் சொந்தமானது. இது என் கண், அவர் இதை எனக்குத் தந்தார். இது என் கண், ஆனால் அவர் தான் இதை எனக்குத் தந்தார். இது என் கை, அவர் இதை எனக்குத் தந்தார். இது என் குரல், ஆனால் அவர்தான் இதை எனக்குத் தந்தார். பாருங்கள்? அவ்வாறே மரியாளுக்குள் இருந்த வித்து... மரியாளுக்கு அதனுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அது தேவன் தாமே அளித்த ஒன்று... 54எனவே ஏவாளுக்குள் இருந்த வித்து சட்ட விரோதமான செயலினால் ஏற்பட்ட இணைப்பின் மூலம் உண்டானது. அது மரணம். அவள் சர்ப்பத்தின் வித்தினால் கர்ப்பமுற்றாள். ஏனெனில் அவள் அதனுடன் வாழ்ந்தாள்... அவள், “சர்ப்பம் என்னை வஞ்சித்தது (beguiled)”, என்று கூறினாள். அது உண்மை. உடனே காயீன் தோன்றினான். ஓ, அவள் தேவனிடமிருந்து ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டதாகக் கூறினாள். நிச்சயமாக, பிறக்கும் எந்த குழந்தையும், அது முறை தவறின் செயலினால் பிறந்தாலும் அல்லது எவ்விதம் பிறந்தாலும், தேவனுடைய கிரியையினால் மாத்திரமே தோன்ற முடியும். அவர் ஒருவர் மாத்திரமே ஜீவனை உற்பத்தி செய்ய முடியும். நிச்சயமாக, அது உண்மை. பாருங்கள், அவள் ஏற்கனவே தாய்மைப் பருவம் அடைந்தாள். அது ஒருபோதும்... அது செய்த ஒன்றே ஒன்று, சர்ப்பத்தின் வித்தைக் குறித்த விஷயத்தை தெளிவாக்கியது. “என் வார்த்தைக்கு விரோதமாக நீ புரிந்த சட்ட விரோதமான செயலின் விளைவினால் நீ கர்ப்பமுற்று சர்ப்பத்தின் வித்தை உனக்குள் கொண்டிருக்கிறாய். ஆனால் நான் பரிசுத்த கர்ப்பந்தரித்தலின் மூலம் உனக்கு ஒரு வித்தைக் கொடுப்பேன். அந்த வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும். அவருடைய தலை அவனுடைய குதிங்காலை நசுக்கும்” ஆமென். தேவனிடம் அதைவிட்டு விடுங்கள். அது அவருடைய வார்த்தையாயிருந்தால், அவர் அதை நிறைவேற்றுவார். 55ஆகையால் தான் நீங்கள் தேவனுடன் இணைப்பை பெற்றிருக்க வேண்டும். அந்த இணைப்பை பெற்றிருந்த காரணத்தால் தான் பேதுரு, இயேசு “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று சொன்ன பிறகு பெந்தெகொஸ்தே நாளன்று, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான். ஏனெனில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதை பார்த்தீர்களா? அதற்கு ஒரு இணைப்பு அவசியம். பவுல் பேதுருவைக் கண்டதில்லை, ஆனால் அதே பரிசுத்த ஆவி, அதே இணைப்பு (மகிமை!) அவன் அதையே கூறும்படி செய்தது. “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர். “நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?”, “யோவான் கொடுத்த ஞானஸ்நானம்”. அப்படியானால், “நீங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டும்”. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அதுஎன்ன? இணைப்பு, தேவன் கூறுவதையே கூறுதல். அது தான் அறிக்கை செய்தல் (Confession), அறிக்கை செய்தல் என்றால், “அதையே கூறுவது”, அவர் நாம் அறிக்கை செய்யும் பிரதான ஆசாரியராயிருந்து, அவர் கூறியுள்ளதை செய்கிறார். அது சத்தியம் என்று நாம்உரைக்கிறோம், அவர் அதை செயல்படுத்துகிறார். ஓ, என்னே! பார்த்தீர்களா? அது தான் கர்ப்பந்தரித்த முறை. 56இப்பொழுது கவனியுங்கள், ஏவாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இருந்த இணைப்பு எவ்வாறு முறிவடைந்ததென்று. பாருங்கள், தேவன், “ஆதாமே, இதை நீ எப்படி செய்யலாம்?” என்று கேட்ட மாத்திரத்தில், அவன் தன் மனைவியின் சார்பில் பேசுவதற்கு பதிலாக. அவள் மேல் பழியைச் சுமத்தி, “நீர் தந்த ஸ்திரீயானவள்”, என்றான். இணைப்பு முறிவடைந்தது. பாருங்கள்? அவள் என்ன செய்தாள்? தன் கணவனை நேசித்து உண்மையை கூறுவதற்கு பதிலாக, அவள் பொய் சொன்னாள். அவள், “அவர் நிரபராதி, நான் தான் அவருக்குக் கொடுத்தேன்” என்று சொல்லியிருக்க வேண்டும். ஆமென். வேதம், “அவள் அதை தன் புருஷனுக்குக் கொடுத்தாள்” என்றுரைக்கிறது. அவள், “அந்த மனிதன் நிரபராதி. நான் தான் அவருக்குக் கொடுத்தேன், அவர் அதை புசித்தார். அவருக்குக் கொடுத்தது நானே” என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவள் பழியை சர்ப்பத்தின் மீது சுமத்தினாள். 57இன்றைக்கும் அவர்கள் செய்ய முயல்வது அதுவே, பாருங்கள், கணவன் மனைவிக்கு இடையே இருந்த இணைப்பு முறிவடைந்தது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஐக்கியம் முறிவடைந்தது. அவர்கள் ஒன்றாயிருந்த நிலை முறிவடைந்தது. அவர்களுக்கும் தேவனுக்கும் இடையே இருந்த ஒன்றாயிருத்தல் முறிவடைந்தது. முழுவதுமே நாசமடைந்துவிட்டது. ஏன்? ஒரே ஒரு வார்த்தையை அவிசுவாசித்ததன் காரணமாக. ஓ, சகோதரனே, என்னே! ஆம், அவள் உண்மையைக் கூறியிருக்க வேண்டும். அவளும் அவளுடைய கணவனும் ஒன்றாயிருந்த நிலை போய்விட்டது, அவர்கள் தேவனுடன் கொண்டிருந்த ஒன்றாயிருத்தல் போய்விட்டது. தேவனுடைய வார்த்தை முழுவதையும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு சபைக்கும் அது தான் சம்பவிக்கும். அது எனக்குப் பிரியம், உங்களுக்கும் அல்லவா? 58கவனியுங்கள், அவளுடைய முதற்பேரான காயீன் ஒரு கொலைகாரன், பொய்யன், வஞ்சகன், பொறாமையுள்ளவன், தன் சகோதரனின் மேல் பொறாமை கொண்டவன். அவனுடைய சகோதரன் தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொண்டான். தேவன் ஒரு பலியைச் செலுத்தி அவர்களுக்கு பாவநிவாரணம் அளித்தார். சாத்தானின் அறியாமையை இப்பொழுது கவனியுங்கள். அவன் வேறொன்றை அதற்கு பதிலாக அளிக்க முயன்றான். தேவன் அவர்களுக்கு தோல் உடைகளை அளித்ததாக வேதம் உரைக்கிறது. தோலைப் பெற ஒன்று செத்தது. ஆதாம் தனக்கு அத்தி இலைகளினால் உடைகளை உண்டாக்கிக் கொள்ள முயன்றான். ஆனால் தாவர ஜீவன் உபயோகமாயிருக்கவில்லை, நடமாடும் ஒரு ஜீவன் சாக வேண்டியதாயிருந்தது. எனவே அவர் ஒரு தாழ்வான வர்க்கத்திலிருந்த ஒரு ஜீவனைக் கொன்று, “என்றாவது ஒரு நாள் என் சொந்த ஜீவன் உங்களுக்காக கொடுக்கப்படும், அது மறுபடியுமாக இந்த இணைப்பை ஏற்படுத்தும் உண்மையான ஜீவனாயிருக்கும்” என்றார். தேவனுக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம். “பாருங்கள், இதோ ஒரு ஆட்டுக் குட்டியின் ஜீவன். அதன் தோலினால் உன்னை சுற்றிக் கொண்டு உன் நிர்வாணத்தை மறைத்துக் கொள்”, “நீங்கள் ஆப்பிள் பழங்களைப் புசிக்கக் கூடாது. அர்த்தமற்றது!” பாருங்கள்? “இந்த தோலினால் உன்னைச் சுற்றிக் கொள்க”, அவர் ஒன்றைக் கொல்ல வேண்டியதாயிற்று. 59சாத்தானின் குமாரன், ஆதாம் விரும்பினபடி அவர்கள் தோன்றவில்லை. இருப்பினும் நீங்கள் அவ்வாறு கூற நினைக்கிறீர்கள். அவன் சாத்தானின் குமாரன். ஏனெனில் ஆதாம் தேவனிடத்தில் கொண்டிருந்த தூய்மை இத்தகைய ஒருவனைத் தோன்றச் செய்திருக்காது. கவனியுங்கள், சாத்தானின் குமாரன் பாவ பரிகாரத்துக்காக இன்று அநேகர் ஆதாமும் ஏவாளும் புசித்ததாகக் கருதும் ஆப்பிள் பழங்களையும் நிலத்தின் கனிகளையும் பாவ பரிகாரத்துக்காக காணிக்கையாக கொண்டு வந்தான். நீதிமானாகிய ஆபேல் என்ன செய்தான்? அது ஆப்பிள் பழங்கள் புசித்ததனால் விளைந்த ஒன்றல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் தன் தாய் தகப்பனின் இரத்தமாயிருந்தான், ஆதாமின் ஜீவனைக் கொண்டவனாயிருந்தான். எனவே அவன், தேவன் செய்தது போல் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். அல்லேலூயா! அவன் தேவனுடைய வார்த்தையைக் கைக் கொண்டான். காயீன் அவன் மேல் பொறாமை கொண்டான். இன்றைக்கும். அவ்வாறேயுள்ளது! இரத்தக் காணிக்கையை கொண்டு வாருங்கள். தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ அதில் நிலைத்து நில்லுங்கள். அநேகர் இரத்த காணிக்கையை விசுவாசிக்கக் கூடும், நிச்சயமாக, ஆனால் வார்த்தையில் காணப்படும் வேறொன்றை அவர்கள், “ஓ, நான் நம்ப மாட்டேன். உ, ஊ, அது வேறொரு காலத்துக்குரியது”, என்கின்றனர். அதே பழைய பிசாசு, அதே பழைய தந்திரம்! அதற்கு நாம் வரும் வரைக்கும் பொறுத்திருங்கள். கவனியுங்கள். அவன் அதே விதமாக வருகிறான். 60காயீன் தன் மூடத்தனமான வழிகளில், மூடத்தனமல்ல, தந்திரமான வழிகளைக் கொண்டவனாய், வஞ்சிக்கப்பட்டு, கனிகளைக் கொண்டு வந்தான். ஆதாம்... ஆபேல் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டு, ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். தேவன், “ஆதாமே... ஆபேலே , இதுதான் சரியானது. நீ என் வார்த்தையைக் கைக்கொண்டாய். காயீனே, இது சரியல்லவென்று உனக்குத் தெரியும்... உன் தகப்பன் செய்ய முயன்றது போல், நான் எப்பொழுது அத்தி இலைகளை அளித்தேன்? நீ இங்கு அத்திப் பழங்கள், திராட்சைப் பழங்கள், ஆப்பிள் பழங்கள் போன்ற ஏதோ பழங்களை கொண்டு வந்திருக்கிறாய். உன் தகப்பன் மரத்திலிருந்து இலைகளைப் பறித்து பாவநிவாரணம் பெற முயன்றான். நீ மரத்தின் கனிகளைக் கொண்டு வந்திருக்கிறாய். அதுவல்ல! அது இரத்தத்திலிருந்த ஜீவன்” என்றார். 61ஓ, தேவன் அதைக் கொண்டு வந்து, “இதோ அது” என்றார். காயீன் சரியானதை காணிக்கையாக கொண்டு வந்தான். அவனுடைய சகோதரன் அவன் மேல் பொறாமை கொண்டான். அவன் என்ன செய்தான் என்று பாருங்கள், அவன் தன் சகோதரனைக் கொலை செய்தான். தேவன் வேறொருவனை எழுப்பினர் கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலைப் போல் கவனியுங்கள். பிறகு தேவன், அவருடைய அவர் ஆதாம். ஏவாளிடம் கூறினது என்ன? “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்”, மானிட வர்க்கத்தை பூமியின் எல்லா பாகங்களிலும் பரப்பி, அவர் தனிப்பட்ட நபர்களுடன் ஈடுபட்டு அவர்களை திரும்பவும் ஒன்று சேர்க்க. ஜனங்களுடன், தனிப்பட்ட நபர்களுடன், ஒவ்வொருவராக ஈடுபடுதல். ஆனால் அவர்கள் அந்த வழியை விரும்பவில்லை. இந்த வெளிப்பாட்டை காணத் தவறாதீர்கள். தேவனே, இதை காணும்படி செய்யும். நான் இதைக் காணும் வகையில் நீங்களும். காண்பீர்களாக. 62பாருங்கள், அதுவல்ல, தேவன் ஒரு கூட்டம் ஜனங்களுடன் ஈடுபடுவதில்லை. தேவன் ஸ்தாபனத்துடன் ஈடுபடுவதில்லை. அவர் உங்களுடன், தனிப்பட்ட நபர் என்னும் முறையில் ஈடுபடுகிறார். நாம் தனிப்பட்ட நபர்களாக பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படுகிறோம். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாம் பெறும்போது, நாம் ஒருமித்து அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். நாம் தனிப்பட்ட நபர்களாக, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறோம். தேவன் ஒவ்வொருவருடன் ஈடுபடுதல். அதுவே அவருடைய நோக்கமாயிருந்தது. பூமியின் எல்லா பாகங்களிலும் அவர்களைப் பரவச் செய்து, தனிப்பட்ட நபருடன் ஈடுபடுதல்... ஆனால் அதற்கு பதிலாக, என்ன நேர்ந்தது? தேவன் காயீனின் ஜனங்களை சேத்தின் ஜனங்களிடமிருந்து பிரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் காயீனை அனுப்பிவிட்டார். அவர் தம் சபையுடன் ஈடுபடுவதற்கென அவர்களை வேறு பிரித்தார். கவனியுங்கள், காயீன் பிரிக்கப்பட்டான். இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஏவாளின் பொல்லாத காயீனை ஆதாமின் பரிசுத்த சேத்தினிடமிருந்து பிரித்தார். ஓ! அவர். அவ்விதம் செய்தாரா? சட்ட விரோதமான ஒரு செயலின் மூலம் இந்த ஸ்திரீ... வேறொருவனுடன் வாழ்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றாள். தேவன் அந்த பிள்ளையையும் அவனுடைய சந்ததியையும், நீதியும் பரிசுத்தமுள்ள அவருடைய மனிதனிடமிருந்தும் அவனுடைய பிள்ளைகளிடமிருந்தும் வேறு பிரித்தார். இன்றைக்கும் அதுவே நடக்கிறது, பிரித்தெடுத்தல், பிரித்தெடுக்கப்படுதல். அவர்கள் ஒற்றுமையாயில்லை என்பதை கண்டார். அவர்களால் இணைந்திருக்க முடியாது. இரவு பகலுடன் இணைந்திருக்க முடியுமா? விசுவாசி அவிசுவாசியுடன் இணைந்திருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசிக்கும் ஒருவன் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் விசுவாசிக்கும் ஒருவனுடன் இணைந்திருக்க முடியுமா? தேவனுக்கு பிரிக்கப்பட்டவர்கள் தேவை. 63காயீன் ஏவாளின் குமாரன்; அவள், “ஒரு குமாரனைப் பெற்றேன்” என்றாள். ஆனால் சேத் ஆதாமின் குமாரன். தேவன் அவர்களை வேறு பிரித்தார். ஏனெனில் அவர்... அவர்கள் கெடுத்துவிடுவார்கள். காயீனின் பொல்லாத பிள்ளைகள் சேத்தின் நல்ல பிள்ளைகளை கெடுத்துவிடுவார்கள். அது உண்மை. இப்பொழுது கவனியுங்கள்! ஏவாள் தேவனுடைய ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்து, அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வெவ்வேறாக வாழ வேண்டுமென்று கூறின அதே பழைய பிசாசு அவர்கள் மத்தியில் புகுந்து அவர்களை மறுபடியும் ஒன்று சேர்த்தான். உங்களுக்கு விளங்குகிறதா? நீங்கள் விளங்கிக் கொண்டால் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவன் ஒரு தவறான இணைப்பின் மூலம் அவர்களை ஒன்று சேர்த்தான்... அது தேவனுடைய திட்டத்துக்கு மாறான செயல். என்ன நடந்தது? அவன் எவ்வாறு அதை செய்தான்? “தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளைக் கண்டு”, என்று வேதாகமம் ஆதியாகமத்தில் உரைக்கிறது. தேவ குமாரர், அதாவது சேத்தின் குமாரர் மனுஷ குமாரத்திகளாகிய காயீனின் குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டனர். உ - ஊ! அவர்கள் என்ன செய்தனர்? அவர்களுடைய அழகில் மயங்கினர். “அவர்கள் செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு”, அழகின் காரணமாக இருவரும் இணைந்தனர். 64இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது! சகோதரரே, இங்கு பாருங்கள். பெந்தெகொஸ்தே பலவீனரே, தேவன் உங்களைப் பிரித்தெடுத்து ஸ்தாபனமில்லாதவர்களாகச் செய்தார். நீங்கள் பெந்தெகொஸ்தேயை ஸ்தாபனமாக்க முடியாது. அவர் உங்களைத் தம்முடைய ஜனங்களாக அனுப்பினார், ஆனால் நீங்கள் அழகிய பெரிய கட்டிடங்களையும் வேத சாஸ்திரத்தையும் கண்டு பெரிய பள்ளிக் கூடங்களை உண்டாக்கிக் கொண்டீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் தேவனுடைய பிள்ளைகளை, கத்தோலிக்க மார்க்கத்தை அஸ்திபாரமாகக் கொண்ட ஸ்தாபனத்தில் மறுபடியும் இணைத்தீர்கள். அழகான பெரிய சபை கட்டிடங்கள், நன்றாக உடுத்த ஜனங்கள் நகரத் தலைவர் மற்றும் உயரிய மக்கள் வருகின்றனர். சிறப்பாக உடுத்தவர்கள், சிறந்த கல்வி பயின்றவர். உயர்ந்த வேத சாஸ்திர மேதைகள், எல்லோரும் மிகவும் உயர்ந்த உடைகளை உடுத்து வரும் இடத்துக்கு எப்படி வருவதென்று அறிந்திருத்தல், போதகர் மிகவும் அழகான ஓரிடத்தில் நின்றிருத்தல். அது என்ன? தேவன் கண்டனம் செய்தவைகளை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பெந்தெகொஸ்தே சபையை எடுத்து (தேவனே, இது ஒலிநாடாக்களில் பதிவாகட்டும்) அதை ஒரு ஸ்தாபனத்துடன் இணைத்துவிட்டீர்கள். தேவன் அது இணைவதை விரும்பவில்லை, அது தனியாக இருக்க வேண்டுமென்றே விரும்பினார்; உலகத்துடன் இணைய அவர் விரும்பவில்லை... 65ஏவாள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும் படி செய்து அவளுக்குத் தீங்கிழைத்த அதே பழைய பிசாசு, சேத்தின் குமாரரை எடுத்து, அவர்கள் காயீனின் அழகான குமாரத்திகளைக் காணும்படி செய்து அவர்களை இணையச் செய்தான். அவர்கள் நாத்தீகர் அல்ல, அவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இல்லை, இல்லை. அவர்கள் விசுவாசிகள். அவர்கள், “ஒருக்கால், கர்த்தர் ஏதாவதொன்றைச் செய்யக்கூடும்”, “ஓ, இது அப்படித்தான்” என்று அவர்கள் எண்ணினர். அவர்கள்... அவர்கள் சரியான ஒன்றைச் செய்வதாக எண்ணினர். தேவன் என்ன செய்ய வேண்டியதாயிற்று? முழுவதையும் அழித்துவிட வேண்டியதாயிற்று. தவறான ஒரு இணைப்பு! அவர் வெள்ளத்தை அனுப்பி அவர்கள் அனைவரையும் அழித்துவிட வேண்டியதாயிற்று. அந்த தவறான இணைப்பின் நிமித்தம் நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வந்தது. தவறான இணைப்பின் காரணமாகவே நியாயத்தீர்ப்பு ஏதேனைத் தாக்கினது. இல்லை, இல்லை... சர்ப்பத்துக்கு வித்து இருந்தது. உங்களுக்கு அவமானம். 66தவறான இணைப்பு பூமியின் மேலும் ஏதேனில் ஆதாம் ஏவாளின் மேலும் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது. தவறான இணைப்பு தேவனுடைய நியாயத்தீர்ப்பாகிய வெள்ளத்தை பூமியின் மேல் கொண்டு வந்தது. ஏனெனில் காயீனின் குமாரத்திகள் தேவ குமாரருடன் சல்லாபம் செய்த போது, இவர்கள் மயங்கி, ''அவர்களுடன் இணைந்தனர். பார்த்தீர்களா, தவறான இணைப்பு“ ஒன்றுமே நடக்காது. தேவன் என்ன செய்தார்? அருமையான நோவாவையும் அவன் வீட்டாரையும் தவிர மற்ற அனைவரையும் அழித்துபோட்டார். அதன் பின்பு நோவாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த ஆவிக்குரிய நோவாவின் வீட்டார், முதலாவதாக என்ன தெரியுமா? மனிதரின் குமாரர் ஒருவர் மேல் ஒருவர் சார்ந்திருக்கத் தொடங்கினர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள், “நாம் அவிசுவாசிகள் அல்ல, நாமனைவரும் தேவனை விசுவாசிக்கிறோம்” என்றனர். எனவே அவர்கள் ஒரு தலைவனை, நிம்ரோத் என்னும் பெயருடைய ஏதோ ஒரு பெரிய தலைமை பேராயரைத் தெரிந்து கொண்டு, ஒரு கோபுரம் கட்டினர். அவர்கள் அவிசுவாசிகள் அல்ல, பரலோகம் என்னும் ஒன்றுண்டு என்று அவர்கள் விசுவாசித்தனர். நரகம் என்னும் ஒன்றுண்டு என்றும் அவர்கள் விசுவாசித்தனர். நியாயத்தீர்ப்பு உண்டென்று அவர்கள் விசுவாசித்தனர். ஆனால் தேவ குமாரரர் மனுஷ குமாரத்திகளுடன் தவறான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். மற்றெல்லா இடங்களும் பாபேலுக்கு கப்பம் கட்ட வேண்டியதாயிற்று. 67அவர்கள், “நாம் என்ன செய்யலாமென்று சொல்லுகிறேன். நாம் அறிவுள்ளவர்கள்” என்றனர். அவர்கள் எங்கிருந்து அறிவைப் பெற்றனர்? பிசாசிடமிருந்து, அது முற்றிலும் உண்மை. ஏவாளைப் போல் அவர்களும் பிசாசிடமிருந்து அறிவைப் பெற்றனர். எனவே அவர்கள், “நாம் ஒரு ஸ்தாபனத்தைக் கட்டிக் கொண்டு தேவனை பிரீதிபடுத்துவோம். நாம் என்ன செய்யலாமென்று சொல்லுகிறேன். நாம் படிக்கட்டுகளைக் கட்டுவோம். நாம் அவைகளின் மேலேறிச் சென்று தேவ தூதர்களுடன் பாடி களிகூர்ந்து, கீழே இறங்கி வந்து நமது இஷ்டப்படி வாழ்வோம்” என்றனர். பிசாசு இப்பொழுதும் உயிரோடிருக்கிறான். பாருங்கள்? அது தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமானது. அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கைக் கொள்ளவில்லை. தேவன் என்ன செய்தார்? அவர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டினர், அது மறுபடியும் ஒரு தவறான செயல். எனவே தேவன் அவர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணி அவர்களைப் பிரித்துவிட்டார். 68தேவன் மறுபடியும் பிரித்தார். அவர் உத்தமும் நீதியுமுள்ள ஆபிரகாமை, பிரித்து அனுப்பி, உன்னை நான் தெரிந்து கொண்டு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவனைப் பிரித்தார். “ஆபிரகாமே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவர்களை விட்டு வெளியே வா. அவன் எல்லாவற்றையும், விடும் வரைக்கும் தேவன் அவனை ஆசீர்வதிக்கவில்லை. அவன் கடைசியாக விட்டுப் பிரிந்தது லோத்து. ”ஆபிரகாமே, வெளியே வா. அவிசுவாசிகளிடமிருந்து உன்னைப் பிரித்துக் கொள். நான் உன்னை தெரிந்து கொண்டு உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்“. என் கட்டளைகளை கைக்கொள்ளும் ஒரு ஜாதியை உண்டாக்குவேன். அவர்களுக்கு இன்னுமொரு தருணத்தை அளிக்கப் போகிறேன். உத்தமமான வயோதிப ஆபிரகாம் புறப்பட்டு சென்று அந்நிய தேசத்திலே சஞ்சரித்தான். ஒவ்வொரு ஆபிரகாமும் அதை செய்கிறான், அந்நிய தேசத்தில் சஞ்சரிக்கிறான். என்ன? முடியாது என்று மனிதன் நினைக்கக் கூடிய ஒரு வாக்குத்தத்தத்தை அவன் விசுவாசித்தான். காயீன் வம்சத்தில் தோன்றின மருத்துவர்கள் அந்நாளில் என்ன கூறியிருப்பார்கள்? “வ்யூ, என்னே, நூறு வயதான கிழவன் தொண்ணூறு வயது கிழவியான தன் மனைவியின் மூலம் பிள்ளை பெறுவதா? என்ன ஒரு கேலித்தனமான செயல்!”, ஆனால் ஆபிரகாமோ தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தான். அதற்கு முரணான எதையும் அது இல்லாதது போல் பாவித்தான். இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த தவறான ஞானஸ்நானங்கள், தவறான உணர்ச்சிகள், தவறான காரியங்கள். அனைத்தையும் இல்லாதது போல் பாவித்து, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து சென்று கொண்டேயிருங்கள். உண்மையானதை நீங்கள் அடையக் கூடாதபடிக்கு இவை உங்களை தடைசெய்யும் இடறல் கல். அது உண்மை. பிள்ளைகளே, முன் செல்லுங்கள். தேவனுடைய வார்த்தை, தேவன் தமது வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். பிசாசு எத்தனை போலியான காரியங்களை அங்கு எறிந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் இன்னமும் உண்மையான வார்த்தையைக் கொண்டிருக்கிறார், அவர் அதை காத்துக் கொள்கிறார். 69ஆபிரகாம் முரணான எதையுமே தவறென்று அழைத்தான். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது ரோமர்: 4-ம் அதிகாரம். தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதையுமே ஆபிரகாம் இல்லாதது போல் எண்ணினான். அது உண்மை. அவன் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாய், வல்லவனாகி, அவனுடைய சரீரம் எவ்வளவு பலவீனமாயிருந்த போதிலும், அது நிறைவேறுவது கூடாத காரியம் என்பது போல் தோன்றின போதிலும், அவன் விசுவாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் பீடத்தை அடைந்து, “அது இப்பொழுதே நிறைவேறாமல் போனால், நான் செய்யப்போவது என்னவெனில்... அதை விசுவாசிப்பதா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை” என்றெல்லாம் கூறவில்லை. ஆபிரகாம் இருபத்தைந்து ஆண்டுகளாக, அது நிறைவேறும் வரைக்கும் அதில் நிலைத்து நின்றான். அது நிறைவேறினது. அது எப்பொழுதும் நிறைவேறும். 70ஆபிரகாமிலிருந்து ஈசாக்கு தோன்றினான்; ஈசாக்கிலிருந்து யாக்கோபு தோன்றினான்; யாக்கோபிலிருந்து கோத்திரப் பிதாக்கள் தோன்றினர். கோத்திரப் பிதாக்கள் எகிப்தில் குடியேறி அங்கு ஒரு ஜாதியாக வளர்ந்தனர். அவருடைய ஜனத்தை அங்கு வளரச் செய்து, சாதனை புரிந்த பின்பு, அவர் என்ன செய்தார்? தேவன் அவர்களை மறுபடியும் பிரித்தார். அவிசுவாசமும் விசுவாசமும் ஒன்றாக இருக்க முடியாது. இல்லை, ஐயா. அவர் தமக்கு சொந்தமானவர்களை மறுபடியும் பிரித்தார். அவர்கள் சரியானபடி நடத்தப்படுகின்றனர் என்று உறுதி கொள்ள, அவர் அவர்களுக்கு என்ன செய்தார்? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நமக்கு அதிக நேரமில்லை, ஒருக்கால் இன்னும் பதினைந்து நிமிடங்கள். அவர் அவர்களை கவனமாக நடத்தினார். அவர் ஒரு ஜாதியை எழுப்பி, அவர்களை ஆசான்களின் கீழ் வைத்தார். அவர்கள் அடிக்கப்பட்டு, அழுது இவ்விதம் காலம் கழித்தனர். ஆனால் தேவன் கீழே நோக்கி, அவர் ஆபிரகாமுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நினைவு கூர்ந்தார். ஒரு நாள் அவர் நினைத்தார். அவர் அவர்களுக்கு என்ன செய்தார்? அவர்களை அவர் பிரித்த போது என்ன செய்தார்? அவர் அவர்களுக்கு நியாயப் பிரமாணத்தை கொடுத்தார், ஒரு தீர்க்கதரிசியை கொடுத்தார், அக்கினி ஸ்தம்பத்தைக் கொடுத்தார். அவர் என்ன செய்தார்? (ஓ, தேவனே!) அவர் தமது சபையை ஒழுங்குபடுத்தினார். அவர்களை வழிநடத்த அக்கினி ஸ்தம்பம், ஆவி அவருடைய வார்த்தையின் சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க ஒரு தீர்க்கதரிசி. அவர்கள் அப்பொழுது பிரயாணத்துக்கு ஆயத்தமாயினர். அது அற்புதமல்லவா? 71அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் செய்து, அடையாளங்களையும் அற்புதங்களையும், நடப்பித்து, சிவந்த சமுத்திரத்தை பிளக்கச் செய்து, பார்வோனின் மேல் நரக வாதைகளைக் கொண்டு வந்தனர். ஓ, என்னே! அவர்களுக்கு முன்னால் அக்கினி ஸ்தம்பம் சென்று. ஆமென், அவர்களை இரவிலும் பகலிலும் வழி நடத்தினது. அல்லேலூயா! ஒரு தீர்க்கதரிசி, அந்த வார்த்தைக்கு உண்மையாயிருந்து அங்கு நின்று கொண்டு அவர்களை வரிசைப்படுத்தினான். அப்பொழுது தம்முடைய பிள்ளைகளைக் கொண்டு செல்ல அவர் ஆயத்தமானார். அப்பொழுது தான் அவர்கள் முதன்முறையாக சபை என்றழைக்கப்பட்டனர். அவர் கடைசி நாட்களில் என்ன செய்யப் போகிறார் என்பதற்கு அது முன்னடையாளமாயிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு நாம் வருவோம். அவர் அவர்களை வெளியே அழைத்து, அவர்களுக்கு நியாயப் பிரமாணத்தை அளித்து, தமது வார்த்தையை அளித்து, அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளித்து, ஒரு அடையாளத்தை அளித்து, அவர்களை வனாந்தரத்துக்கு அனுப்பி, அவர்களை உலகத்திலிருந்து வேறு பிரித்தார். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் மோவாப் தேசத்து அழகு மிக்க பெண்களைக் கண்டனர். அது தேவர்களையும் பெண் தெய்வங்களையும் இன்னும் மற்றவைகளையும் கொண்ட வெதுவெதுப்பான சபை. அவர்கள் என்ன செய்தனர்? இந்த பெண்களின் பின்னால் சென்று அவர்களை மணந்து கொண்டனர். அது உண்மை, முற்றிலும் உண்மை. அந்த மோவாபிய பெண்கள் உண்மையில் மிகவும் அழகுள்ளவர்களாய் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 72ஒரு தீர்க்கதரிசனம் வீட்டில் உள்ளது. அதை இந்நாட்களில் ஒன்றில் படித்துக் காண்பிக்கப் போகிறேன். நான் ஏன் பெண்களை இவ்விதம் கடிந்து கொள்கிறேன் என்று நீங்கள் வியக்கலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு... என்னிடம் உள்ளது. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஊழியத்தில் பிரவேசித்த போது அவர் என்னிடம், பெண்கள் கடைசி நாட்களில் மிகவும் நடத்தகெட்டவர்களாகவும் வெட்கமில்லாதவர்களுமாகி பூமியிலே மிகவும் கறைபட்டவர்க்கமாயிருப்பார்கள் என்று கூறினார். உண்மை! அவள் ஆதியில் அதை தொடங்கினாள், சாத்தான் முடிவில் அவளை உபயோகித்துக் கொண்டான். இத்தனை ஆண்டுகளாக என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதை கவனியுங்கள். “அவள் தொடர்ந்து உடைகளை களைவாள்” என்றார். அவர், “முன்குறிக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட மிகச் சிறியக் கூட்டம் ஒன்றிருக்கும். அது இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்” என்றார். அந்த தரிசனம் உண்டானபோது, நான் கவலையுற்றேன். நான் “பெண்களை...” என்று எண்ணினேன். நான் வேதாகமத்தை திருப்பின போது, அது ஏசாயா: 5-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். “அந்நாளிலே கர்த்தரின் கிளை தப்பினவர்களுக்கு... சீயோன் குமாரத்திகளுக்கு அலங்காரமும் மகிமையுமாயிருக்கும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது (ஏசா. 4:2-3).” 73அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ ஒரு கேள்வியை எழுதி என்னிடம் அனுப்பினாள். அவள், “சகோ. பிரான்ஹாமே” இல்லை, அது ஒரு மனிதன், ஒரு போதகர். அவர் ஒருக்கால் இக்காலையில் இங்கிருக்கக் கூடும். அவர் ஓஹையோவைச் சேர்ந்தவர். அவர், “நீங்கள் கூறுவதையே நாங்களும் கூற விரும்புகிறோம், ஆனால் தவறான ஒன்றை நாங்கள் உங்கள் ஒலிநாடாக்களில் கண்டோம்” என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை பில்லி என்னிடம் கொண்டு வந்தான். அவர், “உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்று தேவனுடைய வார்த்தைக்கு முரணாக உள்ளது. நாங்கள் நீங்கள் கூறியதையே கூற விரும்புகிறோம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 1கொரிந்தியர்: 11-ம் அதிகாரத்தில் ஸ்திரீகள் தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் புருஷன் தலையை மூடிக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அதாவது ஸ்திரீகள் சபையில் தொப்பி அணிந்திருக்க வேண்டும், புருஷர் சபையில் தொப்பியை கழற்றி விட வேண்டும். தலையை மூடிக் கொள்ளுதலை நாங்கள் விசுவாசிக்கிறோம். மற்றொரு கேள்வி என்னவெனில், ஜனங்கள் எங்களிடம் வந்து, கர்த்தருடைய தூதன் உங்களிடம் வந்து பேசுகிறார் என்றும், நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தருடைய தூதன் உரைத்ததே என்றும் கூறுகின்றனர். அதற்கு விரோதமாக போராடுவதென்பது மிகவும் கடினம். எங்கள் சபையில் நீங்கள் கூறுவதையே நாங்களும் கூற விரும்புகிறோம். ஆனால் சகோ. பிரான்ஹாமே, இந்த விஷயத்தில் நீங்கள் சிறிது தவறு செய்துவிட்டதாக உங்களுக்கு தோன்றவில்லையா?” என்று எழுதியிருந்தார். நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்து எழுதினேன், “என் விலையேறப்பெற்ற சகோதரனே, நான் தவறு செய்யவில்லை. ஸ்திரீ தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுமென்றும் அவள் ஏன் அதை செய்ய வேண்டுமென்றும் 1கொரிந்தியர்: 11-ம் அதிகாரம் உரைக்கிறது. பிறகு 15-ம் வசனம் அவளுடைய நீளமான தலைமயிர் அவளுக்கு முக்காடாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. தொப்பி அல்ல”, கத்தோலிக்க ஆவி சபையை நீண்ட காலமா ஆட்கொண்டுவிட்டது. அவளுடைய நீளமான தலைமயிரே அவளுடைய முக்காடு. இயற்கையே அதை எடுத்துக் காட்டுகிறது அல்லவா... 74கவனியுங்கள், வேறொரு கேள்வி என்னிடம் வந்தது. சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடம் இந்தக் கேள்வி கேட்டார். இதைப் பற்றி கூறும்போது அதையும் விவரித்துவிடுகிறேன். அவர், “தூதர்களினிமித்தம் ஸ்திரீ நீண்ட தலைமயிரை வைத்திருக்க வேண்டுமென்று வேதம் உரைக்கிறதே. தூதர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் சம்பந்தம் என்ன?” என்று கேட்டார். நான், “தூதன் என்பவன் யார்? செய்தியாளன் என்றேன். பவுல் இங்கு என்ன கூறுகிறான்?தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தூதன், ஒரு உண்மையான செய்தியாளன், உங்களிடம் வருவானானால், நீங்கள் நீண்ட தலைமுடியை வைத்திருப்பது நலம். இல்லையெனில் அவன் உங்களைக் கடிந்து கொள்வான். அது உண்மை. எத்தனை பேருக்கு... தூதன் என்பது செய்தியாளன் என்று தெரியும்? அது முற்றிலும் உண்மை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு செய்தியாளன் அதை கடிந்து கொள்வான். எனவே பவுல், ”தூதர்களினிமித்தம் நீங்கள் நீண்ட தலைமுடியை வைத்துக் கொள்ளுங்கள்“ என்கிறான். தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் வரும்போது, இதை கடிந்து கொள்வார்கள். ஆம், நிச்சயமாக. ஏனெனில் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தூதன், ஒரு உண்மையான செய்தியாளன், தேவனுடன் தொடர்பு கொண்டவன், அவன் கூறும் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. அது முற்றிலும் உண்மை. வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறெதையாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் என்று பரி. பவுல் கூறியுள்ளான். அது உண்மை. ஸ்திரீ நீண்ட தலைமுடி வைத்திருக்க வேண்டுமென்றும் அதுவே அவளுடைய முக்காடு என்பது உண்மையென்றும் நாம் காண்கிறோம். 75இந்த மோவாபியப் பெண்கள் மிகவும் அழகாயிருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இன்றைய நவீன யேசபேல்களைப் போன்று அவர்கள் காட்சியளித்திருப்பார்கள். ஆனால் இன்றைய பெண்கள் எல்லாருமே அவ்வாறில்லை. ஒரு உத்தமமான ஸ்திரீ இரத்தினம் போன்றவள். உண்மையான ஸ்திரீக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் தேவனுடைய பணிவிடைக்காரிகளாய் இருக்கிறீர்கள். உண்மையான எந்த ஸ்திரீயும், பிசாசு என்ன கூறினாலும், என்ன தவறான காரியத்தைக் காண்பித்தாலும், உண்மையான மனிதனைப் போல் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவார்கள். “இதை செய்வதனால் பாதகமில்லையென்று எங்கள் போதகர் கூறினார்” எனலாம். உங்கள் போதகர் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அது தேவனுடைய வார்த்தைக்கு மாறாக இருக்குமானால், அவருடைய வார்த்தை பொய். தேவனுடைய வார்த்தையைக் கைக் கொள்ளுங்கள். அவர் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் யாராயிருந்தாலும் கவலையில்லை. அவர் அவ்விதம் ஏதாவதொன்றைக் கூறினால், தேவனுடைய வார்த்தையைப் பார்க்கும்படி அவரிடம் கூறுங்கள். முற்றிலும் உண்மை. 76ஓ, நாம் இவ்விதம் காலந்தோறும் ஆராய்ந்து தேவன் அவர்களைப் பிரிப்பதைக் காணமுடியும். இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வோம். வேகமாக முடிப்பதற்கென இங்கு நான் குறித்து வைத்துள்ள சில வேத வாக்கியங்களை கடந்து செல்லப் போகின்றேன். அப்பொழுது அந்த... அவர்கள் மோவாபியப் பெண்களுடன் கலந்த போது என்ன நடந்தது? தேவன் அவர்களை மறுபடியும் பிரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் என்ன செய்தார்? பிறகு இயேசு தோன்றினார். நாம் முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறோம். தேவனுடைய தற்சொரூபமும் ஸ்திரியின் வித்துமாகிய இயேசு தேவனால் உற்பவித்து தோன்றினார். அந்த மகத்தான கட்டிடச் சிற்பி தமக்கென ஒரு சரீரத்தை கட்டிக் கொண்டார். அவர் யாரிடமிருந்தும், ஸ்திரீயிடமிருந்தும் மனிதனிடமிருந்தும், மரம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை; அவர் தமக்கென ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டார். ஓ, என்னே! 77அன்றொரு நாள் ஸ்தேவான் நின்று கொண்டு, “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும், செவிகளிலும் விருத்தசேதனம் பெறுதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல் நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” (அப். 7:51) என்று கூறினது என் நினைவுக்கு வருகிறது. அவன், “சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்” என்றான் (அப். 7:47-48). “ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர்” (எபி. 10:5). அவருக்கு எந்தவிடத்திலும் மரம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எபிரேயர்: 11-ம் அதிகாரம் 2 அல்லது 3-ம் வசனம் என்று நினைக்கிறேன். அது “உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது. இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லை” என்றுரைக்கிறது. தேவன், “உண்டாகக்கடவது” என்றார், அது உண்டானது. அவர் அங்கு சென்று, “திரு. சந்திரனே, எனக்கு சிறு மரம் கடன் கொடுப்பாயா? திரு. நட்சத்திரமே, எனக்கு கொஞ்சம் கால்ஷியம் கடன் கொடுப்பாயா?” என்று கூறவில்லை. தேவன் அவ்விதம் செய்வதில்லை. 78அவர், “மரியாளே, எனக்கு ஒரு முட்டை கடன் கொடு. நான் வாசம் செய்வதற்கு ஒரு சரீரத்தை உண்டாக்க விரும்புகிறேன்” என்று கேட்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. சிருஷ்டிகராகிய தேவன் வார்த்தையை உரைத்தார். அவள் அப்பொழுதே தாய்மை பருவம் அடைந்துவிட்டாள். அவள் தாய் அல்ல, அவருடைய வித்தை சுமந்த ஸ்திரீ. அது உண்மை. இதை ஞாபகம் கொள்ளுங்கள். அவள் இயேசுவின் தாய் அல்ல. உலகம் அவளை அவ்வாறு அழைத்தது. அவர் அவளை தாய் என்று அழைத்த ஒரு வேத வசனத்தையாகிலும் எனக்குக் காண்பியுங்கள். வார்த்தைக்குத் திரும்பி வாருங்கள். “தேவனுடைய தாய்”, உங்களுக்கு வெட்கம். பாருங்கள்? ஒருநாள் சிலர் அவரிடம் வந்து, “உம்முடைய தாய் உமக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்” என்றனர். அவர், “எனக்குத் தாய் யார்?” என்று கூறிவிட்டு, அவருடைய சீஷர்களைச் சுட்டிக்காட்டி, “என் பிதாவின் சித்தப்படி செய்கிறவர்களே என் தாய்” என்றார். அவள் அவருடைய தாய் அல்ல. அவள் ஒரு பொரிக்கும் கருவி மாத்திரமே. தேவன் வேறெதாவதொன்றை உபேயாகித்திருக்க முடியும். ஆனால் அவர் மிகவும் தாழ்வான ஒன்றை எடுத்து, அதைக் கொண்டு என்ன செய்ய முடியுமென்று காண்பிக்க விரும்பினார். அவர் அதை உயர்த்தி, ஒன்றுமற்றதிலிருந்து ஒன்றை உண்டாக்கினார். அது தான் தேவன். இயேசு, தேவனுடைய தற்சொரூபமானவர், பரிசுத்தமானவர், அழகானவர், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். பள்ளத்தாக்கின் லீலிப்புஷ்பம், சாரோனின் ரோஜா, ஓ, விடிவெள்ளி நட்சத்திரம். அவர் யார்? அவர் எதற்காக வந்தார்? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒன்றாயிருத்தலை மீண்டும் நிலைநாட்ட, ஓ, சகோதரனே, உன்னால் காணமுடிகிறதா? 79முற்காலங்களில் இருந்த பாபேல் கோபுரமும் இன்னும் மற்ற காரியங்களும் பயனளிக்கவில்லை. அவர்களுடைய தோட்டங்களில் இருந்த கனிகளும் மற்றவைகளும் தேவனுக்குப் பிரீதியாயிருக்கவில்லை. எனவே தேவன் இறங்கி வந்து, ஒரு ஸ்திரீயின் கர்ப்பத்தில் தாமாகவே ஒரு சரீரத்தை உண்டாக்கி, இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார் என்பவராக ஆனார். அவர் யூதனும் அல்ல, புறஜாதியும் அல்ல, அவர் தேவன். அவருக்கு எக்காலத்தும் புறஜாதிகள் முக்கியமானவர்களே, அவர் யூதர்களை ஒரு ஜாதியாக பிரித்தெடுத்தார் என்று மாத்திரமே, அதை மீண்டும் நிலைநாட்ட எல்லாவற்றையும் செய்ய முயன்றார். அவர் அதை நிலைநாட்டக் கூடிய ஒரே வழி, அவர் ஆதியில் செய்தது போல் தனிப்பட்ட நபரிடம் வருவதே. ஒரு ஸ்தாபனத்தினிடம் அல்ல, ஒரு கூட்டம் ஜனங்களிடம் அல்ல; ஆனால் தனிப்பட்ட நபரிடம், கவனியுங்கள், தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த ஒன்றாயிருத்தலை மீண்டும் நிலைநாட்ட... 80அவர் உண்மையான பாவநிவாரண பலி. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், மற்றவைகளும் பாவத்தைப் போக்க முடியவில்லை. அந்த ஜீவன்... பலி செலுத்தப்பட்ட போது, பாவமில்லாத அந்த ஆட்டுக்குட்டியின் ஜீவன் விசுவாசியின் மேல் வர முடியவில்லை. ஏனெனில் அவன் ஆத்துமாவைக் கொண்டுள்ள ஒரு மனிதன், ஆனால் ஆட்டுக்கோ ஆத்துமா கிடையாது. பாருங்கள், மனிதனைத் தவிர வேறெதற்கும் ஆத்துமா கிடையாது. தேவன் ஆத்துமாவை... மனிதன் மிருக வகையைச் சேர்ந்தவன் என்பது உண்மையே. ஆனால் தேவன் அவனுக்குள் ஆத்துமாவை வைத்தார். அதுதான் அவனை மிருகங்களினின்று வேறுபடுத்தியது. அவன் ஆத்துமாவைப் பெற்றுக் கொண்ட போது நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொண்டான். ஆனால் அவன், ஞாபகம் கொள்ளுங்கள், தேவன் அவனை தமது சொந்த ரூபத்தின்படி, சிருஷ்டித்தார், அதன் பிறகு அவன் ஜீவாத்துமாவானான். பாருங்கள், அவன் அப்படியாகி நன்மைக்கும் தீமைக்குமுள்ள வித்தியாசத்தை அறிந்து கொண்டான். 81இப்பொழுது கவனியுங்கள். இயேசு உலகிற்கு வந்தார். அவர் தேவனாயிருந்தார். ஒரு மனிதனின் ஜீவன் வேறொரு மனிதனின் மேல் வந்தது என்பது மாத்திரமல்ல, தேவனின் ஜீவனே அவன் மேல் வந்து அவனைத் தேவனுடைய பிள்ளையாக்கி, அவன் விழுந்து போவதற்கு முன்பிருந்த அதே ஐக்கியத்துக்கு கொண்டு வருகிறது. அப்பொழுது நாம் உண்மையான ஒன்றாயிருத்தலைப் பெறுகிறோம். சிலர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் ஒருத்துவம் (Oneness) அல்லவா?” என்று கேட்கின்றனர். நான் ஒருத்துவம் ஸ்தாபனத்தை சேர்ந்தவன் அல்ல. நான் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கிறேன். பாருங்கள். ஒருத்துவம் ஸ்தாபனத்தை சேர்ந்தவன் அல்ல. அவர் பாவத்தின் கடனை செலுத்தினார். இயேசு இவ்வுலகில் சரீரத்தில் இருந்த வரைக்கும், தேவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒன்றாயிருத்தலை நிலைநாட்ட முடியவில்லை. எனவே அவிசுவாசியின் குற்றத்தைப் போக்க அவர் தம்மை பூரண பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்து, அதன் விளைவாக பரிசுத்த ஆவி மனிதனுக்குள் வந்து, மனிதனையும் தேவனையும் ஒன்றாக இணைத்தது. பாருங்கள், அதை மீண்டும் நிலைநாட்ட ஒன்று அவசியமாயிருந்தது. 82அதை நிலைநாட்டக் கூடியது எது? தேவனுடைய கட்டளை நிறைவேறும் போது, ஒரு தேவதூதன் அதை நிறைவேற்ற முடியுமா? அவனுக்கு இரத்தம் கிடையாது. தேவன், அதை நிறைவேற்ற முடியுமா?அவருக்கு இரத்தம் கிடையாது. எனவே தேவன் பாவக் கடனை சரியாக செலுத்தி தீர்த்து பாவத்தைப் போக்க எண்ணி, அவர் மாம்சமானார். ஏனெனில் அந்த ஒரு வழி மாத்திரமே இருந்தது. பாபேல் கோபுரங்களும், மற்றவைகளும், ஸ்தாபனங்களும் எல்லா வகையிலும் தோல்வியடைந்தன. அவர்கள் உலகத்துடனும் மற்றவைகளுடனும் கலந்துவிட்டனர். ஆனால் இது முழுவதுமாக பிரிந்து வருதலாக இருக்கும். மகிமை! இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். இப்பொழுது நான் என் பொருளைத் தெரிந்து கொண்டு பிரசங்கிக்கத் தொடங்கலாம் என்னும் உணர்வு எனக்கு உண்டாகிறது. மீண்டும் பிரசங்கிக்கத் தொடங்க வேண்டும் என்று தோன்றும் போது, நான் நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உம்! தேவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒன்றாயிருத்தல் என்னும் பொருளை நான் பிறகு எப்பொழுதாவது பேசி முடிக்க முனைகிறேன். உங்களுக்கு விளங்குகிறதா?விளங்கிக் கொண்டவர்கள் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி ) 83பாருங்கள், பழைய நிலைக்கு மனிதன் வரக்கூடிய ஒரே வழி பாவத்தின் தண்டனையை செலுத்தித் தீர்ப்பதே. பாவத்திற்கான தண்டனை என்ன? மரணம். “பாவத்தின் சம்பளம் மரணம்”. தேவன், “நீங்கள் புசிக்கும் நாளில், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாளில், சாகவே சாவீர்கள்” என்றார். அது நிகழ்ந்தபோது, மனிதன் தேவனுடன் கொண்டிருந்த உறவு, ஐக்கியம் எல்லாம் முறிந்து போனது. பாவத்தின் தண்டனையை செலுத்தித் தீர்க்கும் வரைக்கும் அது மீண்டும் வரமுடியவில்லை. அதை செலுத்தித் தீர்க்க எவரும் பாத்திரராயிருக்கவில்லை. ஏனெனில் மானிடவர்க்கம் விழுந்த போது எல்லாமே விழுந்து போயின. ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் மானிட வர்க்கத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. மனிதன் விழுந்து போனான். மகிமை! ஓ, சகோதரனே! 84சகோ. மாக், நீங்கள் அங்கு உட்கார்ந்திருப்பதை கவனிக்கவில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. மாக், இதை நாம் விசுவாசிக்கிறோம் “பாவத்தின் தண்டனையின் கீழ் வருதல்”, நான் இவ்விடம் விட்டுச் செல்லும்போது சகோ. மாக் இந்த கூடாரத்தில் போதகராயிருப்பது வழக்கம். ஆம். இவர் பரிசுத்த ஆவியைப் பெற்ற மற்றுமொரு நல்ல பாப்டிஸ்டு, மிஷனரி பாப்டிஸ்டு. இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் தேவனுடன் ஒன்றாயிருத்தலுக்கு வருகின்றனர். 85இப்பொழுது, இதைக் காணும் போது, தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட வேண்டும் என்பதை நாம் காணும்போது... மிருக வர்க்கத்தின் மிக உயர்ந்த வர்க்கம் மானிட வர்க்கம். மானிட வர்க்கம் விழுந்து போனது. அப்படியிருக்க ஒரு மனிதன் எப்படி வேறொரு மனிதனை இரட்சிக்க முடியும்? அதை தேவன் மாத்திரமே செய்ய முடியும். ஆனால் தேவன் ஆவியாயிருப்பதனால் அவரால் மரிக்க முடியாது. எனவே தேவன் தம்மை தேவ தூதர்களிலும் சற்று சிறியவராக்கிக் கொண்டார். எபிரேயர் முதலாம் அதிகாரம் முதலாம் வசனம். அவர் மரணத்தை ஏற்றுக் கொண்டு, தண்டனையை அனுபவித்து, மீண்டும் மனிதனுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஒற்றுமையை நிலைநாட்ட பரிசுத்த ஆவி மறுபடியும் வருவதற்கென, அவர் தம்மை தேவதூதர்களிலும் சற்று சிறியவராக்கிக் கொண்டார் (எபி. 2:9). பாவத்தின் கடன் செலுத்தித் தீர்க்கப்பட்டது. பரிசுத்த ஆவியை மறுபடியும் அனுப்பி, ஏதேன் தோட்டத்தில் இருந்தது போல் ஜனங்களை தேவனிடம் இணைப்பதற்கென இயேசு அதை செய்ய வேண்டியதாயிற்று. இயேசு மரித்தபோது கடன் செலுத்தி தீர்க்கப்பட்டது. அத்துடன் அது முடிவடைந்தது. ஆமென்! அதை என்னால் உங்களில் பதியவைக்க முடிந்தால், பாருங்கள். ஆட்டுக் குட்டியானவருக்கு அல்லேலூயா! கடன் செலுத்தித் தீர்க்கப்பட்டது. இன்று காலை என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் அல்லது இனிமேல் இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், உங்கள் தண்டனை செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டது. தேவனுடைய வார்த்தையை நீங்கள் அவிசுவாசிக்காதீர்கள், வார்த்தைக்குத் திரும்புங்கள்! அவிசுவாசிக்காதீர்கள்.... அவர் வார்த்தையாயிருந்தார். மகிமை! எனக்கு சத்தமிட வேண்டும் என்னும் உணர்வு உண்டாகிறது. உண்மையாக எனக்கு அந்த உணர்வு உண்டாகிறது. கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. தேவதூதர்கள்ஆர்ப்பரித்து பாடினதில் வியப்பொன்றுமில்லை. பரலோகத்தில் பாடல்கள் தொனித்தன. ஆம், ஐயா! காணாமற்போன ஆடு கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அவனைப் பழைய நிலைக்கு கொண்டு வர அவனுக்காக பாவப்பரிகாரம் செலுத்தப்பட்டுவிட்டது; பிரிக்கும் தண்ணீர், அவனை அக்கிரமங்களினின்று கழுவி சுத்திகரிக்கும் தேவனுடைய வார்த்தை. வார்த்தை என் இடத்தை எடுத்துக் கொண்டு மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்து என் வாழ்க்கையில், என் இருதயத்தில் நிரந்தர இடம் பெற்றுவிட்டது. ஆமென். 86கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது. அது முடிந்துவிட்டது. நாம் மீட்கப்பட்டுவிட்டோம். நாம் கத்தோலிக்க சபையின் மூலம் மீட்கப்படவில்லை; நாம் தான் சரியான கத்தோலிக்க, அப்போஸ்தல கத்தோலிக்க சபை என்ற போதிலும். ஆம், ஐயா. தங்கள் சொந்த கொள்கைகளைக் கொண்டுள்ள ரோமன் கத்தோலிக்க சபை. நம்மை மீட்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த கொள்கைகளைக் கொண்டவர்களாய் வார்த்தையை மறுதலிக்கின்றனர்; எல்லாமே கொள்கை, வார்த்தை இல்லை. மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, உங்களுக்கு அவமானம். தேவப் பிரியராயிராமல், அக்கிரமப் பிரியர், சுகபோகப் பிரியர், உலகத்தை நாடுபவர், சுக போகத்தை தேடுபவர், அடிக்கப்படுவதற்காக பட்டியில் அடைக்கப்பட்ட பன்றிகள் சாத்தான் ஏதேனின் தோட்டத்தில் செய்தது போல், அவனுடைய ஆட்களை அனுப்பி, அதை உங்களுக்குள் திணிக்கின்றான். “எங்கள் போதகர்கள் கல்வியறிவு பெற்றவர்கள், அவர்கள், பிஎச். டி., எல்எல். டி, பட்டம் பெற்றுள்ளனர். அதனால் பிரேயாஜனமில்லை. அந்த வார்த்தையை மறுதலித்தல் இப்பொழுதும் பிசாசின் தந்திரமாயுள்ளது. நான் வார்த்தையைக் கொண்டு இன்று காலை அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்தேன். இப்பொழுது முதல் அது உங்களைப் பொறுத்தது. 87இயேசுவுடன் நடந்த சீஷர்களும் கூட ஒன்றாயிருத்தலைப் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு ஒற்றுமை இருக்கவில்லை. அவர்கள், “அடுத்ததாக யார் பேராயராய் இருக்கப் போவது? நமக்குள் பெரியவன் யார்? என்று வாக்குவாதம் பண்ணினார்கள். அவர்களால் இயேசுவையும் கூட விசுவாசிக்க முடியவில்லை. அவர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ”நீர் உவமைகளால் பேசுகிறீர். அதன் அர்த்தத்தை வெளிப்படையாக எங்களிடம் கூறும்“ என்றனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும், சீஷர்களுக்கும் இயேசுவுக்கும், சீஷர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒற்றுமை இருக்கவில்லை. என்னவாயிருப்பினும், அது ஒன்றைக் காண்பிக்கிறது. சகோதரனே, இப்பொழுது உன்னிப்பாக கவனியுங்கள். இது உங்கள் இருதயத்தில் ஆழமாக பதிய வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? தேவன் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். இந்த திட்டத்துக்கு புறம்பே, நீங்கள் எவ்வளவாக அறிவைப் பெற்றிருந்தாலும், கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமான எத்தனை அழகிய கட்டிடங்கள், எத்தனை வேத சாஸ்திர பள்ளிகள், எத்தனை பரிசுத்த மனிதர், பரிசுத்த இது, பரிசுத்த, பரிசுத்த, பரிசுத்த எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அதனால் ஒரு வித்தியாசமுமில்லை. தேவனுடைய வேதத்தில் உள்ள ஒரு வார்த்தை மறுதலிக்கப்படுமானால், அது பிசாசினால் உண்டானது. தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையைக் கொண்டு, பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடு வரைக்கும். அதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்தேன். நீங்கள் சில நிமிடங்கள் என்னுடன் உட்காருவீர்களானால், இந்நாளில் என்ன நடக்கிற தென்பதை காண்பிப்பேன். 88இயேசுவுடன் கைகோர்த்து நடந்து, அவருடன் உறங்கி, அவருடன் புசித்து, அவர் செய்த அற்புதங்களைக் கண்டு, எந்த சகோதரனும் இல்லாத அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகின சீஷர்களும் கூட அதைப் பெற்றிருக்கவில்லை. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர்கள் தகுதியாயிருக்கவில்லை. இயேசு அவர்களிடம், “இனி ஒருபோதும் பிரசங்கிக்காதீர்கள், நீங்கள் முயற்சியும் கூட செய்யாதீர்கள். எருசலேம் நகரத்தில் காத்திருங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை நான் உங்கள் மேல் அனுப்பப் போகிறேன். அப்பொழுது அது உங்களை ஒன்றுபடுத்தும்”, என்றார். “இப்பொழுதும் பிதாவே, நீரும் நானும் ஒன்றாயிருப்பது போல், அவர்களும் ஒன்றாயிருக்கும்படிக்கு வேண்டிக் கொள்கிறேன். நான்... சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என் பிதா என்னை அனுப்பினது போல், நானும் உங்களை அனுப்புகிறேன்”. குமாரனை அனுப்பின பிதா, குமாரனுக்குள் வந்தார். ஒற்றுமை என்பது ஒன்றுபடுதல். அவர், “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் செய்யும் கிரியைகள் உரத்த சத்தமாக பேசும்போது, நீங்கள் அதைக் காணாமலிருந்தால், குருடரும் செவிடரும் ஊமையுமாயிருக்கிறீர்கள்” என்றார். ஓ, சகோதரனே, வ்யூ! இயேசு, “மாய்மாலக்காரரே! வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை உங்களால் நிதானிக்க முடியவில்லையே. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் நாளையும் அறிந்திருப்பீர்கள். காதுகளிருந்தும் கேளாமலும் கண்களிருந்தும் காணாமலும் இருக்கிறீர்கள் என்று ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான்” என்றார். அவ்வாறே பவுல் அப்போஸ்தலனும், “கடைசி நாட்களில் அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள்” என்று நன்றாய் சொன்னான். கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று எத்தனையோ வேதவசனங்கள் உரைக்கின்றன. அப்படியிருக்க, பிசாசினால் ஊக்குவிக்கப்பட்டு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த முறைமைகளுக்கு விரோதமாக நான் ஏன் கூக்குரலிடுகிறேன் என்று அவர்கள் வியக்கின்றனர். விலையேறப்பெற்ற பிள்ளைகள் அடிக்கப்படும்படி கொண்டு போகப்படும் ஆடுகளைப் போல் அங்கு வரப்படுவதை பாருங்கள். கர்த்தாவே, அவர்களை வெளியே கொண்டு வாரும்! 89ஆம், சீஷர்களுக்கு ஒற்றுமை இருக்கவில்லை. அவர்களால் இயேசுவைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்கள், “ஆ, யாரால் இவைகளைப் புரிந்து கொள்ள முடியும்?” என்றனர். பாருங்கள், தேவன் அவர்களுக்குள் இன்னும் வரவில்லை. அவர்கள் வெறுமனே தொடர்பு கொண்டு ஐக்கியம் கொண்டிருந்தனர். அவர்கள் அவருடன் தொடர்பு கொண்டிருந்தனர். இன்றைக்கும் அநேக நல்ல மனிதர் அந்நிலையில் தான் உள்ளனர். அவர்கள் குடிக்கவில்லை, பொய் சொல்லவில்லை, திருடவில்லை, ஒன்றும் செய்யவில்லை. ஆனால் தேவனுடன் ஒன்றாயிருத்தலை அவர்களை பெற்றிருக்கவில்லை. அவர்கள் இன்னும் தேவனுடன் ஒன்றாகவில்லை. பாருங்கள், அவர்களால் ஒன்றாயிருக்க முடியாது. ஓ, அவர்கள் அற்புதங்களைச் செய்தனர், பிசாசுகளைத் துரத்தினர். அதுவல்ல - அதுவல்ல... அன்றொரு நாள் செய்தித்தாளில் பிசாசுகளைத் துரத்துவதைக் குறித்த கட்டுரை ஒன்றைப் படித்தேன். ஜனங்கள், “ஓ, சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது தான் அது” என்கின்றனர். அது தான் அதுவல்ல. பிசாசைத் துரத்தி, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கும் ஒருவன் பொய்யன். ஆம், ஐயா. அவன் பிசாசைத் துரத்துவதாக கூறிக் கொள்கிறான். அவர்கள் அவ்விதம் செய்வதாக உரிமை கோருகின்றனர். அவன் தேவனுடைய வார்த்தையில் இல்லாமல் போனால், அதை செய்ய முடியாது. அப்படித்தான் இயேசு கூறினார். 90பிறகு பெந்தெகொஸ்தே வந்தது. தேவன் அவர்களை ஒன்றாக்கினார். ஓ, என்னே! அப்பொழுது அவர்கள் தேவனுடன் ஒன்றாயிருத்தலைப் பெற்றுக் கொண்டனர். தேவன் அவர்களுக்குள் வாசம் செய்தார். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது அப். 4:32. அவர்கள், “ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள்” என்று வேதம் உரைக்கிறது. ஓ, சகோதரனே, ஏன்? அவர்கள் முன்பிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் விட்டுவிட வேண்டியிருந்த ஒன்றே ஒன்று ஒரு பழைய நகரமே. அவர்கள் நகரம் அல்லது தேவாலயம் என்றழைக்கப்பட்ட ஒரு பழைய சரீரத்தில் வாசம் செய்தனர். அது அழுக வேண்டும். அது மரித்து அழுக வேண்டும். ஆனால் ஆவியிலும் ஜீவனிலும், நோக்கத்திலும் தரிசனத்திலும், மற்றெல்லாவற்றிலும் அவர்கள் தேவனுடன் ஒன்றாயிருந்தனர். ஓ, ஆதாம்; சோர்வுற்ற என் நண்பர்களே, சாத்தான் அந்த பொய்யை மறுபடியும் உங்களிடம் கூற அனுமதிக்காதீர்கள். வார்த்தை கூறுவதன் அர்த்தம் அதுவல்ல என்று சாத்தான் கூற அனுமதிக்காதீர்கள். வார்த்தை கூறுவதே அதன் அர்த்தம்... ஆம். இங்கு... 91நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை குறித்து பேசியிருக்கிறேன். அது கிடைக்கப் பெற்ற ஒரு வெளிப்பாடு. அதுவே உண்மையான ஞானஸ்நானம். அந்த ஞானஸ்நானம் பெற்ற ஒரு கூட்டம் ஜனங்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். அது மற்றுமொரு பாபேல் கோபுரம். அதே காரியம், அதற்குள் அதை கொண்டு சென்றது. நிச்சயமாக, லூத்தர் அதையே செய்தார். வெஸ்லி அதையே செய்தார், ஜான் ஸ்மித் அதையே செய்தார். அலெக்சாண்டர் காம்ப்பெல் அதையே செய்தார், பெந்தெகொஸ்தேயினரும் அதையே செய்தனர். தேவன் தமது வார்த்தையைக் கைக் கொள்ளும் தனிப்பட்ட நபர்களுடன் ஈடுபடுகிறார். விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெறும்படி செய்து அவர்களைக் கொண்டு வந்து தம்முடன் உண்மையான ஒன்றாயிருத்தலில் இணைப்பதே தேவனுடைய ஒரே திட்டமாயுள்ளது. அப்பொழுது இப்படித்தான்... நீங்கள், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, நான் அந்நிய பாஷை பேசினேன். நான் கூச்சலிட்டேன், நான் இதை செய்தேன்” எனலாம். நீங்கள் இன்னும் அந்த விதமான ஆவியைப் பெற்றிருந்தது. தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பீர்களானால், உங்களுக்குள் தேவனுடைய வார்த்தை இல்லை, நீங்கள் ஆவியைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் உட்கார்ந்து கொண்டு சத்தியம் பிரசங்கிக்கப்படுவதை கேட்டு, அதை வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அது சத்தியம் என்று அறிந்த பிறகும் அதை செய்ய மறுத்தால், அது தேவனுடைய ஆவியல்ல. நீங்கள் எவ்வளவுதான் அந்நிய பாஷை பேசினாலும், எவ்வளவுதான் கூச்சலிட்டாலும், எத்தனை சபைகளை சேர்ந்திருந்தாலும், எத்தனை முறை ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் அல்லது வேறென்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. வசனமே சத்தியம். அதுதான் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் மற்ற சத்தியத்தைப் பெற்றவர்களாயிருந்து வார்த்தையின் சத்தியத்துக்கு வருவீர்களானால், (ஆமென்), நீங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். 92வேதாகமத்தை எழுதின அதே தேவன் அவருடைய வார்த்தைக்குப் பதிலாக வேறெதாவதொன்றை எப்படி அளிக்க முடியும்? பேதுரு உங்கள் சபையில் அடக்கம் பண்ணப்பட்டான் என்றும், அவனுடைய ஆவி பாவத்தை மன்னிக்க உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதென்றும் கூறிக் கொள்ளும் கத்தோலிக்க ஜனங்களே, யூதனான பேதுரு சபையில் விக்கிரகங்கள் இருப்பதை எவ்விதம் சகித்துக் கொள்ள முடியும்? பேதுரு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, அந்நியபாஷை பேசி, வல்லமயைான கிரியைகளை செய்திருக்க, அவன் சிறு 'வேஃபரை' (water) எடுத்து, தேவன் அந்த 'வேஃபரில்' இருக்கிறார் என்று எப்படி கூற முடியும்? (வேஃபர் என்பது இராப்போஜனத்தின் போது கொடுக்கப்படும் சூரியனின் வடிவுக் கொத்த வட்ட வடிவமுள்ள் மெல்லிய பிஸ்கோத்து - தமிழாக்கியோன்). ஓ, அது அறியாமை, ஆவிக்குரிய அறியாமை. நல்லது, இப்பொழுது. பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் கூட அதே காரியத்தை செய்து. உங்கள் போதகரிடம் நடந்து சென்று கைகுலுக்கி, “இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று எந்தவிதமான வாழ்க்கையும் வாழ்ந்து உலகத்தோடு ஜீவிக்கிறீர்கள். அது வேறொரு பாபேல் கோபுரம். 93இப்பொழுது நாம் முடிவுக்கு வருகிறோம். கவனியுங்கள், தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பினார். பரிசுத்த ஆவி என்னப்படுவது தேவனே. தேவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒன்றாயிருத்தலை ஏற்படுத்துவது அவரே, நாம் காண்போம். இப்பொழுது நாம், அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு உங்கள் முழு கவனத்தையும் கோருகிறேன். கவனியுங்கள், மனிதன் பிசாசின் திட்டத்தின் கீழ் சபையை ஒன்றுபடுத்தி ஸ்தாபனமாக்க முயன்று வந்திருக்கிறான். அவர்கள் சபைக்கு கல்வியறிவு புகட்டி ஒன்றுபடுத்த முயன்று வந்துள்ளனர். அது உங்களுக்குத் தெரியும். கல்வியின் மூலமாக, ஸ்தாபனத்தின் மூலமாக. இப்பொழுது அவர்கள் எல்லா கத்தோலிக்கரையும் பிராடெஸ்டெண்டுகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை ஒன்றாக்கி, உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்றை ஏற்படுத்த முனைகின்றனர். அது என்ன? பிசாசின் திட்டம். நீங்கள், “அதை கூறுவதற்கு நீங்கள் மிகவும் சிறியவர்” எனலாம். நான் மிகவும் சிறியவன் தான். ஆனால் என் தேவனுடைய வார்த்தையோ மிகவும் பெரியது. அதை என்னால் கூற முடியும். வானமும் பூமியும் ஒழிந்து போம். ஆனால் இது ஒருக்காலும் ஒழிந்து போகாது. இதை நான் கூறவில்லை. அவர் தான் முதலில் கூறினார். அவர் கூறினதை நான் எடுத்துக் கூறி, அவருடைய வார்த்தையை அறிக்கையிடுகிறேன். அது பிசாசின் கீழ் உள்ளது! இன்று காலை, உங்களுக்கு முன்னால், அது பிசாசினால் உண்டானது என்று வார்த்தையைக் கொண்டு நிரூபித்துக் காண்பிக்கப்பட்டது. ஸ்தாபனங்கள். அனைத்துமே, பிசாசின் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. மனிதன் ஜனங்களை ஒன்று சேர்த்து ஸ்தாபனம் உண்டாக்க முனைகிறான். 94“நீங்கள் எல்லோரும் வந்து 'அசெம்பிளிஸ் ஆப் காட்டை' சேர்ந்து கொள்ளுங்கள், ஒருத்துவத்தை சேர்ந்து கொள்ளுங்கள். மெதோடிஸ்டை சேர்ந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் ஒன்றே”, மாய்மாலக்காரக் கூட்டமே, நீங்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறீர்கள். தேவனுடைய வார்த்தை உங்கள் முன்னிலையில் அசைந்த போது, அதை தாக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் தேவனுடன் இருந்தால், தேவன் ஏன் தம்மை உங்களுக்கு காண்பிக்கவில்லை? நீங்கள் ஏன் தேவனுடைய கிரியைகளை செய்வதில்லை? நீங்கள் அந்த வேஷத்தை தரித்துக் கொண்டு அவரை மறுதலித்து, தேவனுடைய உண்மையான கிரியைகளையும் பெயல்செபூல் என்று உங்களால் எப்படி அழைக்க முடிகிறது? நீங்கள் கல்வியறிவு கொண்ட ஸ்தாபன அங்கத்தினர்கள் என்பதை அது காண்பிக்கிறது. இயேசு, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்றார். உண்மை, நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று உறுதியாய் நம்புகிறேன். நிச்சயமாக, இதை ஏன் யாரும் தாக்குவதில்லை? தேவன் இதற்கு பின்னால் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். தேவன் தமது வார்த்தையுடன் அசைகிறார். 95மனிதன் அதை செய்கிறான். அவன் வேறொரு பாபேல் கோபுரத்தைக் கட்டுகிறான். அவன் என்ன செய்கிறான்? அவர்கள் காண்பிக்க முயல்கின்றனர். இப்பொழுது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தைப் பாருங்கள். ஆங்கிலிகன், ரோமன் கத்தோலிக்கர், மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினர், இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர், மற்றும் கிறிஸ்தவ விஞ்ஞானம், கன்னிகை பிறப்பை மறுதலிக்கும் அநேக கொள்கைக்காரர், இயேசுவின் தெய்வீகத்தை மறுதலித்து, அவரை மூன்று ஆட்களாக்கி, மூன்று கடவுள்களை வழிபட்டு, கன்னிகை பிறப்பை மறுதலிக்கிறவர். சிலர் இரத்தத்தை மறுதலிக்கின்றனர். சிலர் அவருடைய அற்புதங்களை மறுதலிக்கின்றனர். ஏறக்குறைய எல்லோருமே அதை செய்கின்றனர். அதன் பிறகு இவ்விதம் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒன்றாக இணைக்க முயல்கின்றனர். உங்களால் அதை எப்படி செய்ய முடியும்? அது மனிதனால் கட்டப்பட்ட கோபுரம். அது பாபேல் கோபுரத்தைப் போல் விழுந்துவிடும். 96ஆனால் தேவனோ, “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல; என்னுடைய, ஆவியினாலேயே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவ்விதம் தான் என் சபையை நான் இணைக்கிறேன். ஸ்தாபனத்தினால் அல்ல, கல்வியினால் அல்ல, வேத சாஸ்திரத்தினால் அல்ல; என்னுடைய ஆவியினாலே என் ஆடுகளை ஒன்று சேர்ப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்கிறார். ஓ, என்னே! அவர் செய்யும்போது, என்ன நடக்கிறது? அவருடைய அடையாளங்கள் அதற்கு சாட்சியாயிருக்கும். இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியருடன் கலப்பதற்கு முன்பு இதை கூற முடிந்தது. அவர்களுக்கு மேல் அக்கினி ஸ்தம்பம் இருந்தது. ஆம், ஐயா; அவர் என்ன செய்வார்? அவர் சாட்சி கொடுப்பார், அதே விதமான சாட்சி. அவர்கள் தேவனுடன் கொண்டிருந்த தொடர்பு அற்றுப் போய், அவர்களுக்கும் தேவனுக்குமிடையே இருந்த ஒன்றாயிருத்தலை அவர்கள் பிரித்துக் கொண்டு, மோவாபியருடன் கலந்த போது, அவர்கள் வெற்றி காணாமல் தோல்வி கண்டனர். அவர்கள் இன்னும் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் கழித்தனர். தேவன் வேறொரு கூட்டத்தை எழுப்பி, அவர்கள் இவ்வுலகை விட்டு கடந்து போகும்படி செய்து, அவருடைய திட்டத்தை நிறைவேற்றினார். அதை தான் அவர்கள் செய்தனர். 97இப்பொழுது கவனியுங்கள், தேவன் தமது ஆவியினால் ஒரு சபையை ஒன்று சேர்க்கும்போது, அவர்கள் மத்தியில் ஜீவனுள்ள தேவனின் அடையாளங்கள் காணப்படும். எத்தகைய அடையாளங்கள்?தேவன் இஸ்ரவேலரை எகிப்தியரிடமிருந்து பிரித்த போது, அவர் மோசேக்கும் இஸ்ரவேலருக்கும் அக்கினி ஸ்தம்பமாகிய அடையாளத்தைக் கொடுத்தார். அது சரியா? ஒரு தீர்க்கதரிசியையும், அவர் ஆபிரகாமை லோத்தினிடமிருந்து பிரித்த போது, இருதயத்தின் சிந்தனைகளையும், யோசனையும் வகையறுக்கும் ஒரு தூதன் அவனிடம் வந்தார். அடையாளம்! அல்லேலூயா! இந்த ஆலோசனை சங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஸ்தாபனங்கள்; அவர்கள் எகிப்திலும், ஏதேனிலும் நடந்தது போல ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இவர்கள் இதன் மகத்தான ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், பாருங்கள், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். தேவன் இஸ்ரவேலரை பிரித்தெடுத்தபோது, அவர்களுக்கு இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளத்தை, அக்கினி ஸ்தம்பத்தை கொடுத்தார். அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை கொடுத்தார். அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார்? அவர் ஒவ்வொரு முறையும் என்ன செய்கிறார்? ஸ்தாபனங்களின் மத்தியில் தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை எனக்குக் காண்பியுங்கள், பார்க்கலாம். அவர் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர், சுவிசேஷகர் மூலம் தமது சபையை ஒன்று சேர்த்தார். அல்லேலூயா! பார்த்தீர்களா? சபை, அவர் இஸ்ரவேலரை வெளியே அழைத்தது போல, நான் அதற்கு திரும்ப வருவேன் என்று உங்களிடம் கூறினேன். ஆம், ஐயா. இஸ்ரவேலருடன் கூட இருந்தது போன்ற தேவனால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் அவர்கள் மத்தியில் இல்லை. (இல்லை, ஐயா). அது என்ன? அது மறுபடியும் பிசாசின் கோபுரம். 98இப்பொழுது, வருகை, இயேசுவின் இரண்டாம் வருகை மிகவும் சமீபமாயுள்ளது. அவர் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதை நான் விசுவாசிக்கிறேன். ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். பிணம் எங்கேயோ அங்கு கழுகுகள் கூடும். ஓ, என்னே! அது என்ன? அவர் தமது ஒன்றாயிருத்தலை, உண்மையான ஒன்றாயிருத்தலை பெற்று, அவரை அவர்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும், எல்லாவிதமான சபைகளிலிருந்தும் தமது பிள்ளைகளை வெளியே கொண்டு வந்து, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட அவர்களை கூட்டிச் சேர்த்து அவருடைய வார்த்தையில் வரிசைப்படுத்துகிறார். என்ன? இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், அவர் முன்பு பெற்றிருந்த அதே விதமான ஊழியத்தின் மூலம் இப்பொழுது, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் ஒன்றாயிருக்க, அவர்களை அழைத்து கூட்டிச் சேர்க்கிறார். அண்மையில் நான் சபை காலங்கள் கூர்நுனிக் கோபுரம் என்றழைக்கப்படும் பெரிய கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ளதாக காண்பித்தது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் மேல் தலைக்கல் வைக்கப்படவில்லை. லூத்தரன்கள் எவ்விதம் வந்தனர், அதன் பிறகு வெஸ்லீக்கள் சிறுபான்மையோர்; பிறகு பெந்தெகொஸ்தேயினர். இப்பொழுது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்தார்? அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து லூத்தரன்களை உண்டாக்கினார்; அவர் லூத்தரன்களிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து வெஸ்லியன்களை உண்டாக்கினார்; அவர் அதிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து பெந்தெகொஸ்தேயினரை உண்டாக்கினார்; இப்பொழுது அவர் பெந்தெகொஸ்தேயினரிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து தலைக் கல் அதற்குள் வரும்படி செய்கிறார். அதே விதமான ஊழியம் அங்கு உண்டாகி, அவருடைய பிள்ளைகளை எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் எல்லா துறைகளிலிருந்தும் அழைத்துக் கொண்டிருக்கிறது. 99அவர் என்ன செய்தார்? அவர்களுக்கு உண்மையான போதகரை, அவருடைய வார்த்தையாகிய வேதத்தில் நிலைத்திருக்கும் உண்மையான தீர்க்கதரிசியை அளித்தார். “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவிகொடுக்கிறது” என்றார், இயேசு. அது அப்பொழுது அவருடைய சத்தமாக இருந்தால், அது இப்பொழுதும் அவருடைய சத்தமாக இருக்க வேண்டும். அந்த சத்தத்துக்கு முரணான எதுவுமே ஆடுகளின் ஆகாரம் அல்ல. ஆடுகள் அவைகளுக்குப் பின் செல்வதில்லை. ஓ; சகோதரனே, கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும்; அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்து ஒன்று கூடுகின்றனர். “நாம் ராஜாவுடன் அவருடைய விருந்தாளிகளாக விருந்துண்போம். இந்த யாத்திரீகர்கள் எவ்வளவாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! தெய்வீக அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய முகத்தை அவர்கள் நோக்கிக் கொண்டிருந்து, அவருடைய கிருபையின் ஆசீர்வாதங்களில் பங்கு கொண்டு அவருடைய கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிப்பார்கள். இயேசு சீக்கிரம் வருகிறார். அப்பொழுது நமது போராட்டங்கள் முடிவு பெறும்“. (அல்லேலூயா!) “பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக நமது கர்த்தர் இந்த நேரத்தில் வருவாரானால், அது உனக்கு மகிழ்ச்சியை அளிக்குமா? அல்லது துயரத்தையும் நம்பிக்கையின்மையும் அளிக்குமா? நமது கர்த்தர் மகிமையில் வரும்போது, நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம்“. (அல்லேலூயா!) ஆம், ஐயா. 100அது என்ன? உண்மையான சபைக்கு தேவனால் அனுப்பப்பட்ட போதகர், வார்த்தையில் நிலைத்து நின்று, ஸ்தாபனம் என்ன கூறின போதிலும், அதிலிருந்து ஒரு அணுவும் பிசகாமல் இருப்பவர். தீர்க்கதரிசிகளுக்கு ஸ்தாபனங்களுடன் தொடர்பு கிடையாது; பாவனையாக விசுவாசித்து தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுபவர் அல்ல, ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டுள்ள உண்மையான தீர்க்கதரிசி, ஒவ்வொரு முறையும் அது பிழையின்றி நிறைவேறும். அதை தான் அவர் தமது சபைக்கு அனுப்பியுள்ளார். அதை தான் அவர் செய்வதாக வாக்களித்தார். வார்த்தையை விசுவாசிப்பவன், கோட்பாடுகளையோ கொள்கைகளையோ அல்ல, வார்த்தையை அவ்விதம் செய்வதன் மூலம் அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி அவரை வெளிப்படுத்திக் காண்பித்து, அவர் ஒருகாலத்தில் வாழ்ந்த அதே வாழ்க்கையை மறுபடியும் வாழச் செய்து தமது வார்த்தையை, நிறைவேற்றுகிறார். ஓ, என்னே! 101கூர்ந்து கவனியுங்கள். “தேவனுடைய ராஜ்யம் வல்லமையாக்கப்பட்ட அவருடைய வார்த்தை” என்று 1கொரி. 4:20 உரைக்கிறது. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது 1கொரி. 4:20. தேவனுடைய ராஜ்யம் என்பது வல்லமையாக்கப்பட்ட அவருடைய வார்த்தை. தேவனுடைய ராஜ்யம் என்பது என்ன? அது உங்களுக்குள் இருக்கும் ஒன்று. அந்த ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. வார்த்தை அங்கு வரும்போது, இந்த வார்த்தை என்னவாகிறது?அது வல்லமையுள்ளதாய் மாறி, அது என்ன உரைத்ததோ அதையே உரைக்கும்படி செய்கிறது. நீங்கள், “அது இதை உரைக்கிறது, அதை உரைக்கிறது” என்று சொல்லி, அது கிரியை செய்யும்படி செய்ய முடியாது. அது என்ன உரைத்துள்ளதோ அதையே நீங்களும் உரைக்க வேண்டும். அது அறிக்கை செய்தலாகிவிடுகிறது. நீங்கள், “இதை இங்கு சிறிது மெருகேற்றினால், எனக்கு ஞானம் உள்ளதாக கருதப்பட்டு, என் நிலை இங்கு உயர்ந்துவிடும்”, என்று சொல்லக் கூடாது. வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். பார்த்தீர்களா, பாருங்கள். அது அதை வல்லமையுள்ளதாகச் செய்கிறது. “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். இயேசு யோவான்: 14:12-ல், ”நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் இல்லை, மன்னிக்கவும், அதுவல்ல அவர் அந்த வசனத்தில் கூறினது, அவர், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்” என்றார். 102அது என்ன? நீங்கள் வார்த்தையுடன் ஒன்றுபட்டு, மற்றவைகளுக்கு மரித்தவர்களாய் இருக்க வேண்டும். நண்பர்களே, இதை கூற நான் ஏவப்படுகிறேன். நம்மில் அநேகர் நாம் பொய் சொல்ல விரும்பாத அளவுக்கு, திருட விரும்பாத அளவுக்கு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடாத அளவுக்கு, போதிய பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம். ஆனால் தேவன் தமது சபையின் ஒவ்வொரு தசை நாரையும் நிரப்ப விரும்புகிறார். அவர் உங்கள் சிந்தனையை, உங்கள் மனதை நிரப்ப விரும்புகிறார். அவர் உங்கள் ஒவ்வொரு பாகத்தையும் நிரப்பி, நீங்கள் முழுவதுமாக உங்களுக்கும் சிந்தனைகளுக்கும் மரித்து உங்களை தேவனிடம் பரிபூரணமாக ஒப்புவித்து, அவருடைய வார்த்தை உங்கள் மூலம் ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். நீங்கள் தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்களாய், அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பீர்களானால், அதுவே ஜீவன். “என் வசனம் ஜீவனாயிருக்கிறது” என்றார், இயேசு (யோவான்: 6:63). அவர் அவர்களுக்கு வேதாகமத்தை விசுவாசிக்கும் போதகர்களை, சத்தியத்தை உரைக்கும் தீர்க்கதரிசிகளை அளித்து வந்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசனம் உரைத்து வந்துள்ளனர். அவர் என்ன செய்தார்? அவர் அவர்களுடைய மத்தியில் தம்மை உயிருள்ளவராகக் காண்பித்து, தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய வார்த்தையை. தேவனுடைய ராஜ்யம் என்பது வல்லமையாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. 103இந்த ஸ்தாபனங்கள் மனித யோசனைகளின் மேல் சார்ந்துள்ளன, மனித யோசனைகளின் மேல்... இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர்கள்... நாம் மனித யோசனைகளின் மேல் சார்ந்திருக்கக் கூடாது. நீதிமொழிகள்: 3-ம் அதிகாரம் 3-ம் வசனம், “உன் சுயபுத்தியின் மேல் சாயாதே என்கிறது. தேவனுடைய வார்த்தை எவ்விதமாக உங்களுக்கு காணப்பட்டாலும், அப்படி செய்யாதீர்கள். நீங்கள், “அது இந்த விதமாகத்தான் இருக்க வேண்டும் என்பது போல் காணப்படுகிறது” எனலாம். அது அந்த விதமாக அல்ல. அது தேவனுடைய வார்த்தை. அவர் எவ்விதம் அதை கூறியுள்ளாரோ, அவ்விதமாகவே அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏவாள் சொன்னாள்... சாத்தான் ஏவாளிடம், “தேவன் அவ்விதம் கூறினாரென்று எனக்குத் தெரியும். ஆனால் அதன் அர்த்தம் அதுவல்ல, இதுதான் அதன் அர்த்தம்” என்றான். அவள் அதை விசுவாசித்தாள். அது ஒன்றாயிருத்தலை முறித்துப் போட்டது, ஐக்கியத்தை முறித்துப் போட்டது. இணைப்பை முறித்துப் போட்டது. உலகத்தை முறித்துப் போட்டது. ஜீவனை முறித்துப் போட்டது. எல்லாவற்றையும் முறித்துப் போட்டது. ஒருவன் தேவனுடைய வார்த்தையில் ஒன்றை அவிசுவாசித்தால், அது முழு ஐக்கியத்தையும் எல்லாவற்றையும் முறித்துப் போடும். உண்மை! ஒன்று நாம் விசுவாசிக்க வேண்டும், அல்லது நாம் விசுவாசிக்காமல் இருக்க வேண்டும். நாம் வார்த்தையில் நிலைத்திருப்போம்! தேவன் அவ்விதம் கூறினார், அதில் நாம் நிலைத்திருப்போம். ஏற்கனவே நேரமாகிவிட்டது. எனவே அநேக காரியங்களை நான் இங்கு விட்டுவிட வேண்டியதாயுள்ளது. 104கடந்த காலங்களைப் போல, கடந்த காலங்களில் மனிதர் இதைச் செய்த போது, அது உலகத்தின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது. பாபேல் கோபுரம், மற்றும் காயீனின் குமாரத்திகளும் சேத்தின் குமாரரும் இணைதல், நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது. அது எப்பொழுதுமே உலகத்துக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருகிறது. பாருங்கள்? ஓ, அவருடன் உண்மையில் ஒன்றாயிருத்தலைப் பெற்றுள்ளோர், நோவாவும் அவனுடைய வீட்டாரும் உயர எழும்பினது போல, இவர்களும் நியாயத்தீர்ப்பின் போது உயர எழும்புவர். நீதிமானாகிய நோவாவும் அவனுடைய வீட்டாரும் நியாயத்தீர்ப்புக்கு மேலே சென்றனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் சென்றனர்... சகோ. லீவேயில், நீங்கள் புரிந்து கொண்டால், இதோ அது. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. சபை நியாயத்தீர்ப்பில் செல்லும் என்று அவர் விசுவாசிக்கிறார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதை நான் விசுவாசிப்பதில்லை. நோவா எந்த நியாயத்தீர்ப்பிலும் செல்லவில்லை, அவன் நியாயத்தீர்ப்பின் மேல் சென்றான். ஆபிரகாமுக்கு அக்கினி நேரிடவில்லை, அவன் அக்கினிக்கு வெளியே இருந்தான். இஸ்ரவேலர் நியாயத்தீர்ப்பில் செல்லவில்லை, அவர்கள் அக்கினியிலிருந்து நியாயத்தீர்ப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு சபையும் பரிசுத்த ஆவியின் பேழைக்குள் பிரவேசித்து, நியாயத்தீர்ப்புக்கு மேலே சென்று, பூமியிலிருந்து உயர எடுத்தக் கொள்ளப்படும். 105சபைகளின் ஆலோசனை சங்கம் என்பது இவ்வுலகில் புத்தியில்லாத கன்னிகைகளின் அசைவேயன்றி வேறல்ல. அவர்கள் இப்பூமியில் கைவிடப்பட்டு அந்திக் கிறிஸ்துவின் உபத்திரவத்துக்கு ஆளாவார்கள். ஆனால் உண்மையான தேவனுடைய சபையோ நோவாவைப் போல் மிதந்து, நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக மகிமைக்குள் பிரவேசிப்பார்கள். ஆகையால் தான் அவர் அவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் தான் சத்தம் இன்று பேசிக் கொண்டிருக்கிறது. அதைதான் தேவன் இன்று செய்து கொண்டிருக்கிறார். அவர் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து ஒருவர். பிலதெல்பியாவிலிருந்து ஒருவர், ஜார்ஜியாவிலிருந்து ஒருவர், இப்படியாக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க சித்தம் கொண்டவர்களை கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். “நோவாவின் காலத்தில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். அப்பொழுது சொற்ப பேர் மாத்திரம் இரட்சிக்கப்பட்டனர், சொற்ப பேர் மாத்திரமே”. சரி, நம்முடைய பரிசுத்தஆவி என்னும் பேழை தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு மேல் மிதக்கும். ஏனெனில் நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டதாக அறிக்கையிட்டு, அவர் நம்முடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டதால், நாம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டோம். 106இந்த ஸ்தாபனங்கள் மிகவும் அடங்காதவை (headstrong). அவர்கள் ஏவாளைப் போலிருக்கின்றனர். தேவனுடைய வார்த்தை என்ன கூறின போதிலும், அவள் அறிவைப் பெற விரும்பினாள். வேதம் என்ன கூறின போதிலும், நிம்ரோத் அவன் கோபுரத்தை பெற விரும்பினான். அவர்கள் அடங்காதவர்கள். ஏவாளுக்கு அதை செய்யக் கூடாதென்று நன்றாகத் தெரியும். அந்த அழகிய பெண்களைக் கண்டு மயங்கக் கூடாதென்று சேத்தின் குமாரர் அறிந்திருந்தனர். அந்த விபச்சாரத்திற்கு புறம்பே இருக்க வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்கள் நன்கு அறிந்திருந்தனர். அவ்வாறே நீங்களும் அறிந்திருக்கிறீர்கள்! ஆனால் வேதம் என்ன கூறினாலும், சிலர் அடங்காதவர்களாய் உள்ளனர்! “தேவனுக்கு ஸ்தோத்திரம், என் தாயார் ஒரு பிரஸ்பிடேரியன்! நானும் பிரஸ்பிடேரியனாக இருப்பேன்”, நீ தொடர்ந்து செல். நீ கேளாவிட்டால், அது ஒன்றைத்தான் உன்னால் செய்ய முடியும். தேவன் உன் பாவமுள்ள ஆத்துமாவின் மேல் இரக்கமுள்ளவராய் இருப்பாராக. அது சத்தியம் என்று அறிந்துள்ள போது, எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? நீ தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தும், அது சத்தியம் என்று நினைக்காவிட்டால், உன் ஆவியின் பகுத்தறிதலில் ஏதோ தவறுண்டு. அது முற்றிலும் உண்மை. நாடு முழுவதிலும் இவை சம்பவித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், நண்பர்களே. நாம் சபை காலங்களைக் குறித்து சற்று முன்புதான் சிந்தித்து, லவோதிக்கேயா சபையின் காலத்தில் என்ன நேரிடுமென்பதைக் கண்டோம் அல்லவா? சற்று முன்பு தான். அதை கண்டோம் அல்லவா? நான் கூறுவதன் அர்த்தம் என்னவென்று விளங்குகிறதா? நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 107தேவன் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கிறார். அவர் தமது தூதர்களை அனுப்பிக் கூட்டிச் சேர்ப்பார் என்பதாக கூறியுள்ளார். அது சரியா? அவர்களை, களைகளிலிருந்து பிரித்தெடுத்து, கூட்டிச் சேர்ப்பார். ஆமென். களைகள் சுட்டெரிக்கப்படும், கோதுமை அல்ல. அது உண்மை. அவர்கள் மிகவும் அடங்காதவர்களாய் உள்ளனர். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டாலும், பெறாமல் போனாலும், அவர்களுக்கு ஒரு வித்தியாசமுமில்லை. ஓ. ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவர்களை விட்டுப் பிரிந்து வரும்படி கட்டளை பெற்றுள்ளனர். “அவர்களை விட்டுப் பிரிந்து வாருங்கள்” என்றார் தேவன். “அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். அவர்களுடைய உலகப் பிரகாரமான காரியங்களைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், தேவனாயிருப்பேன். நீங்கள் என் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருங்கள், அதை விட்டு வெளியே வாருங்கள்” என்கிறார். நீங்கள் உலகத்தை விட்டுப் பிரிந்து வர வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் உங்களுடன் இணைய விரும்புகிறார். மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த ஸ்தாபனத் திட்டமும், மனிதனால் உண்டாக்கப்பட்ட தத்துவங்களும் நிற்காது. உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியே உங்களை தேவனுடன் இணைக்க முடியும். பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுள்ளதாக எவ்விதம் அறிந்து கொள்வீர்கள்? வார்த்தையை எழுதின பரிசுத்த ஆவி ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று சாட்சி பகரும். பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி செய்த அதே காரியங்களை, புதிய ஏற்பாட்டில் செய்தது. இப்பொழுதும் செய்யும். ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். நீங்கள் ஸ்தாபனங்களுடனும் உலகத்துடனும் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. அவைகளுடன் நீங்கள் நுகத்தில் பிணைக்கப்படாமல், அவைகளை விட்டு வெளியே வாருங்கள்! நீங்கள் கிறிஸ்துவுடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆமென். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன், நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். 108கடைசி நாட்களில் வேறொரு பாபேல் கோபுரமாகிய சபைகள் உண்டாயிருக்கும் என்றும் வேதம் கூறுகிறது. அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, தேவனுடைய வார்த்தையையும், வல்லமையையும் அவருடைய வார்த்தையின் வல்லமையை மறுதலிக்கிறவர்களாயிருப்பார்கள். வார்த்தை என்பது என்ன? தேவனுடைய ராஜ்யம் என்பது என்ன? நாம் ராஜாவின் பிரஜைகளாயிருக்க, அந்த ராஜ்யத்தை சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும். எத்தனை பேருக்கு அது தெரியும்? தெரிந்தவர்கள், “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). நீங்கள் எவ்விதம் அந்த ராஜ்யத்தில் பிரவேசிக்கிறீர்கள்? தேவனுடைய ராஜ்யம் என்பது வல்லமையாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. (ஆமென்). வல்லமையாக்கப்பட்டது; பாவத்தைப் போக்கி அடையாளங்களைத் தருகிறது. எவ்விதமான அடையாளம்? அது மோசேயை வெளியே கொண்டு வந்த அதே வார்த்தையாயிருக்குமானால், அது அதே அடையாளத்தை அளிப்பதாயிருக்கும். வெதுவெதுப்பான லோத்தைப் பிரித்த அதே அடையாளம். லோத்து வெதுவெதுப்பானவன் என்று நமக்குமத் தெரியும். அதுவே முடிவு காலத்தின் அடையாளமாயிருக்கும் என்று இயேசு கூறினார். லோத்து அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான், அவன் பக்தியுள்ளவன், நிச்சயமாக, அவனும் அவனுடைய மனைவியும். அவர்கள் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்களாயிருந்தனர். அவன் நகரத் தலைவராயிருந்தான். ஓ, அநேக காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அவன் மிகுந்த பக்தியுள்ளவன். அவன் சுவிசேஷகரையும் அங்கு வந்த மற்றவர்களையும் உபசரித்தான். அந்த விதத்தில் அவன் நல்லவனாயிருந்தான். ஆனால், ஓ, சகோதரனே, அவன் தெரிந்து கொள்ளப்படவில்லை. 109என்ன நடந்ததென்று பாருங்கள்! ஏன்? ஆபிரகாமைப் பிரித்து அவனிடம் வந்த அதே தேவன், அவனுடைய பிரிவை அடையாளத்தின் மூலம் உறுதிப்படுத்தினார்... உம்! ஓ, தேவனே! அதை நீங்கள் புரிந்து கொள்ள என்னால் ஏதாவதொன்றை செய்யக் கூடுமானால் எவ்வளவு நலமாயிருக்கும் தேவன் ஆபிரகாமுக்குக் காண்பித்தார். அவன் பிரிந்து வந்ததனால், அதற்கான அடையாளத்தை அவர் காண்பித்து, அவர் அவனுடன் அவன் மத்தியில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினார். கடைசி நாளில் அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். ஆபிரகாம் ஒரு பெரிய ஜாதியாயிருக்கவில்லை. அவன் சிறுபான்மையாக இருந்தான். ஆனால் தேவன் அவனோடு கூட இருந்தார். அவர் அவனை அப்பொழுது பிரித்தெடுத்தார். நாமும் கூட இந்தக் கடைசி நாட்களில் நம்மை பிரித்துக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். தேவன் மோசேக்கு, இஸ்ரவேலருக்கு, அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியை, அக்கினி ஸ்தம்பத்தை அடையாளமாகக் கொடுத்தார். அவர் ஆபிரகாமுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர் இஸ்ரேவலருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அவர் சீஷர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும், அதே அடையாளம்! அதே அடையாளம், அக்கினி ஸ்தம்பம்! பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில், அவனுக்கு முன்னால் அக்கினி ஸ்தம்பம் பிரகாசித்து, அவனுடைய கண்களைக் குருடாக்கி, அவனைக் கீழே தள்ளிற்று. அதை வேறொருவரும் காணவில்லை. சுற்றிலும் நின்று கொண்டிருந்த ஒருவரும் அதைக் காணவில்லை. அப்பொழுது ஒரு சத்தம், “சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அவர், “நான் இயேசு” என்றார். ஒரு அடையாளம்! அவன் யார்? புறஜாதிகளுக்கு அப்போஸ்தலன், ஆமென். 110நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், நாம் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் வந்திருக்கிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அந்த எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஆயத்தப்படுத்திக் கொண்டு... நம்முடைய ஒவ்வொரு தசை நாரும் பரிசுத்த ஆவியினால் நிரையப்படும் வரைக்கும் சில நிமிடங்கள் உறுதியாய் நிலைத்திருக்கிறோம். அதன் பிறகு சபை மேலே செல்லும். ஓ, என்னே! தம்முடைய ஜனங்களை ஒருமித்து தம்மிடம் அழைத்து, அவருடன் உண்மையான ஒன்றாயிருத்தலைப் பெறுதல். ஏனெனில் அது அவருடைய ஒரே பரிசுத்த ஆவி, “ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் (தனித் தனியாக) ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, மொத்தமாக இயேசு கிறிஸ்துவின் சரீரமாகின்றோம். இயேசு கிறிஸ்து தமது ஆவியினால் நமது மாம்சத்தில் வாசம் செய்து, சபைக்கு சேவை செய்து, அவர் முன்பு செய்த அதே கிரியைகளைச் செய்து. நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்றும் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்றும் உலகத்துக்கு அந்த அடையாளத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அல்லவா? 111இங்கு என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. நான் இன்னும் நீட்டிக் கொண்டு போக முடியாது. அதிக தாமதமாகிவிட்டது. வேறொரு சமயம் அதை பார்க்கலாம். நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். ஒன்றாயிருத்தல்... நீங்கள் தேவனுடன் ஒன்றாயிருக்கிறீர்களா? அவ்விதம் தான் நீங்கள் இருக்க வேண்டும். ஆம், நாம் அவருடன் ஒன்றாயிருந்து... கிறிஸ்துவில் இருந்த சிந்தையே நம்மில் இருக்க வேண்டும். அப்பொழுது உங்களில் இருக்கும் கிறிஸ்துவின் சிந்தை அவர் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் அடையாளம் கண்டு கொள்ளும். அது அப்போஸ்தலர்களுக்கு அவ்விதம் செய்தது. அது வேத வசனத்தை சரிவர பகுத்து கொடுத்தது. அதாவது சத்தியத்தை பாருங்கள், பரிசுத்த ஆவி அவ்விதம் செய்கிறது. அது சத்தியமாயிருந்தால், அவர் மோசேக்கு அளித்த அதே அடையாளத்தை, ஆபிரகாமுக்கு அளித்த அதே அடையாளத்தை, கிறிஸ்துவின் மூலம் அவர் செய்த அதே அடையாளத்தை, பவுலின் மூலம் அவர் செய்த அதே அடையாளத்தை, மீண்டும் அளித்து அது உண்மையென்று சாட்சி பகருவார். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். சபையானது ஒன்று இங்கும், ஒன்று அங்குமாக கூட்டிச் சேர்க்கப்பட்டு, ஒருமித்து இணைப்பில் பிரவேசிக்கிறது. அவர், “இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், நான் ஒருவனை ஏற்றுக் கொள்வேன்” என்றார். ஒருவனை, கவனியுங்கள், வயலில் இருவர். அது பகல் நேரம், அறுவடை. “நான் ஒருவனை ஏற்றுக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன். இரண்டு பேர் 'படுக்கையில்' இருப்பார்கள். அது உலகின் மறுபாகம். நான் ஒருவனை ஏற்றுக் கொள்வேன். மற்றவனைக் கைவிடுவேன்”. மனுஷ குமாரனின் வருகையின் போது, அது மிகவும் சமீபமாயுள்ளது. 112வேண்டாம்! ஆதாமே, வேண்டாம் ஆதாமே! ஏவாளே, ஆதாமே, பிசாசின் பொய்க்கு இனிமேல் செவி கொடுக்காதீர்கள் என்று உங்களிடம் மன்றாடுகிறேன். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அவருடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். அதிலிருந்து பிரிந்து செல்லுதல் நீங்கள் தேவனுடன் கொண்டுள்ள ஐக்கியத்தை முறித்து விடும், பரிசுத்த ஆவியின் மூலம் தேவனுடன் ஒன்றாயிருத்தலை, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக கூறிக் கொண்டு வார்த்தையுடன் இணங்காமல் போனால், நீங்கள் தேவனுடன் ஒன்றாயிருத்தலை பெற்றிருக்கவில்லை. இது தான் தேவனுடன் ஒன்றாயிருத்தல். அதாவது நீங்கள் பெற்றுள்ள பரிசுத்த ஆவி இந்த வார்த்தையுடன் இணங்கி, இந்த வார்த்தையை வெளிப்படுத்தி, முன்பு செய்த கிரியைகளையே அது செய்யத் தக்கதாக இந்த வார்த்தையை வல்லமையுள்ளதாகச் செய்யும்போது. இதை நாம் ஒன்று சேர்ந்து கூறுவோம். தேவனுடன் (சபையோர் “தேவனுடன்” என்கின்றனர் - ஆசி) ஒன்றாயிருத்தல் என்பது (“ஒன்றாயிருத்தல் என்பது”) தேவனுடைய ஆவியை (“தேவனுடைய ஆவியை”) உங்களுக்குள் (“உங்களுக்குள்”) பெற்றிருந்து (“பெற்றிருந்து”), அது வார்த்தையுடன் (“அது வார்த்தையுடன்”), எல்லா வார்த்தையுடன் (“எல்லா வார்த்தையுடன்”) முழு வார்த்தையுடன் (“முழு வார்த்தையுடன்”) இணங்கி (“இணங்கி”) அதை வல்லமையுடன் (“அதை வல்லமையுடன்”) வெளிப்படச் செய்வதே (“வெளிப்படச் செய்வதே”). பார்த்தீர்களா, அது தான் தேவனுடன் ஒன்றாயிருத்தல். அந்த வல்லமை என்னில் கிரியை செய்யும் போது, உங்களில் கிரியை செய்யும் போது, நாம் ஒன்றாயிருக்கிறோம். ஆமென்! சகோ. கிட், என்னில் உள்ள பரிசுத்த ஆவியின் வல்லமை, உங்களில் கிரியை செய்யும்போது, நமக்குள் எந்த வேறுபாடும் கிடையாது, வார்த்தை அங்குள்ளது. அது கிரியை செய்கிறது, தேவன் தம்முடைய வார்த்யிைனால் உங்களில் மாம்சமாதல். வார்த்தையானது உங்கள் நடுவில் வல்லமையாக்கப்படுதல், ஒவ்வொரு வார்த்தையும். 113இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், பிசாசானவன் ஏறக்குறைய அந்த முழு வார்த்தையும் ஏற்றுக் கொள்வான், தொண்ணூற்றொன்பது சதவிகிதம், மீதியுள்ள ஒரு சதவிகிதத்திலும் நூறில் தொண்ணூற்றொன்பது பாகத்தையும் அவன் உண்மையென்று ஏற்றுக் கொள்வான். ஆனால் அவன் இங்கே தாவிவிடுவான், அது தான் அங்கேயே மரணத்தை விளைவிக்கிறது. அது சங்கிலியை நடுவில் உடைத்து விடுகிறது. நீங்கள் கீழே விழுகிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையும்! இயேசு என்ன கூறினார்? “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்றார். தேவனுடைய சில வார்த்தைகளைக் கொண்டு அவன் பிழைப்பான் என்றல்ல, தேவனுடைய வார்த்தையின் தொண்ணூற்றொன்பது நூறில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் வார்த்தையினால் என்றல்ல, ஆனால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் பிழைப்பான். சாத்தான் இயேசுவை மலையின் மேல் கொண்டு சென்று, “எழுதியிருக்கிறதோ”, என்றான். பாருங்கள், அவன் ஏவாளிடம் “எழுதியிருக்கிறதே”, “எழுதியிருக்கிறதே” என்று கூறினது போல. இயேசு, “இப்படியும் எழுதியிருக்கிறதே...” என்றார். அவன், “'உம்மைக் காக்கும்படிக்கு தூதர்களுக்குக் கட்டளையிடுவார், என்று எழுதியிருக்கிறதே” என்றான். அவன் அறிவாளி. “உம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போக அவர் தூதர்களுக்கு கட்டளையிடுவார்” என்று எழுதியிருக்கிறதே. அவர், “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாரா திருப்பாயாக” என்றும் எழுதியிருக்கிறதே என்றார். 114அவர்கள், “எங்களிடம் வேத வசனம் உண்டு”. அப்போஸ்தலர்: 19, “நாங்கள் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றோம்” என்றனர். பவுலிடம் வேறொன்று இருந்தது. அவன், “அது இனி ஒருபோதும் கிரியை செய்யாது”. பாருங்கள்? “யோவான் உங்களுக்கு...” அவன் யோவானின் வார்த்தையை அவிசுவாசிக்கவில்லை. அவன், “யோவான் என்ன கூறினான் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அவன் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை உங்களுக்குக் கொடுத்தான், பாவ மன்னிப்புக்கென்றல்ல” என்றான். பலியானது அப்பொழுது செலுத்தப்படவில்லை, பாருங்கள். அவன், “வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான்” என்றான். அதை கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். வார்த்தையில் முழுவதுமாய் நிறைந்திருந்த பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்து, அந்நியபாஷை பேசி, தேவனை மகிமைப்படுத்தினர். என்ன ஒரு தருணம்! ஓ, என்னே! அந்த சபை எவ்வளவு பெரியது? பன்னிரண்டு பேர் கொண்டது. ஆம். ஓ, தேவன் பெரிய எண்ணிக்கையில் ஈடுபடுபவர் அல்ல. அவர் உத்தமமுள்ள இருதயங்களுடன் ஈடுபடுகிறார். அந்த விதமான இருதயத்தை நாம் பெற்றிருப்போமாக. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? நாம் ஜெபம் செய்வோம். 115ஓ, என்அருமையான சஞ்சாரியே, நீ மோவாபின் குமாரத்திகளை அல்லது காயீனின் குமாரத்திகளை கண்டாயா? (நான் சபைகளைக் குறிப்பிடுகிறேன்). அவர்கள் எவ்வளவாக வார்த்தையை விட்டு அகன்று சென்றுவிட்டனர்! என் விலையேறப்பெற்ற நண்பனே, கடைசி நாட்களில் இவை சம்பவிக்க வேண்டும் என்பதை கவனித்தாயா? தேவனுடைய வார்த்தை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அண்மையில் நீ கவனித்தாயா? ஒரு காலத்தில் உண்டாயிருந்த எழுப்புதல் இப்பொழுது அமைதியாகிவிட்டது. இப்பொழுது அதிகம் காணப்படுவதில்லை என்பதை கவனித்தாயா? அது என்ன? புயல் வருவதற்கு முன்பு அமைதி. நியாயத்தீர்ப்பு விழ ஆயத்தமாயுள்ளது. இவைகளை நீ கவனித்துக் கொண்டு வருகிறாயா? நீ வேத வசனங்களை, வேதாகமத்தில் உள்ள வசனங்களை, அத்தாட்சிகளை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தாயா? கடைசி காலத்தில் பிசாசு... என்னும் இயேசுவின் வார்த்தையை ஒப்பிட்டுப் பார்த்தாயா? அது உண்மையானதைப் போல் மிகவும் நெருங்கியிருந்தது. கூடுமானால் அவன் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தவிர, மற்றெல்லாரையும் வஞ்சிப்பான். அதை சற்று யோசித்து பார், வேத போதனை அவ்வளவு நெருங்கியிருக்கும் “ஓ, நாங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறோம், தேவனுக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரம். நாங்கள் அந்நிய பாஷை பேசுகிறோம்” என்று கூறிவிட்டு, வார்த்தையை மறுதலிக்கின்றனர். ஆம், பாருங்கள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்... 116தேவனுடன் சரியாயிராத யாராகிலும் இங்கிருந்தால், வியாதியாயுள்ள அல்லது அவதியுற்ற யாராகிலும் இங்கிருந்தால்... இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. நான் அவைகளின் மேல் கை வைத்து ஜெபிக்கப் போகின்றேன். உங்கள் தேவை எதுவாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உனக்குச் சொந்தமானது. அது உன்னுடையது. இப்பொழுது, நான் வார்த்தையை உங்களிடம் கொண்டு வந்தேன். நான் ஆதியாகமம் தொடங்கி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாள் வரைக்கும் அதை கொண்டு வந்து. சில பாகங்களை வலியுறுத்தி உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளைத் தவிர வேதத்திலுள்ள இன்னும் அநேக பாகங்களை உங்களுக்குக் காண்பித்திருக்க முடியும், எனக்கு நேரமில்லை. ஆனால் நிச்சயமாக, இந்த ஸ்தாபனங்கள் தள்ளப்பட்டுவிட்டன என்பதை நான் காண்பித்த பாகங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது பிசாசின் தவறான கருத்து, மனிதருடைய சுய சிந்தனையையும் யோசனைகளையும் கொண்டு ஸ்தாபனம் உண்டாக்க முனைவது. பரிசுத்த ஆவியின் மூலமாக மாத்திரமே நாம் தேவனுடன் இணைக்கப்பட்டு ஒன்றாகிறோம். பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையுடன் இணங்குகிறார். பாருங்கள், வேதம் கூறுகிறது. இயேசு கூறினார், அவர்கள் அதை அறிக்கை கூட செய்வார்கள் என்று, பாருங்கள். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்”. நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் கண்டீர்களா? 117அந்த விசுவாசம் என்னும் கரத்தில் இந்த தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று காலையில் உங்கள் தேவை என்ன? உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் தேவையா? குளம் திறந்திருக்கிறது. உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவையா? அவர் உங்களுக்குள் வருவதற்காக நெருக்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு சுகம் தேவையா? ஏன், பரிசுத்த ஆவியானவர் தாமே, வல்லமையாக்கப்பட்ட வார்த்தை தாமே, இப்பொழுது இங்கிருக்கிறார், அந்த பகுத்தறிதலின் வல்லமை. கூட்டத்திலுள்ளவர்களை பார்த்துக் கொண்டிருந்த போது. அந்த ஒளி ஜொலித்துக் கொண்டு சுழன்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். நான் தவறான எதையாகிலும் எப்பொழுதாகிலும் உங்களிடம் உரைத்ததுண்டா? (சபையோர் “இல்லை” என்கின்றனர் - ஆசி). நான் எப்பொழுதாகிலும்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ராஜாவை பெற்றுக் கொள்வதற்கு முன்பு, தீர்க்கதரிசி அவர்களிடம், “நான் உங்களிடம் உரைத்தது ஏதாகிலும்... உங்கள் பணத்தை நான் எப்பொழுதாவது அபகரித்ததுண்டா? நான் எப்பொழுதாவது உங்களிடம் பணம் கேட்டதுண்டா? நான் பெரிய மாளிகைகளில் வாழ்ந்து, பெரிய கட்டிடங்களைக் கட்டி, அதற்காக உங்களிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டதுண்டா? நான் எப்பொழுதாவது உங்களிடம் ஒரு பைசாவாகிலும் கேட்டதுண்டா?” என்று கேட்டான். அவர்கள் “இல்லை” என்றனர். நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்த எதையாகிலும் தேவன் நிறைவேற்றாமல் இருந்ததுண்டா? அவருடைய நாமத்தில் நான் உரைத்த ஏதாகிலும் நான் உரைத்தவாறே நிறைவேறாமல் போனதுண்டா? நான் கூட்டத்தினரின் நடுவில் தரிசனம் கண்டு ஒரு நபரைக் குறித்து உரைத்த எதாகிலும், அந்த நபர் எழுந்திருந்து, அது யாராயிருந்தாலும், ஒரு அந்நியனாயிருந்தாலும், “அது உண்மை” என்று கூறாத ஒரு தருணம் இருந்ததுண்டா? நான் தவறான எதையாகிலும் உங்களிடம் உரைத்ததுண்டா? (சபையோர் “இல்லை” என்கின்றனர் - ஆசி). அப்படியானால் இப்பொழுது உங்களிடம் கூறுகிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த ஆவி தேவனுடைய வார்த்தையை விசுவாசம் என்னும் கரங்களில் எடுத்து முன்னே செல்லும். முழு ராஜ்யமும் உங்களுக்குச் சொந்தமானது. பிள்ளைகளே, அது உங்களுடையது. 118நீங்கள் ஏன் ஜார்ஜியாவிலிருந்தும், நாடு முழுவதிலிருந்தும். ஓஹையோவிலிருந்தும், கான்ஸாஸிலிருந்தும், எல்லாவிடங்களிலிருந்தும் இந்த சிறு கூட்டத்துக்கு வரவேண்டும்? ஒலிப்பதிவு கருவி அணைக்கப்பட்டுவிட்டதென்று எண்ணுகிறேன், எனவே இதை நான் கூறலாம். பாருங்கள்? நீங்கள் ஏன் இவ்விதம் வரவேண்டும்? இவ்விதம் உங்களைச் செய்யத் தூண்டுவது எது? அது என்ன? இங்கு அர்கன்ஸாவிலிருந்து. நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திலிருந்து வந்துள்ளவர்களைக் காண்கிறேன். பின்னால் நின்று கொண்டிருக்கும் கான்ஸாஸ் நகரத்திலிருந்து வந்துள்ள போலந்து நாட்டு சகோதரன் சென்ற இரவு என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் பேசுவதை அநேக ஆண்டுகட்கு முன்பு கனடாவில் முதன் முறையாக நான் கேட்ட பிறகு, நீங்கள் கண்டவைகளையும் செய்தவைகளையும் நான் முழுவதுமாக பரிசீலனை செய்து பார்த்துவிட்டேன். அவைகளில் ஒன்றுமே தவறல்ல என்றார். அவர் ஒருக்கால் போலந்து நாட்டு கத்தோலிக்க சகோதரராய் இருக்கக் கூடும். அவர் இங்கு வந்து ஒலிநாடாக்களை பதிவு செய்து. வெளியே சென்று அவைகளை மற்றவர்களுக்கு போட்டு, எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னுடன் கூட இருந்து நமக்கு உதவி செய்ய வேண்டிய ஊழியக்காரர்களோ, வல்லமையை மறுதலித்து வார்த்தையின் சத்தியத்தை மறுதலித்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமை கோருகின்றனர்... என்னை நான் தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் தான் அவ்விதம் செய்கிறீர்கள். அது உண்மையானால், தேவனுடைய வார்த்தை எங்கிருந்து வருகிறது? அதை உறுதிப்படுத்த ஒன்று இல்லாமல் போனால், அது உண்மையா இல்லையாவென்று நாம் எவ்விதம் அறிந்து கொள்வது? இது தேவனுடைய வார்த்தை, எழுதப்பட்ட வார்த்தை. எழுதப்பட்ட வார்த்தை உறுதிப்படுமானால், அந்த வார்த்தையிலுள்ள தேவன் அந்த வார்த்தையை உண்மையாக்குகிறார். பவுல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல், நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்றான். 119வியாதி சுகமாக, இரட்சிப்பைப் பெற உங்களுக்கு தேவன் தேவைப்பட்டால்... அல்லது ஏதாவதொன்றைவிட்டு விட விரும்பினால்... ஸ்திரீகளாகிய உங்களில் சிலருக்கு உங்கள் தலைமயிரை நீளமாக வளர்ப்பதற்கு போதிய கிருபை இல்லாமலிருந்தால், மனிதராகிய உங்களில் சிலருக்கு புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதற்கு போதிய கிருபை இல்லாமலிருந்தால், பிரசங்கிமார்களாகிய உங்களில் சிலருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தின் உண்மையை ஏற்றுக்கொள்ள போதிய கிருபை இல்லாமலிருந்தால், உங்களில் சிலர் வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தால், நீங்கள் ஏன் இந்த வார்த்தையை இக்காலையில் ஏற்றுக் கொள்ளக் கூடாது? நான் உங்களுக்கு இப்பொழுது சொல்லுகிறேன், அது நமது மத்தியில் உள்ள மாம்சம்! அந்த வார்த்தையை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சுவற்றில் கர்த்தருடைய தூதனின் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது, இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தினவர், பவுலை சந்தித்தவர், கிறிஸ்துவுக்குள் இருந்தவர் அவரே. அதே பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருந்து கொண்டு உங்களை ஒன்றாக இணைக்கிறார். நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பால் உள்ள நம்முடைய இருதயங்களை இழுத்து; ஒன்று சேர்ப்பது எது? இதைப் போல் ஒன்று நாட்டில் வேறெங்குமில்லை. அவர்கள் வார்த்தையிடம் வந்து கொண்டிருக்கின்றனர். 120“இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு. அந்த வெள்ளத்தில் அவிசுவாசிகள் மூழ்கி தங்கள் பாவக்கறை அனைத்தும் போக்கிக் கொள்கின்றனர். உம் காயங்களிலிருந்து ஓடும் அந்த இரத்த நதியை நான், விசுவாசத்தில் கண்ட முதற்கு, மீட்கும் அன்பே என்னைக் கவர்ந்த விஷயமாய் உள்ளது. என் மரணம் வரைக்கும் அவ்வாறே இருக்கும்”. 121எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு உறுமால்களும் கையுறைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவை அஞ்சல் வழியாக ஒருக்கால் அனுப்பப்படும். இவைகளை யார் இங்கு வைத்ததென்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் பில்லி வைத்திருக்கக் கூடும்; அல்லது கூட்டத்திலுள்ள ஜனங்களாயிருக்கும். கர்த்தாவே, இதை இப்பொழுது செய்ய நான் ஏவப்படுகிறேன். என் கைகளில் ஒன்றுமேயில்லை. மானிடன் என்னும் முறையில் என்னில் ஒன்றுமேயில்லை, என் மானிட சுயபுத்தியின் மேல் நான் சார்ந்திருக்க முடியாது. இது ஏன் இப்படியென்று எனக்குப் புரியவில்லை, ஆனால், “பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து போட, பொல்லாத ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டன என்று நீர் கூறினதை நான் பின்பற்றுகிறேன். பவுல் ஒரு பெரிய மனிதன் என்பதனால் அல்ல”, அது ஏனெனில் தேவன் அவனுடன் கூட வார்த்தையிலும் வல்லமையிலும் இருந்தார். அவன் அப்போஸ்தலர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. ஆனால் அவர்கள் சந்தித்த போது, அவர்கள் அதே சுவிசேஷத்தை, அதே ஞானஸ்நான முறைமையை, இன்னும் மற்றவை அனைத்தையும் அதே விதமாக கைக் கொண்டதை அறிந்து கொண்டனர். 122இப்பொழுதும் கர்த்தாவே, உம்மை விசுவாசிக்கும் இந்த விலையேறப் பெற்ற ஜனங்களை சுகப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, கூட்டத்தில் உள்ளவர்களை சுகப்படுத்துவீராக. அவர்களுடைய விசுவாசம் உயர்த்தப்பட்டு அது இப்பொழுதே அந்த வார்த்தையை பற்றிக் கொண்டு, “கட்டியே, வியாதியே, பொல்லாத ஆவியே, நீ இப்பொழுதே போய்விடு. நான் தேவனுடைய பட்டயத்தைக் கொண்டு வெட்டுகிறேன்! நான் விசுவாசிக்கிறேன்! என் விசுவாசம் பலமுள்ளது. நான் பட்டயத்தை ஆழமாக பதியச் செய்கிறேன். என் வழியிலிருந்து விலகிப் போ! நான் சுகமடைய என் இருக்கையை விட்டு எழுந்திருக்கிறேன்”, என்று கூறுவதாக. “என் கரத்தை என் தகப்பனின் மேல், என் சகோதரியின் மேல் என் பிள்ளையின் மேல், என் அடுத்த வீட்டுக்காரரின் மேல், வைக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன், உமது வசனமே சத்தியம். நான் உம்முடன் ஒன்றாயிருக்கிறேன். நீர் செய்ததாக கூறின கிரியைகளை நாங்களும் செய்வோம். கர்த்தராகிய தேவனே, நான் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். நான் முன்னால் வருகிறேன். அதை உரிமை கோரி இன்று காலையில் அதைப் பெற்றுக் கொள்ள நான் முன்னால் வருகிறேன்”. 123ஓ, தேவனே, சபையானது வனாந்தரத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, சிவந்த சமுத்திரத்தை அடைந்த போது மோசேக்கு சிறிது பயம் உண்டாகி, அவன் கர்த்தரை நோக்கி முறையிட்டது என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது கர்த்தர், “என்னை நோக்கி முறையிடுகிறதென்ன? எதற்காக என்னிடம் முறையிடுகிறாய்? நீ பேசி முன்னே செல்! இந்த வேலைக்கென்று நான் உன்னை தெரிந்து கொள்ளவில்லையா? பேசு!” என்றார். எதை பேசுவது? உனக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தையை. “பேசி முன்னே செல், என்னிடம் முறையிடாதே, முன்னே செல்”. கர்த்தராகிய தேவனே, இன்று நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறேன். விசுவாசம் என்னும் இந்த பட்டயத்தை கையில் ஏந்தினவனாய், பரிசுத்த ஆவியின் மூலம் தேவனும் மனிதனும், உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கங்களையும் தியாக பலியையும் முன்னிட்டு ஒன்றாயிருப்பதை உரிமை கோரி வருகிறேன். இந்தக் கட்டிடத்தில் உள்ளோரை, அது பையனானாலும், பெண்ணானாலும், மனிதனானாலும், ஸ்திரீயானாலும் சரி, ஏதாவது ஒரு விதத்தில் கட்டிப் போட்டுள்ள ஒவ்வொரு பிசாசையும் நான் எதிர்க்கிறேன். ஒவ்வொரு வியாதியையும் நான் எதிர்க்கிறேன். ஒவ்வொரு சந்தேகத்தையும் நான் எதிர்க்கிறேன். ஒவ்வொரு பயத்யுைம் நான் எதிர்க்கிறேன். தேவனுடையதாயிராத அனைத்தையும் நான் எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த கூட்டத்தில் உள்ளோரை விட்டு வெளியே வா! நாங்கள் தேவனுடன் ஒன்றாயிருந்து வியாதியும் பயமும் அற்றவர்களாய் அவரை சேவிக்கும்படி இந்த கூட்டத்தில் உள்ளோரை விட்டு வெளியே வா! தேவனுடன் நம்மை ஒன்றாக்கின வல்லமை தானே... அபிஷேகம் பெற்றுள்ளோரைச் சுற்றிலும் பிசாசு எப்படி கடூரமான சத்தம் எழுப்ப முடியும்? பிசாசு அங்கு நின்று கொண்டு எப்படி கோலியாத்தைப் போல் கடூரமான சத்தம் எழுப்ப முடியும்? தாவீது பாளயத்துக்கு வந்து, “அற்பர்களே, விருத்தசேதனமில்லாத அந்த, பெலிஸ்தியன் ஜீவனுள்ள தேவனின் சேனையை நிந்திக்க நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்?” என்றான். ஓ தேவனே, ஆண்களும் பெண்களும் ஆவியின் வல்லமையில் எழும்பச் செய்வீராக. காலங்கள்தோறும் மானிடவர்க்கத்துக்கு கெடுதல் செய்து வந்த அந்த மனமாற்றமடையாது விசாரமுள்ள பிசாசு தேவனுடைய சபையை எதிர்த்து நிற்க அனுமதிப்பதா? சாத்தானே, வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர்களை விட்டுப் போ! 124பட்டயத்தை கையிலேந்த போதிய பலமுள்ளவர்களே, தேவனுடைய வார்த்தையை உங்கள் சொந்த சொத்தாக உரிமை கோரும் அளவுக்கு நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பதால், உங்களில் யார் தேவனுடைய வார்த்தையை கையில் எடுத்து, விசுவாசம் என்னும் கரத்தினால் அதை பிடித்து, “நான் கர்த்தருடைய பக்கத்தில் இருக்கிறேன். இன்று முதல் நான் தேவனுடன் ஒன்றாயிருப்பேன். வசனமாகிய ஆவியின் பட்டயத்தைக் கையிலேந்தி தேவன் எனக்கு அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தைக் கொண்டும் நான் பிசாசை வெட்டுவேன்” என்று கூற முடியும்? அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மிகவும் உத்தமமாக, என் முழு இருதயத்தோடும் உங்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உண்மையான அர்த்தத்தில் இதை செய்கிறீர்களா? நீங்கள் உத்தமமாக இதை செய்கிறீர்களா? வார்த்தை உங்கள் கரங்களில் உள்ளதா? உங்கள் விசுவாசம் உங்கள் கரமாக உள்ளதா? அப்படியானால், உங்கள் மாம்சக் கரத்தை தேவனிடம் உயர்த்தி, “தேவனே, உயர்த்தப்பட்ட என் கரத்தின் மூலம் என் ஜீவன் முழுவதையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் ஆத்துமாவை, என் சிந்தனையை, எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணிக்கிறேன். பரிசுத்த ஆவி தாமே என் விசுவாசத்தை கையிலெடுத்து எனக்கு இதை அருளுவாராக. எல்லா சந்தேகங்களையும் என்னைவிட்டு அறுத்தெறியும். இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொண்டதை விசுவாசத்தினால் பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லுங்கள், அதை நீங்கள் விசுவாசித்தால், “ஆமென்” என்று இப்பொழுது சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). மறுபடியும் ஆமென், ஆமென், ஆமென், ஆமென்! நீங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் கேட்டுக் கொண்டதை பெற்றுக் கொள்வீர்கள் என்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன், “ஆமென், உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. நெவில்.